Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரள லாட்டரி.. ரூ. 20 கோடி! வெளி மாநிலத்தவருக்கு அடித்ததா யோகம்? பரிசு விழுந்த இடம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரியில் XD 387132 என்ற எண்ணுக்கு முதல் பரிசு அடித்துள்ளது. சபரி மலை சீசன் காலத்தில் விற்கப்பட்ட லாட்டரி என்பதால் இந்த டிக்கெட்டுகளை வெளி மாநிலத்தை சேர்ந்த பலரும் வாங்கியதாக தெரிகிறது. இதனால், முதல் பரிசு அடித்த அதிர்ஷ்டசாலி யார் என்பதை அறிய லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

கேரளாவில் லாட்டரி பிரியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி டிக்கெட்டின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் திருவனந்தபுரம் லாட்டரி அலுவலகத்தில் குலுக்கல் நடைபெற்றது. ரூ.400 விலை கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.20 கோடியும் 2 வது பரிசாக 20 பேருக்கு தலா ரூ.1 கோடியும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், கேரளாவில் லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் இந்த டிக்கெட்டுகளை வாங்கினர்.

lottery kerala bumper lottery

பார்டரில் விழுந்த லாட்டரி பரிசு

சுமார் 45 லட்சம் டிக்கெட்டுகள் விற்ற நிலையில், இன்று முடிவுகள் வெளியாயாகியுள்ளது. முதல் பரிசாக XD 387132 என்ற எண் கொண்ட லாட்டரிக்கு முதல் பரிசு விழுந்துள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் சக்கரக்கல் என்ற ஊரில் இந்த டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. முத்து ஏஜென்சி (Kannur C 3789) என்ற லாட்டரி ஏஜென்சியில் விற்கப்பட்ட இந்த லாட்டரிக்குதான் முதல் பரிசு அடித்துள்ளது.

சபரிமலை சீசன் என்பதால் கர்நாடகா, தமிழகத்தை சேர்ந்த பலரும் கேரளாவிற்கு சென்றனர். இதில் பலரும் வரும் வழியில் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியதால் கடந்த ஆண்டை போல இந்த முறையும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பரிசு அடித்து இருக்குமோ என்ற எதிர்பார்ப்பும் லாட்டரி பிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பரில் புதுவையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கு முதல் பரிசு அடித்தது. கண்ணுர் மாவட்டம் என்பது கேரளாவின் வட கடலோர மாவட்டம் ஆகும்.

எதிர்பார்க்கும் சேட்டன்கள்

கர்நாடகா அங்கிருந்து பக்கம் என்பதால் ஓணம் லாட்டரியில் கர்நாடக மெக்கானிக்கிற்கு முதல் பரிசு அடித்ததால் கர்நாடகாவை சேர்ந்த யாருக்கேனும் பரிசு அடித்து இருக்குமோ என்ற எதிர்பார்ப்பும் சேட்டன்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை வின்னர் தெரியாததால் லாட்டரி வாங்கிய பலரும் தங்களிடம் இருக்கும் டிக்கெட் எண்ணை மீண்டும் மீண்டும் பார்த்து பரிசோதித்து வருகிறார்கள்.

2-வது பரிசு ரூ.1 கோடி (20 பேருக்கு)

ΧΑ 571412, XB 325009, XC 124583, XC 173582, XC 515987, XD 367274, XD 370820, XD 566622, XD 578394, ΧΕ 481212, XE 508599, XG 209286, ΧΗ 301330, XH 340460, ΧΗ 589440, XK 289137, XK 524144, XL 386518


3-வது பரிசு: ரூ.10 லட்சம் (30 பேருக்கு)

ΧΑ 109817, ΧΑ 503487, XA 539783, XB 217932, XB 323999, XB 569602, XC 206936, XC 539792, XC 592098, XD 109272, XD 259720, XD 368785, ΧΕ 198040, XE 505979, XE 511901, XG 202942, XG 237293, XG 313680, ΧΗ 125685, XH 268093, XH 546229, XJ 271485, XJ 288230, XJ 517559, XK 116134, XK 202537, XK 429804, XL 147802, XL 395328, XL 487589

4-வது பரிசு: ரூ. 3 லட்சம் (20 பேருக்கு)

ΧΑ 461718, ΧΑ 525169, XB 335871, XB 337110, XC 335941, XC 383694, XD 361926, XD 385355, ΧΕ 109755, ΧΕ 154125, XG 296596, XG 531868, ΧΗ 318653, ΧΗ 344782, XJ 326049, XJ 345819, XK 558472, XK 581970, XL 325403, XL 574660

5-வது பரிசு: ரூ. 2 லட்சம் ( 20 பேருக்கு)

ΧΑ 403986, ΧΑ 485066, XB 102880, XB 380509, XC 212702, XC 598100, XD 157876, XD 340432, ΧΕ 235670, ΧΕ 533528, XG 114440, XG 586137, ΧΗ 523300, ΧΗ 527355, XJ 333002, XJ 376726, XK 103722, XK 577945, XL 303429, XL 523970

ரூல்ஸ் என்ன?

கேரள லாட்டரிக்கு தடை உள்ள மாநிலங்களில் விற்பனை செய்வது சட்ட விரோதம் ஆகும். அதாவது தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட தடை இருக்கும் மாநிலங்களில் விற்பனை செய்வது சட்ட விரோதம் ஆகும். தமிழ்நாட்டில் விற்பனை செய்தால் போலீசார் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள். அதேபோல கள்ளச்சந்தையில் டிக்கெட் வாங்கினாலும் அதற்கு கேரள அரசு பரிசு வழங்காது. வெளி மாநிலத்தவர்கள் கேரளாவில் லாட்டரி வாங்கியதை உறுதி செய்தால்தால் பரிசு அளிக்கப்படும். கேரளா வந்ததற்கான காரனம், சான்று உள்ளிட்டவைகளை பரிசோதித்த பிறகே கேரள அரசு வெளி மாநிலத்தவர்களுக்கு பரிசு கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+