Kerala Lottery: கிறிஸ்துமஸ், நியூ இயர் கேரள பம்பர் லாட்டரி.. கோடி கோடியா கொட்ட போகுது! டாப் எங்கே தெரியுமா?
திருவனந்தபுரம்: கேரளாவில் தற்போது கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி (Kerala Christmas New Year Bumper Lottery) டிக்கெட் விற்பனை சூடு பறக்க நடந்து வருகிறது. முதல் பரிசு ரூ.20 கோடி என்பதால் தமிழகத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்களும் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி குவித்து வருகிறார்கள். வழக்கம் போல் இந்த முறையும் தமிழ்நாடு எல்லையில் உள்ள பாலக்காட்டில் தான் டிக்கெட் விற்பனை அதிகமாக நடப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
கேரளாவில் லாட்டரி டிக்கெடுகள் ஏகத்துக்கும் பிரபலம். நம்ம ஊரில் டீக்கடைகள் எப்படி திரும்பும் இடமெல்லாம் நிறைந்து இருக்கிறதோ.. அப்படி கேரளாவில் காணும் இடமெல்லாம் லாட்டரி கடைகளை பார்க்க முடியும்.

கேரளா லாட்டரி டிக்கெட்டுகள்
அதிலும் தமிழக - கேரள பார்டர் பக்கம் போனாலும் கேரளா உங்களை வரவேற்கிறது என்ற போர்டு பார்க்கிறமோ இல்லையோ.. லாட்டரி கடைகளை பார்த்துவிட முடியும். கேரளாவை பொறுத்தவரை அந்த மாநில அரசே லாட்டரிகளை அச்சிட்டு விற்பனை செய்கிறது. அங்கு தினம் தோறும் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது.
தினமும் ரூ.1 கோடி பரிசுத்தொகை கொண்ட லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. இதன் விலை ரூ.50 ஆகும். அதுபோக வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கலும் நடைபெறுகிறது. இந்த பம்பர் லாட்டரிகளுக்கு முதல் பரிசு பல கோடி ரூபாய் கிடைக்கும் என்பதால், கேரள மக்கள் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களில் உள்ளவர்களும் ஆர்வத்துடன் இந்த டிக்கெட்டுகளை வாங்குவதாக லாட்டரி கடை உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.
முதல் பரிசு ரூ.20 கோடி
சீசனுக்கு ஏற்றபடி பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் சேல்ஸ்க்கு விடப்படும். தற்போது கிறிஸ்துமஸ், நியூ இயர் காலம் என்பதால் கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் பூஜா பம்பர் லாட்டரி குலுக்கல் நடைபெற்ற அன்று அறிமுகம் செய்யப்பட்ட இந்த லாட்டரி டிக்கெட் ஒன்றின் விலை ரூ.400 ஆகும். முதல் பரிசாக ரூ.20 கோடி கிடைக்கிறது.
ஓணம் பம்பர் லாட்டரிக்கு பிறகு அதிக தொகையை பரிசுத்தொகையாக கொண்ட லாட்டரி டிக்கெட் இதுவே என்பதால் கேரள லாட்டரி பிரியர்கள் இந்த டிக்கெட்டுக்கு மவுசு அதிகமாக இருக்கும். இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் அடுத்த மாதம் (ஜனவரி) 24 ஆம் தேதி நடைபெறுகிறது. முதல் பரிசாக ரூ.20 கோடி ஒரு டிக்கெட்டிற்கு வழங்கப்படும்.
பாலக்காடில் தான் விற்பனை அதிகம்
இரண்டாவது பரிசாக ரூ.1 கோடி, 20 டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படுகிறது. மூன்றாவது பரிசாக ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. 4 வது பரிசாக ரூ.3 லட்சமும், 5 வது பரிசாக ரூ.2 லட்சமும், 6 வது பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட் குலுக்கலுக்கு இன்னும் சரியாக ஒரு மாதம் இருக்கும் நிலையில், டிக்கெட் விற்பனை சூடுபிடித்துள்ளது.
தற்போது சபரிமலை சீசன் என்பதால், ஐயப்பன் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களில் சிலரும் டிக்கெட்டை வாங்குவதால் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கேரள லாட்டரி விற்பனையாளர்கள் கூறினர். வழக்கம் போல இந்த முறையும் தமிழ்நாடு எல்லையில் உள்ள பாலக்காட்டில் தான் டிக்கெட் விற்பனை அதிகமாக உள்ளதாக லாட்டரி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூஜா பம்பர் குலுக்கல் வின்னர்
அடுத்தடுத்த இடங்களில் திருச்சூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் விற்பனை அதிகமாக உள்ளதாக தெரிகிறது. கடந்த மாதம் 22 ஆம் தேதி நடைபெற்ற பூஜா பம்பர் குலுக்கலில் முதல் பரிசு D 545542 என்ற எண்ணிற்கு அடித்தது. பாலக்கட்டில் உள்ள லாட்டரி ஏஜெண்ட் சுரேஷ் என்பவர் விற்பனை செய்த டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.12கோடி அடித்தது.
இந்த டிக்கெட்டின் வெற்றியாளர் யார் என்ற விவரம் வெளியாகவில்லை. கேரள லாட்டரிகளில் பிற இடங்களை ஒப்பிடும் போது பாலக்காட்டில் அதிக முறை பரிசு அடிப்பதாக லாட்டரி பிரியர்கள் நம்புவதால், அங்கே வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தெரிகிறது.
சட்ட விரோத செயல்
லாட்டரிகள் குடும்பத்தில் நிதிசிக்கலை ஏற்படுத்தும் என்பதால் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். கேரள லாட்டரிகளை தமிழகத்தில் விற்பனை செய்வது சட்ட விரோத செயல். கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்தால் போலீசார் கைது செய்வார்கள். பரிசு அடித்தாலும் கேரளா, பரிசுத்தொகையை வழங்க மறுக்கும். ஆன்லைன் மற்றும் வாட்ஸ் அப்களில் வாங்கும் லாட்டரிகளுக்கும் பரிசுத்தொகை மறுக்க வாய்ப்புள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications