கேரளாவில் எல்லா Exit Poll-களும் காங்கிரஸ்க்கு சாதகம்! ஆனாலும் ட்விஸ்ட் இருக்கே! விடாத கம்யூ - பாஜக
திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெல்லப்போவது யார்? என்பது தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் அனைத்து கருத்து கணிப்புகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பின்தங்கினாலும் கூட காங்கிரஸ் கட்சியை ஒப்பிடும்போது நூலிழை வித்தியாசம் தான் எனவும், பாஜக முதல் முறையாக அக்கவுண்ட்டை திறக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்புகளின் முழு விவரங்கள் இங்கே வருமாறு:
கேரளாவில் மொத்தம் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் மெஜாரிட்டிக்கு மொத்தம் 71 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் கடந்த 9 ம் தேதி ஒரே கட்டமாக கேரளாவில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 79.83 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தமிழகத்தை போல் மே 4ம் தேதி கேரளா சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றைய தினம் கேரளாவில் யார் ஆட்சியை பிடிப்பார்கள்? என்பது தெரிந்துவிடும். இதற்கிடையே தான் இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் (எக்ஸிட் போல் முடிவுகள்) மாலை 6.30 மணி முதல் அடுத்தடுத்து வெளியாகின.
மும்முனை போட்டி
கேரளாவை எடுத்து கொண்டால் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி இடையே மும்முனை போட்டி உள்ளது. இதில் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி UDF எனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி LDF என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் தான் தேர்தலுக்கு பிந்தைய (எக்ஸிட் போல்) ஒவ்வொரு கருத்து கணிப்புகளில் எந்தெந்த கூட்டணிக்கு எவ்வளவு இடங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை இங்கு பார்க்கலாம்.
பீப்பிள்ஸ் பல்ஸ்
காங்கிரஸ் கூட்டணி -75 -85
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி - 55 - 65
பாஜகவின் என்டிஏ கூட்டணி - 0 - 3
மேட்ரிஸ்
காங்கிரஸ் கூட்டணி - 70 -75
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 60 - 65
பாஜகவின் என்டிஏ கூட்டணி 3-5
சிஎன்என் 18
காங்கிரஸ் கூட்டணி - 70 - 80
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி - 58 - 68
பாஜகவின் என்டிஏ கூட்டணி 0-4
பி -மார்க்
காங்கிரஸ் கூட்டணி 71 -79
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 62-69
பாஜகவின் என்டிஏ கூட்டணி 1-4
ஜேவிசி டைம்ஸ் நவ்
காங்கிரஸ் கூட்டணி 72 - 84
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி - 52 - 61
பாஜகவின் என்டிஏ கூட்டணி 3- 7
என்டிடிவி
காங்கிரஸ் கூட்டணி 75 - 85
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி - 55-65
என்டிஏ 0-3
ஆக்சிஸ் மை இந்தியா
காங்கிரஸ் கூட்டணி - 78 - 90
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி- 49 - 62
பாஜகவின் என்டிஏ கூட்டணி - 0 - 3
டூடே சாணக்யா
காங்கிரஸ் கூட்டணி 72 - 80
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி - 60 - 65
பாஜகவின் என்டிஏ கூட்டணி - 3 - 7
காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கடும் போட்டி
இப்படி அனைத்து கருத்து கணிப்புகளும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்தாலும் கூட ஒரு முக்கிய விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். கேரளாவில் ஆட்சியை கைப்பற்ற மெஜாரிட்டிக்கு 71 தொகுதிகள் வேண்டும். அந்த வகையில் அனைத்து கருத்து கணிப்புகளிலும் காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டியை தொடுவதாக கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பின்தங்கியிருந்தாலும் அதிகபட்சமாக 60 முதல் 65 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என கூறப்பட்டுள்ளது. இதனால் ஓட்டு எண்ணிக்கையின்போது கடைசி நேரத்தில் ரிசல்ட் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். எனவே கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அலை வீசினாலும் கூட அது பெரிய அளவில் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிச்சயம் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கடும் போட்டியை கொடுக்கிறது என்பதை தான் இந்த எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
அக்கவுண்ட்டை திறக்கும் பாஜக
அதேவேளையில் இந்த தேர்தல் மூலமாக பாஜக கேரளாவில் அக்கவுண்ட்டை திறக்க வாய்ப்புள்ளது. 2021 சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஒரு எம்எல்ஏ கூட கிடையாது. ஆனால் தற்போது பல கருத்து கணிப்புகளில் பாஜக குறைந்தபட்சம் 0-3 தொகுதிகள் வரை வெல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் கேரளா சட்டசபை தேர்தலில் தாமரை மலர வாய்ப்புள்ளது. அதேவேளையில் கேரளா சட்டசபை தேர்தலில் இரட்டை இலக்கத்தில் எம்எல்ஏக்களை பெற்றுவிட வேண்டும் என்று பாஜக முயன்றது. ஆனால், பாஜகவின் அந்த முயற்சியில் பாஜகவுக்கு வெற்றி கிடைக்க வாயப்பில்லை என்பதை இந்த எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications