மருத்துவர் வந்தனாவை கொல்வதற்கு முன்பு வீடியோ எடுத்த சந்தீப்.. 13 வினாடிகளில் நடந்தது என்ன?
திருவனந்தபுரம்: கேரளாவில் மருத்துவர் ஒருவர் போதை நபரால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முன்பு என்ன நடந்தது என்பது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
Recommended Video
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் 23 வயதான வந்தனா தாஸ் என்பவர் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று அதிகாலை மருத்துவ பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது சந்தீப் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டதாக கூறி சிகிச்சைக்காக அவரை காவல் துறையினர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். சந்தீப்புக்கு குடும்பத்தினருடன் ஏற்பட்ட சண்டையால் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அவருக்கு மருத்துவர் வந்தனா சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆவேசமாக எழுந்த சந்தீப் திடீரென ரகளையில் ஈடுபட்டார். அப்போது அருகில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து அங்கிருந்தவர்களை எல்லாம் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் மருத்துவர் வந்தனா காவல் துறையினர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

இவர்களில் வந்தனாவுக்கு பல முறை கத்தரிக்கோலால் குத்து விழுந்தது. மற்றவர்கள் படுகாயமடைந்து தப்பியது போல் வந்தனாவால் தப்ப முடியவில்லை. இதையடுத்து சந்தீப்பால் தாக்கப்பட்ட வந்தனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்ற உயிரிழந்தார். இந்த சம்பவம் கேரளாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நடந்தது என்ன என்பது குறித்து வீடியோ வெளியாகியுள்ளது. சுமார் 13 வினாடிகள் மட்டுமே வந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. காலில் காயங்களுடன் இருந்த சந்தீப்பை போலீஸார் அழைத்து வருகிறார்கள். அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கிறாரகள். அப்போது அவருடைய ரத்த கறைகளை செவிலியர் ஒருவர் துடைகிறார்.
செவிலியர் ரத்த கறையை துடைக்கும் வரை அருகே வந்தனா தாஸ் நின்றுக் கொண்டிருந்தார் இந்த வீடியோவை சந்தீப்பே எடுத்துள்ளார். எதற்காக அவர் எடுத்தார் என தெரியவில்லை. இந்த வீடியோவை சந்தீப் தனது நண்பருக்கு அனுப்பியுள்ளார். அதன் பிறகுதான் சந்தீப் கத்திரிக்கோலை எடுத்து கொடூர செயலில் ஈடுபட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மருத்துவர் வந்தனா மீது ஏதேனும் முன் விரோதம் இருந்ததா, இல்லை போதையில் என்ன செய்கிறோம் என தெரியாமல் இப்படி செய்தாரா என்பதை எல்லாம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications