திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவு LIVE Updates: எல்.டி.எஃப் கூட்டணியிடம் திணறும் யு.டி.எஃப். கூட்டணி..!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவை ஆளும் இடதுசாரி ஜனநாயக கூட்டணி பல இடங்களில் தொடர்ந்து முன்னிலை - காங்கிரஸ், முஸ்லீம் லீக் கட்சிகள் உள்ளடங்கிய ஐக்கிய ஜனநாயக கூட்டணி திணறல்

Newest First Oldest First
10:47 AM, 16 Dec

இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு மீது தங்கக்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன் வைத்தும் அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதை கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன.
10:44 AM, 16 Dec

திருவனந்தபுரம் - கன்னூர் -கொல்லம் -கோழிக்கோடு ஆகிய 4 மாநகராட்சிகளில் கேரளாவை ஆளும் இடது சாரி ஜனநாயக முன்னணி வெற்றிமுகத்தில் உள்ளது.
10:44 AM, 16 Dec

கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவு - பாலக்காடு நகராட்சியில் பாஜக தொடர்ந்து முன்னிலை
10:39 AM, 16 Dec

கேரளாவை ஆளும் இடதுசாரி ஜனநாயக கூட்டணி பல இடங்களில் தொடர்ந்து முன்னிலை - காங்கிரஸ், முஸ்லீம் லீக் கட்சிகள் உள்ளடங்கிய ஐக்கிய ஜனநாயக கூட்டணி திணறல்
8:59 AM, 16 Dec

கேரள உள்ளாட்சி தேர்தல் வாக்கு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன. வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
8:59 AM, 16 Dec

கேரளாவில் டிசம்பர் 8-ந் தேதி முதல் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு பதிவு நடந்தது. 14 மாவட்டங்களின் 3 கட்ட வாக்குப் பதிவுகளிலும் சுமார் 76.63% பேர் வாக்களித்தனர்.
8:59 AM, 16 Dec

டிசம்பர் 8-ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 75 சதவீதம் வாக்குகள் பதிவு. டிசம்பர் 10-ம் தேதி நடைபெற்ற 2-ம் கட்ட தேர்தலில் 76.78 சதவீதம் பேர் வாக்களித்தனர்.
8:59 AM, 16 Dec

டிசம்பர் 14-ம் தேதி நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தலில் 78.62 சதவீதம் வாக்குகள் பதிவாயின.
8:59 AM, 16 Dec

அந்தந்த மாவட்ட தலைமையகத்தில் பாதுகாப்ப படையின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள, வாக்கு பெட்டிகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது
8:59 AM, 16 Dec

இன்று காலை 8 மணிக்கு 244 வாக்கு எண்ணிக்கை மையங்களில் தொடங்கியது. கொரோனா பரவல் காலம் என்பதால் சமூக இடைவெளியுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது
8:58 AM, 16 Dec

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன
8:58 AM, 16 Dec

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.
8:58 AM, 16 Dec

இன்று காலை 8 மணிக்கு 244 வாக்கு எண்ணிக்கை மையங்களில் தொடங்குகிறது. கொரோனா பரவல் காலம் என்பதால் சமூக இடைவெளியுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
8:58 AM, 16 Dec

அந்தந்த மாவட்ட தலைமையகத்தில் பாதுகாப்ப படையின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள, வாக்கு பெட்டிகளை எண்ணும் பணி இன்று நடைபெற உள்ளது.
8:57 AM, 16 Dec

டிசம்பர் 14-ம் தேதி நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தலில் 78.62 சதவீதம் வாக்குகள் பதிவாயின.
8:57 AM, 16 Dec

டிசம்பர் 8-ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 75 சதவீதம் வாக்குகள் பதிவு. டிசம்பர் 10-ம் தேதி நடைபெற்ற 2-ம் கட்ட தேர்தலில் 76.78 சதவீதம் பேர் வாக்களித்தனர்.
8:57 AM, 16 Dec

கேரளாவில் டிசம்பர் 8-ந் தேதி முதல் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு பதிவு நடந்தது. 14 மாவட்டங்களின் 3 கட்ட வாக்குப் பதிவுகளிலும் சுமார் 76.63% பேர் வாக்களித்தனர்.
8:57 AM, 16 Dec

கேரள உள்ளாட்சி தேர்தல் வாக்கு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன. வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

Kerala local body elections counting of votes today Live Updates
English summary
Kerala local body elections counting of votes today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X