18 வயது நிரம்பாவிட்டால் மனைவியாக இருந்தாலும் தாம்பத்யம் தவறு! சிறுமி வழக்கில் ஹைகோர்ட் அதிரடி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: 18 வயது நிரம்பாத சிறுமி, மனைவியாகவே இருந்தாலும் தாம்பத்யம் வைப்பது சட்டப்படி குற்றம் என கேரள மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 17 வயது சிறுமியின் திருமண வழக்கில் இது போன்ற ஒரு உத்தரவை ஹைகோர்ட் பிறப்பித்துள்ளது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கு புது டிரஸ் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறிய இளைஞர், அந்த சிறுமியை காரில் ஏற்றிக் கொண்டு தனது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது.

Kerala Highcourt

அந்த சிறுமியை சீரழித்த காமூகன், சிறுமியை அவரது வீட்டு வாசலில் இறக்கிவிட்டுச் சென்றாராம். பின்னர் அழுதுக் கொண்டே வந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரணை நடத்தியதில், நடந்தவற்றை எல்லாம் அவர் சொன்னார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், போலீஸில் புகார் அளிக்காமல், அந்த இளைஞரின் வீட்டாருடன் சிறுமியின் பெற்றோர் பேச்சுவார்த்தை நடத்தி சிறுமியை அவருக்கே திருமணம் செய்து வைத்தனராம்.

இந்த தகவலறிந்த மன்னார்காடு போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்து கொண்ட இளைஞரை கைது செய்தனர். இதையடுத்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் அந்த நபர் கேரள ஹைகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்திருந்தார்.

அதில் "முஸ்லீம் தனிநபர் சட்டத்தின் கீழ் தான் செய்தது குற்றம் இல்லை, இரு வீட்டார் ஒப்புதலுடன்தான் சிறுமியை திருமணம் செய்து கொண்டேன். எனவே என் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய வேண்டும். வழக்கில் இருந்தும் என்னை விடுவிக்க வேண்டும்" என அவர் அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி அமர்வு ஜோபின் செபாஸ்டியன் விசாரித்தார். தனிநபர் சட்டத்தை விட போக்சோ சட்டத்திற்கு தான் முன்னுரிமை கூடுதலாக இருக்கிறது.

சிறுமியை திருமணம் செய்து பாலியல் அத்துமீறல் செய்த போது அவருக்கு வயது 17 ஆண்டு ஒரு மாதம்தான் என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் குற்றம் செய்துள்ளார். அத்துடன் சிறுமியின் பெற்றோரும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தங்கள் மகளுக்கு நடந்த கொடூரத்தை பெற்றோர், போலீஸில் புகார் கொடுக்கவில்லை. முஸ்லீமாக இருந்தாலும் சிறுமிக்கு 18 வயதுக்கு கீழே உள்ள போது தனிநபர் சட்டங்கள் வழக்கில் செல்லுபடியாகாது. போக்சோ வழக்கில் இருந்து இளைஞரை விடுவிக்க முடியாது என கூறி அவரது மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவே போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை நீர்த்து போகும் வகையில் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது எனவே மனைவியாக இருந்தாலும் 18 வயது நிரம்பாத சிறுமியுடன் தாம்பத்யம் வைப்பது தவறு என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+