அய்யோ.. அவன் கன்னத்தை கிள்ளணும் போல இருக்கு.. திவ்யாவை குதூகலிக்க வைத்த கேரளத்து குட்டீஸ்!

சிறுவர்கள் பாடிய காங்கிரஸ் பிரச்சார வீடியோ கேரளாவில் வைரலாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திவ்யாவை குதூகலிக்க வைத்த கேரளத்து குட்டீஸ்!-வீடியோ

    திருவனந்தபுரம்: "சிபிஎம் வீட்டிலேயே இருக்கட்டும்.. சூடான டீ குடித்துக் கொண்டும், பருப்பு வடை சாப்பிட்டுக் கொண்டும் இருக்கட்டும்" என்ற பாடலை காங்கிரஸ் கட்சி குட்டீஸ்கள் கேரளாவில் பாடி கலக்கி வருகின்றனர்.

    சிறுபான்மையினர் அதிகம் வாழும் மாநிலம் கேரளா. தென் பகுதியில் கிறிஸ்தவ இன வாக்குகளும், வடக்கு பக்கம் முஸ்லிம்கள் வாக்குகளும்தான் அரசியலை இவ்வளவு காலம் தீர்மானித்து நிர்ணயம் செய்து வருகின்றன. ஆனாலும் எப்ப பார்த்தாலும் லோக்கல் பாலிடிக்ஸ்தான் இங்கு அதிகம்!

    பாஜகவின் பலம் அங்கு குறைவுதான். அதனால் இடதுசாரிக் கட்சிகளும், காங்கிரஸுக்கும்தான் செம போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கு மற்றொரு முக்கிய காரணம் ராகுல்காந்தி வயநாட்டில் போட்டியிடுவதும்!

    ஸ்பெஷல் வீடியோ

    ஸ்பெஷல் வீடியோ

    அதனால்தானோ என்னவோ இந்த முறை காங்கிரஸ் தீவிர பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளது. சினிமா நடிகர்கள் முதல் பிரபலங்கள் வரை எத்தனை பேர் பிரச்சாரம் செய்தாலும், இப்போது ஒரு குட்டீஸ்கள் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதுதான் ஸ்பெஷலே!

    காங்கிரஸ் கொடி

    காங்கிரஸ் கொடி

    இது சம்பந்தமாக ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அது ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு. 6 சிறுவர்கள் அரை டிரவுசர் போட்டுக் கொண்டு தெருவில் நிற்கிறார்கள். வசதி படைத்த குழந்தைகள் போலவும் தெரியவில்லை. அவர்கள் கையில் காங்கிரஸ் கொடி உள்ளது. அதில் ஒருவன் இப்படி மலையாளத்தில் பாடி கோஷமிடுகிறான்:

    பருப்பு வடை

    "சிபிஎம் வீட்டிலேயே இருக்கட்டும்.. வசூலை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.. தேசாபிமாணி படித்துக் கொண்டும்.. சூடான டீ குடித்துக் கொண்டும், பருப்பு வடை சாப்பிட்டுக் கொண்டும் இருக்கட்டும்..செளகிதார் சோர் ஹே" என்று பாடுகிறார்கள்.

    முகத்தில் சிரிப்பு

    முகத்தில் சிரிப்பு

    இந்த பாட்டை இவர்களுக்கு யார் எழுதி தந்தார்களோ தெரியாது, முதலில் காங்கிரஸ் கட்சியை பற்றி கொஞ்சம் கூட தெரிய வாய்ப்பிருக்காது என்றே தெரிகிறது.. அவ்வளவும் குட்டீஸ்கள்! இந்த கோஷத்தை எழுப்பும்போது அவர்கள் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு!

    குட்டீஸ்கள்

    குட்டீஸ்கள்

    ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து, வீடியோ எடுத்து, அதில் யாரையாவது நடிக்க வைத்து.. விளம்பர பிரச்சாரங்கள் செய்துவரும் இக்காலத்தில், இப்படி தெருவில் நின்றுகொண்டு, எளிமையாகவும், மகிழ்ச்சியாகவும், கவலை இல்லா இந்த குட்டீஸ்கள் பாடிய வீடியோ பெரும் வைரலாகி வருகிறது.

    கன்னத்தை கிள்ளணும்

    கன்னத்தை கிள்ளணும்

    இந்த வீடியோ காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதுடன், "இந்த பையன் கன்னத்தை அப்படியே கிள்ளணும்போல இருக்கு" என்று ட்வீட் போட்டு பாராட்டியுள்ளார்... சத்தியமாய்ட்ட்டு தெறி பாய்ஸானு சாரே!!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+