சபரிமலை வன்முறை.. அறிக்கை கொடுங்க மிஸ்டர் பினராயி விஜயன்.. கேரள ஆளுநர் சதாசிவம் அதிரடி..
Recommended Video

திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரம் தொடர்பாக, கேரளாவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதுதொடர்பாக, அறிக்கை தாக்கல் செய்யுமாறு முதல்வர் பினராயி விஜயனிடம் ஆளுநர் சதாசிவம் கோரியுள்ளார்.
சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் 2 பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. பாஜக மற்றும் சில இந்து அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது, கோழிக்கோடு, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் வன்முறை மூண்டது.

தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர். வன்முறை சம்பவங்களில் தொடர்புடையதாக இதுவரை 750க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வன்முறை தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயனிடம் உடனடியாக அறிக்கை சமர்பிக்குமாறு ஆளுநர் சதாசிவம் கோரியுள்ளார்.
Sought from Chief Minister @CMOKerala an urgent Law and Order report on the incidents of violence and destruction of private & public property in Kerala following entry of two young women in #Sabarimala temple.
— Kerala Governor (@KeralaGovernor) January 3, 2019
I appeal to all sections of people to maintain calm & peace
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், கலவரம் காரணமாக ஏற்பட்ட சட்டம் - ஒழுங்கு பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் அறிக்கை அளிக்க வேண்டுமெனவும், அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications