தொற்று குறையவே இல்லை.. கேரளாவில் ஜுன் 16 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு.. பினராயி விஜயன் அதிரடி
கேரளாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் இன்னும் வரவில்லை என்பதால் ஜுன் 16 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டதாக முதல்வர் பினராயிவிஜயன் தெரிவித்துள்ளார்.
பல்வேறு முயற்சிகள், மக்களின் ஒத்துழைப்புகள் கிடைத்ததன் விளைவாக கடந்த வருடம் கேரளாவில் தொற்று குறைந்தது.. ஆனால், இந்த முறை நிலைமை அப்படி இல்லை.
தொற்றுபரவலை தடுக்கும் வகையில் ஜுன் 9 வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.. ஆனால், கொரோனா பரவல் கட்டுக்குள் இன்னும் வரவில்லை என்பதால் ஜுன் 16 வரை அங்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டதாக மாநில முதல்வர் பினராயிவிஜயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சொல்லும்போது, "ஜுன் 12,13ல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்... அத்தியாவசிய கடைகள், சிறு தொழில்களுக்கான மூலப்பொருட்கள் விற்கும் கடைகள், கட்டுமான பொருள் கடைகள் வழக்கம்போல் செயல்படும்... வங்கிகள் திங்கள், புதன், மற்றும் வெள்ளி கிழமைகளில் செயல்படும்.
ஸ்டேஷனரி, நகை, செருப்பு, ஜவுளி, கண்ணாடி கடைகள் ஜுன் 11 மட்டும் காலை 7 முதல் இரவு 7 மணி வரை செயல்படும்... அதேபோல, அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் ஜுன் 17 முதல் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும்... தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான எல்லா உதவிகளும் செய்யப்படும்.
வாகன ஷோரூம்களில் பராமரிப்பு மையங்கள் ஜுன் 11ல் செயல்படும். ஆனால், விற்பனைக்கு அனுமதியில்லை. கேரள ஹைகோர்ட் வலியுறுத்தல்படி வக்கீல்கள் மற்றும் கோர்ட் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்கப்படும்... தனியார் பஸ் ஊழியர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications