காலையில் தேசிய கொடியேற்றி குஷி.. மாலையில் ஆட்டி ஆட்டி கொடியை இறக்கி.. அப்படியென்ன அவசரம் பாதிரியார்?
திருவனந்தபுரம்: கடினமான மனச்சூழலில் சிக்கியிருக்கும் கேரளா இன்னும் மீண்டு வரவில்லை.. அதற்குள் இன்னொரு சோகம் கேராளவை கவ்விக் கொண்டிருக்கிறது.. என்ன நடந்தது காசர்கோட்டில்? யாரிந்த பாதிரியார்?
கேரளாவில், கடந்த 15ம்தேதி, நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து, உரையாற்றினார் முதல்வர் பினராயி விஜயன்.

"வயநாடு நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தால், நாட்டில் உள்ள அனைவரும் சோகமாக இருக்கும் நிலையில், மாநிலத்தின் உயிர்வாழ்விற்காக வாழ்ந்து முன்னேற வேண்டிய நேரம் இது" என்று தன்னுடைய பேச்சை தொடங்கியிருந்தார் பினராயி.
கொண்டாட்டம்: அதேநாளில், கேரள மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டுள்ளது.. அந்தவகையில், காசர்கோடு மாவட்டம் முல்லைரியா பகுதியில், குழந்தை இயேசு தேவாலயம் ஒன்று உள்ளது.. இந்த சர்ச்சில் மேத்யூ என்பவர் பாதிரியாராக உள்ளார்..
இந்த சர்ச்சில் சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.. அப்படித்தான் இந்த முறையும் சுதந்திர தனத்தை முன்னிட்டு, சர்ச்சில் முன்தினமே சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.. கடந்த 15ம் தேதியன்று காலையிலேயே தேசிய கொடியும் ஏற்றி வைக்கப்பட்டது. பாதிரியார் மேத்யூ இந்த தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.. பிறகு அங்கிருந்த அனைவரையும் உறுதிமொழி எடுக்கவும் வைத்தார்.
மேத்யூ: இதையடுத்து, அன்று மாலை 6 மணியளவில் தேசிய கொடியை இறக்குவதற்காக மேத்யூ சென்றார்.. அப்போது கயிற்றிலிருந்து இறக்கும்போது, திடீரென தேசிய கொடி சிக்கிக்கொண்டுவிட்டது. அதனால் கயிற்றிலிருந்து கொடியை அகற்ற முயன்றும் முடியவில்லை. எனவே, பாதிரியாரின் உதவியாளர் செர்பின் ஜோசப் என்பவரும் விரைந்து வந்து, தேசிய கொடியை அவிழ்க்க முயன்றார். அவராலும் முடியவில்லை.
ஒருகட்டத்தில் மேத்யூ, கொடிக்கம்பத்தை ஆட்டி ஆட்டி தேசிய கொடியை இறக்க முயன்றார்.. அப்போது, பக்கத்தில் சென்று கொண்டிருந்த மின்வயரில் கொடிக்கம்பம் பட்டுவிட்டது.
கரண்ட் பாய்ந்தது: இதில் கொடிகம்பத்தில் மின்சாரம் பாய்ந்தது.. இதில், 2 பேருமே தூக்கி வீசப்பட்டனர்.. இதைப்பார்த்து அலறிய அங்கிருந்தவர்கள், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், பாதிரியார் மேத்யூ இறந்துவிட்டார்.. செர்பினுக்கு தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.
இந்த குழந்தை இயேசு சர்ச்சில், கடந்த ஒன்றரை ஆண்டு காலமாகத்தான், பாதிரியாராக பணியாற்றி வந்திருக்கிறார் ஜோசப். இயல்பாகவே அன்பும், கருணையும் நிறைந்தவராம் பாதிரியார்.
ஏழைகளுக்கு உதவி செய்வதிலேயே எந்நேரமும் ஈடுபட்டிருப்பாராம்.. சமூக அக்கறை நிறைந்ததால், சேவைகளை அபரிமிதமாகவே செய்து வந்துள்ளார்.. இளம் வயதிலேயே துறவு வாழ்க்கையையும் மேற்கொண்டுள்ளார். எம்எஸ் டபிள்யூவும் படித்திருக்கும், பாதிரியாருக்கு வயசு வெறும் 29தான் ஆகிறது...
பெருத்த சோகம்: காலையில் தேசிய கொடியை ஏற்றி, மாலையில் அதை இறக்கும்போதே பாதிரியார் இறந்துள்ளது, கேரளாவில் கூடுதல் சோகத்தை தந்துவருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications