திமிறி எழுந்த காங்கிரஸ்.. கேரளா உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி.. இடதுசாரிகள் - பாஜகவுக்கு பெரிய ஷாக் - முழு ரிசல்ட்
திருவனந்தபுரம்: கேரளாவில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை எண்ணப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது.இதில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இடதுசாரிகளின் கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி பெரிதாக சோபிக்கவில்லை.
அடுத்த ஆண்டு கேரளாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள இந்த தேர்தலில் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு கிராம பஞ்சாயத்து, பிளாக் பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சிகளை கைப்பற்றியது என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டணியின் முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பினராயி விஜயன் செயல்பட்டு வருகிறார். இந்த ஆளும் கூட்டணிக்கு எல்டிஎப் என்று பெயர் உள்ளது. அதேபோல் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு யூடிஎப் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கேரளாவில் தனது செல்வாக்கை அதிகரிக்கும் முனைப்பில் பாஜகவும் செயல்பட்டு வருகிறது. அதேபோல் இன்னும் சில சிறிய கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் கேரளாவில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்குள்ள கிராம பஞ்சாயத்து, பிளாக் பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி என்று அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கடந்த 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
முதல் கட்டமாக டிசம்பர் 9 அன்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெற்றது. முதல் கட்டத்தில் 70.91% வாக்குகள் பதிவாகி இருந்தன. தொடர்ந்து டிசம்பர் 11 அன்று நடைபெற்ற 2ஆவது கட்ட தேர்தல் திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர், பாலக்காடு, வயநாடு, மலப்புரம், காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெற்றது. 2ஆம் கட்டத்தில் 76.08% வாக்குகள் பதிவாகின.
மாநிலம் முழுவதும் மொத்தமுள்ள 12,000 வார்டுகளில் 38,994 வேட்பாளர்கள் களத்தில் உள்ளன. கேரளாவை எடுத்து கொண்டால் மொத்தம் 941 கிராம பஞ்சாயத்துகள், 152 பிளாக் பஞ்சாயத்துகள், 14 மாவட்ட பஞ்சாயத்துகள், 86 நகராட்சிகள், 6 மாநகராட்சிகள் உள்ளன.
இதில் திருவனந்தபுரம், கோழிக்கோடு, ,கொச்சி, கொல்லம், திரிச்சூர், கண்ணூரில் மாநகராட்சிகள் உள்ளன. இந்நிலையில் தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. விறுவிறுப்பாக ஓட்டு எண்ணிக்கை நடந்தது.
* கேரளாவில் மொத்தம் 941 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் 504 கிராம பஞ்சாயத்துகளை காங்கிரஸ் கூட்டணி (யுடிஎஃப்) கைப்பற்றியது. 341 கிராம பஞ்சாயத்துகளை எல்டிஎஃப் எனும் இடதுசாரிகளின் கூட்டணி கைப்பற்றியது. 26 கிராம பஞ்சாயத்துகளை பாஜக கைப்பற்றிய உள்ளது.
* பிளாக் பஞ்சாயத்தை எடுத்துகொண்டால் மொத்தம் 152 உள்ளது. இதில் காங்கிரஸ் கூட்டணி 75, இடதுசாரிகளின் கூட்டணி 53 பிளாக் பஞ்சாயத்தை கைப்பற்றியது. 24 பிளாக் பஞ்சாயத்தில் எந்தகூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜவுக்கும் ஒரு பிளாக் பஞ்சாயத்து கூட கிடைக்கவில்லை.
* அதேபோல் 14 மாவட்ட பஞ்சாயத்துகளில்காங்கிரஸ் கூட்டணி, இடதுசாரிகளின் கூட்டணி தலா 6 மாவட்ட பஞ்சாயத்துகளை கைப்பற்றியது. பாஜகவுக்கு மாவட்ட பஞ்சாயத்து கிடைக்கவில்லை. 2 மாவட்ட பஞ்சாயத்துகளில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
* நகராட்சிகள் என்று எடுத்து கொண்டால் மொத்தம் 87 உள்ளன. இதில் காங்கிரஸ் கூட்டணி 54 நகராட்சி, இடதுசாரிகளின் கூட்டணி 28 நகராட்சிகளை கைப்பற்றியது. 31 நகராட்சிகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 2 நகராட்சிகளை கைப்பற்றி உள்ளது.
* கேரளாவில் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொல்லம், கொச்சி, திரிச்சூர், கண்ணூர் என்று மொத்தம் 6 மாநகராட்சிகள் உள்ளன. இதில் 4 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி கொல்லம், கொச்சி, திரிச்சூர், கண்ணூர் மாநகராட்சியில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மாறாக கோழிக்கோடு மாநகராட்சியில் ஆளும் இடதுசாரிகளின் கூட்டணியும், திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக கூட்டணியும் வென்று கைப்பற்றி உள்ளது.
கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 244 ஓட்டு எண்ணும் மையங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையையொட்டி கேரளாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றோர் டிசம்பர் 21ம் தேதி பதவி ஏற்க உள்ளனர்.
கேரளாவில், தமிழகத்தை போல் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த தேர்தல் முடிவுகள் அதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இதனால் கேரளா உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. தற்போது உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
இது அந்த கட்சிக்கான எழுச்சியாகவும், கட்சியினருக்கு புத்துணர்ச்சியையும் கொடுத்துள்ளது. அதேவேளையில் இடதுசாரிகளுக்கு இந்த தேர்தல் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. பாஜகவுக்கும் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றி கிடைக்காவிட்டாலும் கூட தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியதை கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இது பாஜகவினருக்கு உத்வேகம் அளித்துள்ளது.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications