நடிகர் திலீப்பை லேசில் விடாத கேரள அரசு.. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய பினராயி விஜயன் முடிவு
திருவனந்தபுரம்: பிரபல நடிகையை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இது குறித்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நடிகை தரப்பு பக்கமே அரசு நிற்கிறது என்றும் தீர்ப்பை எதிர்ப்பு மேல் முறையீடு செய்ய இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே உள்ள அத்தாணி பகுதியில், கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவனில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் காரில் வந்த கும்பல், நடிகையின் கேரவனைத் தடுத்து நிறுத்தி, அதன் உள்ளே அத்துமீறி நுழைந்தது.

நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமை
பின்னர் கேரவனில் இருந்த நடிகையை பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு, ஆபாச புகைப்படம் எடுத்து, சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டியதாக தெரிகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அந்த நடிகை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு மாநில குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர்கள் நடத்திய விசாரணையில் நடிகையின் கார் டிரைவரான பெரும்பாவூர் அருகே கூலிப்படையை சேர்ந்த பல்சர் சுனில் என்கிற சுனில் குமார் உள்ளிட்ட சிலர் நடிகையிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பல்சர் சுனிலிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இந்த சம்பவத்தில் பிரபல நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.
நடிகர் திலீப் கைது
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் திலீப்புக்கும் அந்த நடிகைக்கும் முன்விரோதம் இருந்து வந்ததும், அதன் காரணமாக நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டி நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்க ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து நடிகர் திலீப், பல்சர் சுனில் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் பல்சர் சுனில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இரண்டாவது குற்றவாளியாக மார்ட்டின் ஆண்டனி, 3வது குற்றவாளியாக மணிகண்டன், 4வது குற்றவாளியாக விஜீஷ், 5வது குற்றவாளியாக சலீம், 6-வது குற்றவாளியாக பிரதீப், 7வது குற்றவாளியாக சார்லி தாமஸ், 8வது குற்றவாளியாக நடிகர் திலீப், 9வது குற்றவாளியாக சுனில் குமார், 10வது குற்றவாளியாக சரத் நாயர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். திலீப் மீது சதித்திட்டம் தீட்டுதல், ஆதாரங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
நடிகர் திலீப் விடுதலை
ஆனால், அந்த வழக்கில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், தன்னை திட்டமிட்டு சிக்கவைத்துள்ளதாகவும் நடிகர் திலீப் தெரிவித்துள்ளார். வழக்கில் மொத்தம் 251 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களில் 28 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினர். பாதிக்கப்பட்ட நடிகையிடம் ரகசிய வாக்குமூலமும் பெறப்பட்டது. அப்போது அவரது கோரிக்கையை ஏற்று பெண் நீதிபதி வழக்கை விசாரித்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹனி வர்கிஸ், வழக்கின் தீர்ப்பு கடந்த 8ஆம் தேதி அறிவித்தார். இதன்படி, இந்த வழக்கில் கபல்சர் சுனில், மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜீஷ், சலீம், பிரதீப் ஆகிய 6 பேரையும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். வழக்கில் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த நடிகர் திலீப், சார்லி தாமஸ், சுனில் குமார், சரத் நாயர் ஆகிய 4 பேரையும் விடுதலை செய்தார்.
பினராயி விஜயன் பேச்சு
தீர்ப்பை அறிந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்ட நடிகர் திலீப், தனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும், தனது சினிமா கேரியரை அழிக்க முயற்சிகள் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நான் சிக்க வைக்கப்பட்டேன் என்று கூறினார். மேலும், தீர்ப்பு நகல் கிடைத்ததும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என திலீப் கூறினார்.
இதனிடையே, நடிகர் திலீப் வழக்கு தொடர்பாக கேரள முதவர் பினராயி விஜயனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த பினராயி விஜயன், "இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நடிகை தரப்பு பக்கமே அரசு நிற்கிறது என்றும் தீர்ப்பை எதிர்ப்பு மேல் முறையீடு செய்ய இருக்கிறோம்" என்று கூறியுள்ளார். கேரள அரசின் இந்த நிலைப்பாட்டால் நடிகர் திலீப்பிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications