மோடியை கலாய்த்து வம்பில் சிக்கிய கேரள காங்கிரஸ்.. எதிர்ப்புகள் வலுத்ததால் ட்விட்டை டெலிட் செய்தது
திருவனந்தபுரம்: பிரதமர் மோடி பாப் பிரான்சிசுடன் சந்தித்து பேசியதை கேரள காங்கிரஸ் கலாய்த்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்தது. இதற்கு கடும் கண்டனங்கள் வலுத்த நிலையில் தற்போது அந்த பதிவை கேரள காங்கிரஸ் நீக்கியுள்ளது. மேலும் இது தொடர்பாக விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளது.
கேரள காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் சமூக தளத்தில், பிரதமர் மோடியை கலாய்க்கும் விதமாக அடிக்கடி பதிவிட்டு வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் போது பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

அப்போது, ஆட்சி அமைப்பதற்கு முன்பாக சந்திரபாபு நாயுடுவுடன் அகிலேஷ் யாதவ் சந்திக்கும் புகைப்படத்தை பகிர்ந்து.. மோடிஜி டென்ஷன் ஆகாதீங்க.. இது பழையபடம் தான்.. என நையாண்டியுடன் பதிவிட்டு இருந்தது. இப்படி கேரள காங்கிரஸ் கட்சியின் பதிவுகள் பெரும்பாலும் பாஜகவை கலாய்க்கும் விதமாகவே இருக்கும்.
இந்த நிலையில், ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்ற பிரதமர் மோடி, அங்கே பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேசினார். அப்போது போப் பிரான்சிசையும் சந்தித்து பேசியிருந்தார். போப் பிரான்சிஸ்சை சந்தித்து பேசியது தொடர்பான புகைப்படங்களையும் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், இது தொடர்பாக கேரள காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இறுதியாக கடவுளை சந்திக்கும் வாய்ப்பு போப் ஆண்டவருக்கு கிடைத்தது என ஸ்மைலியுடன் பதிவிட்டு இருந்தது. கேரள காங்கிரஸ் கட்சியின் இந்த எக்ஸ் பதிவுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த சர்ச்சைக்குரிய பதிவின் மூலமாக கிறிஸ்தவர்களை காங்கிரஸ் கட்சி அவமதித்து விட்டதாக பாஜகவும் கடுமையாக சாடியிருந்தது.
பாஜகவை சேர்ந்த ஜார்ஜ் குரியன் இது தொடர்பாக கூறுகையில், "காங்கிரசின் இந்த செயல் முற்றிலும் தேவையற்றது. இயேசுவை மதிக்கும் கிறிஸ்தவர்களை அவமதிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் பதிவு உள்ளது. காங்கிரஸ் இந்த நிலைக்கு சென்று இருப்பது வெட்கக் கேடானது என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், சர்ச்சைக்குரிய அந்த பதிவை காங்கிரஸ் கட்சி அழித்துள்ளது. மேலும், விளக்கம் ஒன்றை அளித்துள்ள காங்கிரஸ் கட்சி, "எந்த மதத்தையும் அவமதிப்பது எங்களது மரபு கிடையாது" என்று கூறியுள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
கேரளாவில் மீண்டும் தலைதூக்கிய நிபா வைரஸ்.. தடுப்பூசி கூட இல்லையே.. வௌவால்கள் மூலம் பரவும் ஆபத்து! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications