வாக்கு எண்ணிக்கை ஓவர்.. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் முடிவுகள் வெளியீடு
திருவனந்தபுரம்: கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முடிவுகளும் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியானது.
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 40 ஆண்டுகளில் முதல்முறையாக இடதுசாரிகள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.

தமிழ்நாட்டில் இன்னும் பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், கேரளாவில் அனைத்து 140 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிந்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவில் இடதுசாரிகள் கூட்டணி 99 இடங்களை கைப்பற்றியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 62 இடங்களிலும், இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணியில் இடம் பெற்றிருந்த கேரளா காங்கிரஸ் எம் 5 இடங்களிலும் இதர கூட்டணிக் கட்சிகள் 15 இடங்களில் வென்றுள்ளன.
அதேபோல காங்கிரஸ் கூட்டணி 41 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் இந்தியன் யூனிசன் முஸ்லீம் லீக் 15 தொகுதிகளிலும் வென்றுள்ளன. மற்ற கூட்டணிக் கட்சிகள் 5 இடங்களில் வென்றுள்ளன.
முழு முடிவுகளையும் தெரிந்துகொள்ள https://results.eci.gov.in/Result2021/partywiseresult-S11.htm?st=S11












Click it and Unblock the Notifications