Kerala budget memes: கேரளாவுக்கு கிடைத்தது ஆமைதான்.. மத்திய பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் கடுப்பான சேட்டன்கள்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நேற்று 2026- 2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில் கேரளாவுக்கு ஆமைதான் கிடைத்துள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். "நாங்கள் எய்ம்ஸ் மருத்துவமனை கேட்டோம், ரயில் கேட்டோம். பதிலாக தேங்காயும் ஆமையும் கொடுத்தார்கள்"என்று கேலியாக பதிவிட்டு வைரல் ஆக்கி வருகிறார்கள்.

தங்கச் சங்கிலி, சன் கிளாஸ் அணிந்த ஆமைகளுடன் மீம்ஸ்களை பதிவிட்டு வரும் நெட்டிசன்கள், "கேரளாவுக்கு கிடைத்தது வளர்ச்சி திட்டமல்ல.. ஆமைதான்" என கலாய்த்து பதிவிட்டு வருகிறார்கள். கேரளாவின் வளர்ச்சி தேவைகளை மத்திய அரசு மீண்டும் புறக்கணித்துள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.

Kerala budget memes

ஆமையை வைத்து மீம்ஸ்கள்

2026-27 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், சாமானிய மக்கள் எதிர்பார்த்த அறிவிப்பு எதுவும் பட்ஜெட்டில் இல்லை. ரயில் திட்டங்கள் முதல் வளர்ச்சி திட்டங்கள் பல முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்த்தனர்.

ஆனால் அதுபோன்ற பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லாததால் நெட்டிசன்கள் பட்ஜெட் குறித்து மீம்ஸ்களாக விமர்சித்து வருகிறார்கள். இந்த சூழலில் கேரளாவில் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகாக ஆமையை வைத்து மீம்ஸ்கள் டிரெண்ட் ஆகி வருகின்றன. இது தேசிய அளவில் கவனம் பெறத்தொடங்கியுள்ளது. பட்ஜெட்டிற்கும் ஆமைக்கும் என்ன தொடர்பு என்று தோன்றுகிறது அல்லவா..அதற்கு வேறு எதும் பெரிதாக காரணம் இல்லை..

அவசியமே இல்லாத ஆமை திட்டம்

நிர்மலா சீதாராமன் வெளியிட்ட ஒரு அறிவிப்புதான் இதற்கு முழு காரணமாக அமைந்துள்ளது. மத்திய பட்ஜெட்டில், ஒடிசா, கர்நாடகா மற்றும் கேரளா கடற்கரை பகுதிகளில் கடல் ஆமைகள் முட்டையிடும் இடங்களை மையமாகக் கொண்டு "டர்டில் டிரெயில்ஸ்" என்ற சுற்றுலா திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் தேவையற்ற ஒன்று என்ற விவாதம் கேரள மக்களிடையே கிளம்பியுள்ளது.

நீண்ட காலமாக எய்ம்ஸ் மருத்துவமனை, அதிவேக ரயில், பெரும் உட்கட்டமைப்பு திட்டங்கள் போன்ற முக்கிய கோரிக்கைகளை கேரளா முன்வைத்து வரும் நிலையில், பட்ஜெட்டில் அவை புறக்கணிக்கப்பட்டது. ஆனால், அவசியமே இல்லாத ஆமை திட்டம் அறிவிக்கப்பட்டு இருப்பதாக கேரள நெட்டிசன்கள் காட்டமாக மீம்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள்.

மத்திய அரசு மீண்டும் புறக்கணித்துள்ளது

இதனால், கடந்த இரு தினங்களாக , சமூக வலைதளங்களில் ஆமைகளை மையமாக வைத்து கலாய்க்கும் விதமாக பதிவுகள் மற்றும் மீம்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. தங்கச் சங்கிலி, சன் கிளாஸ் அணிந்த ஆமைகளுடன் மீம்ஸ்களை பதிவிட்டு வரும் நெட்டிசன்கள், "கேரளாவுக்கு கிடைத்தது வளர்ச்சி திட்டமல்ல... ஆமைதான்" என கலாய்த்து பதிவிட்டு வருகிறார்கள்.

"நாங்கள் எய்ம்ஸ் மருத்துவமனை கேட்டோம், ரயில் கேட்டோம். பதிலாக தேங்காயும் ஆமையும் கொடுத்தார்கள்"என்று கேலியாக பதிவிட்டு வைரல் ஆக்கி வருகிறார்கள். கேரள அரசியல் பிரமுகர்கலும் தங்கள் பங்குக்கு இந்த மீம்ஸ்களை பகிர்ந்து இந்த டிரோல் விவாதத்தில் கலந்து கொண்டு பாஜகவை சீண்டி வருகிறார்கள். கேரளாவின் வளர்ச்சி தேவைகளை மத்திய அரசு மீண்டும் புறக்கணித்துள்ளது என்று விமர்சனம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+