லேட்டாக வந்த 'சிக்கன் ரைஸ்'.. ஓட்டல் ஓனருக்கு குடும்பத்துக்கு நேர்ந்த பயங்கரம்.. கேரளாவில் ஷாக்
திருவனந்தபுரம்: சிக்கன் ஃப்ரைட் ரைஸ் லேட்டாக வந்தததால் ஆத்திரமடைந்த ஒருவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து ஓட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் உடல் முழுவதும் பலத்த வெட்டுக் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட 3 பேரும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் அடுத்தடுத்து கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், ஒரு குடும்பமே கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மிரட்டும் கேரளா..
கேரளாவில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்கள் அந்த மாநிலத்தை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கி வருகிறது. குறிப்பாக, மந்திரவாதி ஒருவரால் இரண்டு பெண்கள் நரபலிகள் கொடுக்கப்பட்டு அவர்களின் உடல்கள் சமைத்து சாப்பிடப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல, தனது காதலனுக்கு விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து காதலி கொலை செய்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இதுபோன்ற ஒரு பயங்கர சம்பவம் அங்கு நடைபெற்றுள்ளது.

சிக்கன் ரைஸ் ஆர்டர்..
கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள மூணார் பகுதியில் 'சாகர்' என்ற பெயரில் பிரபல அசைவ ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. மூணார் சுற்றுலா தலம் என்பதால் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஓட்டலுக்கு சென்று உணவருந்துவது வழக்கம். இந்நிலையில், நேற்று மதியம் அந்த ஹோட்டலுக்கு அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (33) என்பவர் சாப்பிடச் சென்றுள்ளார். சிக்கன் ஃப்ரைட் ரைஸை அவர் ஆர்டர் செய்தார்.

தாமதமானதால் ஆத்திரம்..
இந்நிலையில், சிக்கன் ரைஸ் ஆர்டர் செய்து 15 நிமிடங்களாகியும் அவருக்கு உணவு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், கல்லாவில் உட்கார்ந்திருந்த ஓட்டல் உரிமையாளரின் மகன் சாகரிடம் (27) இதுகுறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர், "முதலிலேயே சுற்றுலா பயணிகள் வந்துவிட்டனர். அதனால் அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.. நீங்கள் சிறிதுநேரம் காத்திருக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதில் அங்கிருந்த ஓட்டல் ஊழியர்கள் மணிகண்டனை வெளியேற்றியுள்ளனர்.

ஓட ஓட விரட்டி..
இதனால் அவமானம் அடைந்த மணிகண்டன் தனது நண்பர்களை செல்போனில் தொடர்புகொண்டு தன்னை ஓட்டல் ஊழியர்கள் அடித்துவிட்டதாக கூறினார். இதையடுத்து, சிறிது நேரம் கழித்து அந்த ஓட்டலுக்கு வந்த மணிகண்டனின் நண்பர்கள் 3 பேர், தாங்கள் வைத்திருந்த அரிவாளை எடுத்து ஓட்டல் உரிமையாளர் பிரசாந்த் (54), அவரது மனைவி வினிலா (44), மகன் சாகர் ஆகியோரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதனை பார்த்த பொதுமக்கள் பயத்தில் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

கவலைக்கிடம் - கைது நடவடிக்கை
இந்த சம்பவத்தில் பலத்த வெட்டுக் காயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். தகலவலறிந்த போலீஸார் அங்கு வந்து அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பயங்கர செயலில் ஈடுபட்ட ஜான் பீட்டர் (25), தாமஸ் (31), சின்னப்ப ராஜ் (34), மணிகண்டன் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications