லாட்ஜில் ரூம் போட்ட அகிலா.. சடலமாக விழுந்து கிடந்த மர்மம்.. அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்!
கேரள லாட்ஜில் இளம்பெண் சடலமாக கிடந்தது குறித்த விசாரணை நடக்கிறது
திருவனந்தபுரம்: 2வது கணவனையும் விட்டுவிட்டு போன அகிலா.. கடைசியில் லாட்ஜில் பிணமாக கிடந்தார்.. இளம்பெண் மரணம் குறித்த விசாரணையை கேரள போலீசார் கையில் எடுத்துள்ளனர்.
கேரளாவின் கன்னூரை சேர்ந்தவர் அகிலா பெரையில்... இவர் கல்யாணம் ஆனவர்.. ஆனால் அவருடன் சண்டை போட்டுக் கொண்டு 2016-ல் பிரிந்துவிட்டார்... முறைப்படி விவாகரத்தும் பெற்று கொண்டார்.
பிறகு 2வது கல்யாணம் செய்தார்.. அவர் ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர்.. 3 மாசம்தான் வாழ்ந்திருப்பார்.. அவரிடமும் சண்டை போட்டுக் கொண்டு வீட்டைவிட்டு போய்விட்டார்.

போனவர் சும்மா போகவில்லை.. 30 லட்சம் ரூபாய், 40 சவரன் நகைகள், காருடன் அகிலா எஸ்.ஆனார்.. எங்கே போனார் என்று யாருக்குமே தெரியவில்லை. இந்த நிலையில், கொஞ்ச நாளைக்கு முன்பு அகிலா சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்கள்.. சொந்தக்காரர்களை சந்தித்து விட்டு ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருந்திருக்கிறார்.
ஆனால் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.. ரூமுக்குள் பிணமாக அகிலா கிடப்பதை பார்த்ததும் அந்த லாட்ஜ் ஊழியர்கள் போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.. போலீசாரும் விரைந்து வந்து சடலத்தை மீட்டனர்.. பிறகு விசாரணையையும் ஆரம்பித்தனர். அப்போதுதான், அகிலா அடிப்படையிலேயே ஒரு பணக்கார வீட்டு பெண் என்பது தெரியவந்தது.. இவர் அப்பா ஒரு கோடீஸ்வரராம்.. அதனால்தான் பணம், நகைகளிலேயே அகிலா புரண்டுள்ளார்.
இந்த 4 வருஷமாக மாயமான அகிலா, காசர்கோடு, கோழிக்கோடு, ஆலப்புழா இப்படி ஒவ்வொரு இடங்களுக்கும் அகிலா சென்றுள்ளார்.. கையில் அவ்வளவு காசு, நகையுடன் ஏன் இங்கெல்லாம் சென்றார்? யாருடன் சென்றார்? எப்படி சென்றார் என்று தெரியவில்லை.
சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தபோது, அகிலாவிடம் நகை, பணம் எதுவுமே இல்லையாம்.. சோர்வாகவும் இருந்துள்ளார்.. சொந்தக்காரர்களும் எதைபற்றியும் அவரிடம் கேட்க காணோம்.. இந்நிலையில்தான் லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து உறவினர்களிடமே முதல் விசாரணையை போலீசார் ஆரம்பித்துள்ளனர்.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மியூசிக்கிற்கு தடை.. பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம்.. தாலிபான்கள் போல் ரூல்ஸ் போட்ட கேரளா ஜிம் -
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications