வாசலில் காத்திருந்த கள்ளக்காதலன்.. தண்ணீர் தொட்டியில் துடித்த 2 பிஞ்சுகள்.. கேரளாவில் நடந்தது என்ன?
திருவனந்தபுரம்: 2 குழந்தைகள் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், அவர்களது தாய் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது அவரது ஆண் நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் போலீஸ் விசாரணையில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. என்ன நடந்தது? யாரிந்த பெண்?
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகே உள்ள மேனோன்பாறை கூராங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜான் குமார் (36). தொழிலாளியான இவருக்கு நிவேத்யா (29) என்ற மனைவியும், ஜெனிபர் ஜூலியட் (5) என்ற மகளும், ராபின் கிறிஸ்டோபர் (3) என்ற மகனும் இருந்தனர்.
இந்த குடும்பம் சம்பவம் நடப்பதற்கு சுமார் 2 மாதங்களுக்கு முன்புதான் ஜான் குமாரின் பெற்றோருடன் வசித்து வந்த வீட்டில் இருந்து தனியாக வாடகை வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளது.

குளியலறையில் தண்ணீர் தொட்டி
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 29-ம் தேதி ஜான் குமார் வேலைக்குச் சென்றிருந்தார். நிவேத்யா சமையல் செய்து கொண்டிருந்தபோது, குழந்தைகள் 2 பேரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில், வீட்டின் பின்புறம் உள்ள குளியலறையில் இருந்த சிமென்ட் தண்ணீர் தொட்டியில் 2 குழந்தைகளும் மூழ்கிக் கிடந்தனர்.
இதையடுத்து, குழந்தைகள் தவறி தொட்டியில் விழுந்துவிட்டதாகக் கூறி நிவேத்யா அலறி சத்தம் போட்டுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து குழந்தைகளை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

நிவேத்யா மீது சந்தேகம்
முதலில் குழந்தைகள் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர். ஆனால், குழந்தைகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். ஜான் குமாரின் சகோதரியும் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து நிவேத்யாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து செப்டம்பர் 30-ம் தேதி நிவேத்யா கைது செய்யப்பட்டார். உடனே அவரிடம் விசாரணையும் நடந்தது..
கள்ளக்காதலன் மார்ட்டின்
அப்போது நிவேத்யா சொல்லும்போது, நான் படிக்க நினைத்தேன். மாடலிங் துறைக்கு போக ஆசைப்பட்டேன். ஆனால், அதற்கு குறுக்கே குழந்தைகள் இருப்பதாக நினைத்தேன்" என்றார்..
எனினும் நிவேத்யா சொன்ன காரணத்தை போலீசார் முழுமையாக நம்பவில்லை.. அதனால் விசாரணையை தீவிரப்படுத்தினர்.. அப்போதுதான் நிவேத்யாவுக்கு வேறு நபருடன் தவறான உறவு இருப்பது தெரியவந்தது.. . மேனோன்பாறை பாரக்குழி பகுதியை சேர்ந்த மார்ட்டின் இக்னேஷியஸ் (36) என்பவருடன் நிவேத்யாவுக்கு பழக்கம் இருந்துள்ளது. இருவரும் அருகருகே வாடகை வீடுகளில் வசித்து வசித்தபோது ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதம் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
வாசலில் வாட்ச் செய்த ஆண் நண்பர்
அப்படியானால், குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் மார்ட்டினுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்தனர்.. அத்துடன் நிவேத்யாவின் செல்போன் பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.. அப்போதுதான் மார்ட்டினுக்கும் இந்த கொலையில் தொடர்பில் இருந்தது அம்பலமானது..
அதாவது, நிவேத்யா குழந்தைகளை குளியலறை தண்ணீரில் மூழ்கடித்து கொல்லும்போது, வீட்டுக்கு வெளியே இருந்து யாராவது வருகிறார்களா என்று மார்ட்டின் கண்காணித்து கொண்டிருந்தாராம்.. இதையடுத்து 2 குழந்தைகளின் கொலையில் நிவேத்யாவுக்கு உதவியதாக மார்ட்டினை போலீசார் கைது செய்துள்ளனர்..!!




Click it and Unblock the Notifications
