அந்தரங்க உறுப்பில் போதைப்பொருள் மறைத்து கடத்திய பெண்.. கண்டுபிடித்து தூக்கிய போலீஸ்! அதிரடி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது போலீசாருக்கு பயந்து அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்து போதைப்பொருள் கடத்திய 7 பேர் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கேரளாவின் திருச்சூர் மாவட்டம் வன்னியம்பாரா கிராமத்தின் வழியாக போதைப்பொருள் கடத்தி செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர வாகன சோதனைகளை மேற்கொண்டு வந்தனர். அப்போது ஒரு கார் வந்து கொண்டிருந்தது.

kerala-drug-smuggling-woman-who-hides-drugs-in-private-parts-now-arrest-count-touches-7-in-thrissur

அந்த காரில் 4 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தங்களின் பெயரை கூறினர். குருவாயூர் -பாவரட்டி பிராந்தியத்தை சேர்ந்தவர் என்றும், அவர்களின் பெயர்கள் ஷிபாஸ் (வயது 26), வித்யா (28), ஜிஸ்னு (27) மற்றும் ஸ்ரீலட்சுமி என்று கூறினர்.

மேலும் அவர்கள் பாலக்காட்டில் இருந்து திருச்சூர் நோக்கி செல்வதாக கூறினர். இருப்பினும் அவர்கள் 4 பேரின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர்களை பெண் போலீசார் பிடித்து தீவிரமாக சோதனை செய்தனர். இந்த சமயத்தில் பெண் ஒருவர் தனது அந்தரங்க உறுப்பில் 2 கிராம் எம்டிஎம்ஏ எனும் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ஷிபாஸ், வித்யா, ஜிஸ்னு மற்றும் ஸ்ரீலட்சுமி என 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து ஷிபாஸ் வீட்டில் ரெய்டு மேற்கொள்ளப்பட்டது. அங்கிருந்து 18 கிராம் எம்டிஎம்ஏ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு சாவககாட்டில் உள்ள பஞ்சரமுக்கி பகுதியில் அலுமினிய பொருட்கள் தயாரிப்பு பட்டறையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கிருந்து 288 கிராம் எம்டிஎம்ஏ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அங்கிருந்து ஷபீர்(34), அன்சாத் (31), டிடி சுமேஷ் (25) என 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதன்மூலம் மொத்தம் பெண்கள் உள்பட 7 பேர் கைதான நிலையில் அவர்களிடம் இருந்து மொத்தம் 308 எம்டிஎம்ஏ போதைப்பொருள் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்மூலம் கடந்த சில மாதங்களில் திருச்சூர் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் பிடிபட்ட அதிகபட்ச போதைப்பொருளாக இது அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+