கேரள லாட்டரியில் ரூ.20 கோடியை லம்பாக தூக்கிய நபர்! அவரோட நேரத்தை பாருங்க.. அதிர்ஷ்டம்னா இதுதான்
திருவனந்தபுரம்: கேரளாவில் கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ.20 கோடி வென்ற வின்னர் யார் என்பது தெரியவந்துள்ளது. கண்ணூர் அருகே உள்ள இரிட்டி பகுதியை சேர்ந்த சத்யன் என்பவர் வாங்கிய டிக்கெட்டிற்கு முதல் பரிசு அடித்துள்ளது. முதல் பரிசு அடித்த அதிர்ஷடசாலி மொத்தமாக 10 டிக்கெட்டுகளை வாங்கினாராம். 10 ல் ஒரு டிக்கெட்டாவது பரிசு அடிக்கும் என நம்பியவருக்கு அதிர்ஷ்ட காற்று வீசியிருக்கிறது.
கேரளாவில் கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று நடைபெற்றது. திருவனந்தபுரம் லாட்டரி அலுவலகத்தில் நடைபெற்ற குலுக்கலில் பரிசுத்தொகை பெற்ற வின்னிங் நம்பர்கள் அறிவிக்கப்பட்டன. ரூ.400 மதிப்பு கொண்ட கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரிக்கு முதல் பரிசாக ரூ.20 கோடி அறிவிக்கப்பட்டு இருந்தது.

முத்து ஏஜென்சியில் வாங்கிய சீட்டுக்கு முதல் பரிசு
இரண்டாவது பரிசாக ரூ.1 கோடி 20 வின்னிங் நம்பர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. இரண்டு மாதங்களாக விறுவிறுப்பாக டிக்கெட் சேல்ஸ் நடைபெற்ற நிலையில் நேற்று மதியம் 2.00 மணிக்கு முடிவுகள் வெளியாகின. முதல் பரிசாக XD 387132 என்ற எண் கொண்ட லாட்டரிக்கு முதல் பரிசு விழுந்துள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் சக்கரக்கல் என்ற ஊரில் இந்த டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. முத்து ஏஜென்சி (Kannur C 3789) என்ற லாட்டரி ஏஜென்சியில் விற்கப்பட்ட இந்த லாட்டரிக்குதான் முதல் பரிசு அடித்து இருந்தது.
இரிட்டியை சேர்ந்த சத்யன்
சபரிமலை சீசன் என்பதால் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு கூட லாட்டரியில் முதல் பரிசு அடித்து இருக்கலாம் என்று எதிபார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் முதல் பரிசு அடித்த அதிர்ஷ்டசாலி யார் என்ற விவரம் தெரியவந்துள்ளது. கண்ணூர் அருகே உள்ள இரிட்டி என்ற பகுதியை சேர்ந்த சத்யன் என்பவர்தான் 20 கோடி பரிசுத்தொகையை வென்ற அதிர்ஷ்டசாலி என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 24 ஆம் தேதி சத்யன் என்பவர் மொத்தமாக 10 டிக்கெட்டுகளை வாங்கியிருக்கிறார். அதில் ஒன்றுதான் அதிர்ஷ்ட டிக்கெட்டாகும். லாட்டரி வாங்கிய சத்யனை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனினும், லாட்டரி ஏஜென்சி இதை உறுதி செய்துள்ளது.
இதுவே முதல் முறை
முதல் பரிசு வென்ற லாட்டரியை விற்ற முத்து ஏஜென்சி உரிமையாளர் எம்.வி அனீஷ் இது தொடர்பாக கூறுகையில், "கடந்த 18 ஆண்டுகளாக நான் லாட்டரி கடை நடத்தி வருகிறேன். இவ்வளவு பெரிய தொகை அடித்தது இதுவே முதல் முறையாகும். ஒலிம்பிக்கில் மெடல் வாங்கியது போல இருக்கிறது" என்றார்.
முத்து ஏஜென்சி கடையை நடத்தி வரும் அனிஷ்க்கு சொந்தமாக 6 இடங்களில் லாட்டரி விற்பனை கடை உள்ளது. எனது கடையில் இதுவரை அதிகபட்சமாக ரூ.1 கோடி பரிசுத்தொகை மட்டுமே அடித்து இருக்கிறது. பரிசுத்தொகை வென்ற சத்யன் யார் என்பது முக்கியம் இல்லை. டிக்கெட் வாங்கிய அவருக்கு பரிசுத்தொகை விழுந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications