ரூமில்.. இரவெல்லாம் ஒரே விசும்பல்.. கூடை கூடையா பணம் வேணுமே.. திடீர்னு டாக்டர் பண்ண வேலை.. ஐயோ கேரளா
திருவனந்தபுரம்: சில மாதமாக ஓய்ந்திருந்த பிரச்சனை மறுபடியும் கேரளாவில் வெடித்து கிளம்பி உள்ளது.. மீண்டும் ஒரு பெண்ணின் உயிர் அநியாயமாக பறிபோயிருக்கிறது.
பெண்கள் அதிக அளவு படித்த மாநிலம் கேரளா.. கல்விக்கென முக்கியத்துவம் தரப்படும் முதன்மை மாநிலமும்கூட.. கடவுளின் தேசம் என்று புகழப்படும் இந்த கேரளாவில்தான், எத்தனை எத்தனை வரதட்சணை கொடுமைகள்?? எத்தனை எத்தனை உயிர்கள் காவு வாங்கப்பட்டுள்ளன???

வரதட்சணை: வரதட்சணை பிரச்சனையால், கடந்த வருடம் அடுத்தடுத்து 3 பெண்கள் தற்கொலை செய்து கொண்டது இந்தியா முழுமைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. 3 பெண்களுமே 25 வயதைகூட கடக்காதவர்கள்.. 3 பெண்களுமே படித்த பட்டதாரி இளம்பெண்கள்.. 3 பெண்களுமே வசதியான வீட்டு பெண்கள்.. 3 பேரின் தற்கொலை மர்ம மரணமும், சந்தேகத்தை கிளப்பியது.
இதில், விஸ்மயாவின் மரணம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், முதல்வர் பினராயி விஜயன், மாவட்ட அளவில் குடும்பப் பிரச்சினைகள் தீர்வு மையங்களை வலுப்படுத்தும்படி வலியுறுத்தியிருந்தார்.வரதட்சணை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், என அனைவருமே ஒருமித்த குரல் எழுப்பினர்..
திமுக எம்பி: இங்கு நம் திமுக எம்பி கனிமொழியும், கேரள சம்பவத்துக்கு எதிராக கண்டன குரல் எழுப்பியிருந்தார்.. 3 முறையும், விஷப்பாம்புகளை உடம்பில் ஏவி கொடூரமாக கொல்லப்பட்டார், வாய் பேச முடியாத அந்த அப்பாவி பெண் உத்ரா.. வலியால் கதறி அழக்கூட முடியாத அந்த பெண், துடிதுடித்தே இறந்துபோனார். இதற்கும் காரணம் வரதட்சணை கொடுமைதான். இதோ இப்போது இன்னொரு பெண்ணின் உயிர் பறிபோயிருக்கிறது.. இவர் ஒரு டாக்டர்..!!
திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாரமூடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் அசீஸ்.. இவரது மகள் ஷஹ்னா.. அந்த அளவுக்கு வசதியான குடும்பம் கிடையாது.. எனினும், மகளை கஷ்டப்பட்டுதான், எம்பிபிஎஸ் படிக்க வைத்திருக்கிறார் அப்துல் அசீஸ்.
ஆபரேஷன்: திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை படித்து வந்துள்ளார் ஷஹ்னா.. தன்னுடன் தன்னுடன் படிக்கும் சக மாணவிகளுடன் மருத்துவ கல்லூரி அருகே உள்ள ஒரு அப்பார்ட்மென்ட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், ஷஹ்னாவுக்கு திருமண ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்துவந்துள்ளார்கள்.. கஷ்டப்பட்டு படிக்க வைத்து டாக்டராக்கிய தன்னை, நல்ல இடத்தில் திருமணம் செய்துவைக்கவும் முடிவு செய்துள்ளார்கள்.. ஆனால், தன்னை திருமணம் செய்து தருவதற்கு அதிக வரதட்சணை கொடுக்க வேண்டியது இருக்குமே, அந்த அளவுக்கு பணமோ, நகையோ பெற்றோரிடம் இல்லையே.. என்று ஷஹ்னா மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று இவருக்கு ஹாஸ்பிடலில் நைட் டியூட்டி இருந்திருக்கிறது.. ஆனால், ஷஹ்னா டியூட்டிக்கு செல்லவில்லை. இதனால், சக டாக்டர்கள் அவரது ரூமுக்கு சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
மன உளைச்சல்: நீண்ட நேரம் கதவை தட்டியும், கதவை திறக்கவில்லை. அதனால், உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, ஷஹ்னா மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதைபார்த்து பதறிப்போன சக டாக்டர்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் டாக்டர்கள் போராடியும் ஷஹ்னாவை காப்பாற்ற முடியவில்லை.. உயிர் பிரிந்துவிட்டது.
ஆபரேஷன் செய்யும்போது, நோயாளிகளுக்கு செலுத்தும் மயக்க ஊசியை, தானே போட்டுக் கொண்டு ஷஹ்னா தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.. போலீசார் இதுகுறித்த விசாரணையில் இறங்கி உள்ளனர். ஷஹ்னாவின் ரூமையும் ஆய்வு செய்தனர்.. அப்போது, அந்த ரூமில், கடிதம் ஒன்றை ஷஹ்னா எழுதியிருப்பதை கண்டெடுத்தனர்.
கடிதம்: அந்த கடிதத்தில், "இந்த உலகத்தில் அன்பிற்கு, எந்த மரியாதையும் கிடையாது... என் அப்பா போய் விட்டார். கல்யாணத்துக்கு வரதட்சணை கொடுக்க, கூடை கூடையாக பணம் கொடுக்க எனக்கு யாரும் இங்கில்லை. எல்லோருக்கும் பணம் மட்டும் தான் இங்கு தேவையாக இருக்கிறது" என்று எழுதியிருக்கறார் ஷஹ்னா.. இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார், விசாரணையை மேலும் தீவிரப்படுத்தினர். அப்போது மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன.
உயிரிழந்த டாக்டர் ஷஹ்னா, தன்னுடன் படித்த ஒருவரை காதலித்து வந்துள்ளார்.. கல்யாணம் செய்து கொள்ள அவரும் சம்மதித்துள்ளார். ஆனால் வரதட்சணையாக 150 பவுன் நகை, 15 ஏக்கர் நிலம், பிஎம்டபிள்யூ கார் இதெல்லாம் வேண்டும் என்று கேட்டாராம்.. காதலன் வீட்டில் இதெல்லாம் இருந்தால்தான் கல்யாணம் செய்வோம் என்று கட்டாயப்படுத்தி வந்தார்களாம்..
காதலன்: அதற்கு ஷஹ்னாவின் வீட்டிலோ, "அவ்வளவு நகை, பணம் எங்களால் கொடுக்க முடியாது" என்று குடும்ப சூழலை விளக்கியிருக்கிறார்கள்..
ஆனாலும், காதலன், "என் பெற்றோர் கேட்கும் வரதட்சணையை தர முடியாவிட்டால் திருமணம் நடக்காது" என்று கறாராக சொல்லிவிட்டாராம்.. இதைக்கேட்டு அதிர்ந்த ஷஹ்னா, கடுமையான மன உளைச்சலிலும், அதிர்ச்சியிலும் இருந்திருக்கிறார்.. இதுதான் அவரது தற்கொலைக்கு காரணம் என்று அவரது உறவினர்கள் அழுதுகொண்டே சொல்கிறார்கள்.
"இந்த உலகத்தில் அன்பிற்கு, எந்த மரியாதையும் கிடையாது" என்று டாக்டர் ஷஹ்னா எழுதி வைத்ததில்தான் எவ்வளவு பெரிய உண்மை???? உயிருக்கு உயிரான காதலே என்றாலும், உருகி உருகி அன்பை கொட்டினாலும், கடைசியில் பணம்தான் இங்கு வெற்றி பெறுகிறது போலும்????












Click it and Unblock the Notifications