Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளா ஐசியூவில் தாலி கட்டிய மணமகன்! விபத்தில் சிக்கிய பெண்ணுக்கான மருத்துவ செலவை ஏற்ற டாக்டர்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் ஆலப்புழாவில் திருமணம் நடைபெற இருந்த நாளில் விபத்தில் சிக்கி ஐசியூவில் சிகிச்சை பெறும் மணப்பெண்ணுக்கு அதே நாளில் மருத்துவமனையில் வைத்து மணப்பெண் தாலி கட்டிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த பெண்ணுக்கான மருத்துவ செலவுகள் முழுக்க தானே ஏற்பதாக ஒரு மருத்துவர் அறிவித்துள்ளதை பார்க்கும் இன்னும் மனிதம் சாகவில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

ஆலப்புழா, தும்போளியைச் சேர்ந்தவர் மனுமோன்- ரஷ்மி தம்பதியின் மகன் ஷரோன். சேர்த்தலா பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக உள்ளார் ஷாரோன்.

Thiruvananthapuram accident

இவருக்கும் கொம்மாடி முத்தலச்சேரியைச் சேர்ந்த ஜெகதீஷ்- ஜோதி தம்பதியின் மகள் ஆவணிக்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது.

ஆவணி, சேர்த்தலாவில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களது திருமணம் 21 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆலப்புழாவில் உள்ள சக்தி திருமண மண்டபத்தில் 12.15 மணி முதல் 12.30 மணிக்குள் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது.

திருமண நாளின் போது மணப்பெண்ணுக்கு மேக்கப் போட உறவினர்கள் காரில் சென்றனர். குமரகம் சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தில் சென்று மோதியது. இதில் காரில் இருந்த அனைவரும் காயமடைந்தனர்.

மணப்பெண் ஆவணிக்கு கை உடைந்து முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கோட்டயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆவணியின் தண்டுவட பகுதியில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில்தான் ஷாரோன் ஒரு முடிவு எடுத்தார். ஆவணிக்கு நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் திருமணம் செய்ய விரும்பினார்.

இதையடுத்து மருத்துவமனையில் மருத்துவர்களுடன் பேசி அனுமதி பெற்றார். இதையடுத்து மருத்துவர்கள் முன்னிலையில் ஐசியூவில் வைத்து ஆவணியின் கழுத்தில் ஷாரோன் தாலி கட்டினார். இதையடுத்து திருமண மண்டபத்தில் குவிந்த உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு திருமண விருந்தும் பரிமாறப்பட்டது.

இந்த நிலையில் புதுமணத் தம்பதிக்கு இன்னொரு நெகிழ்ச்சி சம்பவமும் நடந்துள்ளது. அதாவது இவர்களது திருமணம் வைரலான நிலையில் அந்த பெண்ணின் முழு மருத்துவச் செலவையும் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சையையும் தானே ஏற்றுக் கொள்வதாக மருத்துவர் ஷம்ஷீர் வயலில் என்பவர் அறிவித்துள்ளது மேலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குருவி உட்கார பனம் பழம் விழுந்த கதையாக ஒரு சின்ன சம்பவம் நடந்தாலும் அதற்கு பெண்ணின் ராசி, நட்சத்திரத்தை கணக்கு போடும் இந்த காலத்தில், திருமண நாளன்று விபத்தில் சிக்கிய அந்த பெண், தனக்கு தேவையில்லை என நினைக்காமல் அவரையே திருமணம் செய்து கொண்டார் இந்த ஷாரோன். இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

அது போல் இவர்களது காதலால் நெகிழ்ந்து போன மருத்துவர், மருத்துவச் செலவுகளை தானே ஏற்பதாக கூறியிருப்பது நல்லவர்கள் கூடும் போது நன்மைகளும் கூடிப்போகும் என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. இந்த மருத்துவர் ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்தவர். இவரது மருத்துவமனையில்தான் அந்த பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த மருத்துவர் சென்னையில் உள்ள ராமசந்திரா மருத்துவக் கல்லூரியில் முதுகலை பட்டம் படித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+