"யோவ்.. வண்டியா இல்ல இது என்ன எரிமலையா?" சீன் போட்ட இளைஞரை துவைத்து எடுத்த கேரள அதிகாரிகள்
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கல்யாண வீட்டிற்கு காரில் போன ஒருவர் அலப்பறை செய்துள்ளார். காரில் சைலன்சரில் இருந்து நெருப்பு வருவது போலக் காரை மாற்றி ரவுஸ்விட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், நொடியும் தாமதிக்காமல் அவரை தூக்கிவிட்டது கேரள போலீஸ். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
கேரளா எனச் சொன்னாலே அதன் இயற்கை அழகு தான் நினைவுக்கு வரும். அந்த கேரளாவில் கொல்லம் பக்கத்தில் வசிக்கும் இவர் செய்த காரியம் நெட்டிசன்களை அதிர வைத்துள்ளது.

தீயை கக்கிய கார்
பொதுவாக நாம் கல்யாண வீட்டுக்கு வந்தால் என்ன பண்ணுவோம்? நல்லா சாப்பிடுவோம், மொய் எழுதுவோம், கிளம்புவோம். ஆனால் நம்ம ஆளு முகம்மது இர்பான் கொஞ்சம் வித்தியாசமானவர். "நான் வந்தால் சத்தம் மட்டும் வராதுடா... நெருப்பும் வரும்"னு நினைத்தார் போல! இவருடைய கார் சைலன்சர்ல இருந்து புகை வருகிறதற்குப் பதிலாக, ட்ராகன் வாயில் இருந்து வருகிற மாதிரி அனல் பறக்கிறது.
ஆமா சாகசம் எனும் பெயரில் 'சமையல்' பண்ணிருக்காரு நம்ம கார் காரரு! இது குறித்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. கார் நிற்கிறது, பின்னாடி இருந்து 'பகபக'ன்னு தீ ஜுவாலை பறக்கிறது. இதைப் பார்த்து சுத்தி நின்ற அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி. மற்றவர்களுக்கெல்லாம் காரில் இருந்து புகை வரும், இவருக்கு மட்டும் ஏன் தீ வருது? என்று அச்சமடைந்தனர்.
கொதித்த நெட்டிசன்கள்
இந்த விறகு அடுப்பு ஸ்டைல் கார் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரல் ஆன உடனே, எல்லாரும் "ஆஹா.. என்ன ஒரு கெத்து"ன்னு நினைப்பாங்கன்னு இர்பான் எதிர்பார்த்திருப்பார். ஆனால் நடந்தது என்னவோ வேற. பொதுமக்கள் "இது என்னப்பா ஊருக்கு நடுவில் தீப்பந்தம்?"னு கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மேலும், பலரும் "அடேய்... இது காருடா, காஸ் அடுப்பு இல்ல!" என கமெண்ட் செய்தனர். இன்னும் சிலர் டிராபிக் போலீசையும் டெக் செய்ய ஆரம்பித்தனர்.
கடைசியில் அந்த வீடியோ எங்கு செல்ல வேண்டுமோ.. அங்குச் சென்று சேர்ந்துவிட்டது. நம்ம கேரளா போலீஸும், போக்குவரத்துத் துறையும் (MVD) சும்மா இருப்பாங்களா? "தம்பி... உன் வண்டில வர்றது நெருப்புன்னா, நாங்க நடவடிக்கை எடுக்கிறதுதான் பொறுப்புன்னு" கிளம்பிட்டாங்க. காரோட நம்பர் பிளேட்டை வச்சு தேடியதில், பள்ளிக்கல் பகுதியைச் சேர்ந்த முகம்மது இர்பான் சிக்கிவிட்டார்.
சீனுக்குள் வந்த அதிகாரிகள்
அதிகாரிகள் இது குறித்து லெப்ட் அண்ட் ரைட் கேட்க.. "அது வந்து சார்... சும்மா ஒரு ஸ்டைலுக்கு..."ன்னு மழுப்பி இருக்கிறார். இதைக் கேட்டு டென்ஷன் மோடிற்கு போலீஸ், "உன் ஸ்டைலுக்கு ஊர்காரங்க பலியாகணுமா?" என்று சாடியுள்ளனர். அத்தோடு நிற்காமல் இர்பானின் ஓட்டுநர் உரிமம் (Driving License) 'தற்காலிகமாக' ரத்து செய்துள்ளனர். ஆனால், இது முதல் அடி தான்.
இரண்டாவது அடியாக அந்த 'தீப்பொறி' காரின் பதிவுச் சான்றிதழ் அதாவது RC ரத்து செய்துள்ளனர்.! இதனால் அந்த கார் இப்போது வெறும் இரும்பு டப்பா தான்.
ஒரு குட்டி அட்வைஸ்!
இந்தச் சம்பவத்தில் இருந்து நாம தெரிஞ்சுக்க வேண்டியது ஒண்ணே ஒண்ணு தான். அடுத்தவன் கவனத்தை ஈர்க்கணும்னு நினைத்து நாம பண்ற சில வேலைகள், கடைசியில் நம்மளையே சுத்துப்போட்டுவிடும். கல்யாண வீட்டில் தீப்பொறி பறக்கவிட்டால் பொண்ணு வீட்டுக்காரங்க வேணா மெச்சுவாங்க, ஆனால் ஆர்.டி.ஓ ஆபீஸில் துவைச்சு எடுத்துடுவாங்க!
எனவே, மக்களே, உங்கள் வண்டில சைலன்சர் வழியா புகையை மட்டும் வரவிடுங்கள். அங்கே பார்பிக்யூ பார்ட்டி பண்ணலாம்னு நினைச்சீங்கன்னா, இர்பானுக்கு நடந்த நிலைமை தான் நமக்கும்.!
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை.. ரூ.34 கோடி 'ரத்த பணம்' செலுத்தி மீட்ட கேரள மக்கள் -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications