திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேரள உள்ளாட்சி தேர்தல்: 6-ல் 5 மாநகராட்சிகளை வசமாக்கிய இடதுசாரிகள்! நகராட்சிகள் காங். வெற்றி கொடி!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளா உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் 5-ஐ இடதுமுன்னணி கைப்பற்றியுள்ளது. 86 நகராட்சிகளில் காங். தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 45 இடங்களைக் கைப்பற்றி வெற்றி கொடி நாட்டியுள்ளது.

Recommended Video

    30 வருடங்களுக்கு பிறகு.. சாதனை படைக்க போகும் இடதுசாரிகள்

    கேரளா உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தொடக்கம் முதலே இடது முன்ணி, காங். கூட்டணி சமமான பலத்தில் இருந்து வந்தன. பாஜகவுக்கு 3-வது இடம் என்று கூட சொல்ல முடியாமல் சொற்ப இடங்களில் முன்னணி வகித்தன.

    Kerala Local Body Elections 2020: Left alliance gets big win

    6 மாநகராட்சிகளில் திருவனந்தபுரம் உள்ளிட்ட 5 மாநகராட்சிகளை இடதுசாரிகள் கைப்பற்றியுள்ளன. திருவனந்தபுரம், கொல்லம், கொச்சின், திருச்சூர் மற்றும் கோழிக்கோடு மாநகராட்சிகள் இடதுசாரிகள் வசமாகின. கண்ணூர் மாநகராட்சி மட்டும் காங்கிரஸ் வசமானது.

    86 நகராட்சிகளில் காங். தலைமையிலான அணி 45-ல் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் இடதுமுன்னணி 35 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. இதர கட்சிகள் 4 நகராட்சிகளையும் பாஜக 2 நகராட்சிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.

     எது எப்படியோ... கேராளவில் பாஜகவுக்கு இடமில்லை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது -ரமேஷ் சென்னிதாலா எது எப்படியோ... கேராளவில் பாஜகவுக்கு இடமில்லை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது -ரமேஷ் சென்னிதாலா

    14 மாவட்ட பஞ்சாயத்துகளில் ஆளும் இடது முன்னணி 10-லும் காங். அணி 4 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.

    941 கிராம பஞ்சாயத்துகளில் இடதுமுன்னணி 514; காங். அணி 375 இடங்களை பெற்றுள்ளன. இதரவை 29 இடங்களிலும் பாஜக அணி 23 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

    English summary
    Kerala's ruling Leftled coalition today got a big win in local body Elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X