கேரளாவில் லாட்டரி டிக்கெட்டால் வெடித்த பஞ்சாயத்து.. கடும் எதிர்ப்பை காட்டும் பாஜக! என்ன நடந்தது?
திருவனந்தபுரம்: கேரளாவில் வாரம் தோறும் வெள்ளிக் கிழமைகளில் சுவர்ண கேரள லாட்டரி விற்பனையாகிறது. வரும் 2 ஆம் தேதி குலுக்கல் நடைபெறும் சுவர்ண கேரள லாட்டரியில், புதிய ஆர்ட் வொர்க் டிசைன் இடம் பெற்றுள்ளது. இந்த டிசைன் இந்து மத நம்பிக்கையை இழிவு செய்யும் வகையில் இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
கேரளாவில் தினமும் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும். இது போக வருஷத்திற்கு 6 பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளும் விற்கப்படுகின்றன. இதற்கு பல கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது.

சர்ச்சையை கிளப்பிய லாட்டரி டிக்கெட்
இதில் வெள்ளிக்கிழமை தோறும் சுவர்ண கேரள லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெறும். அந்த வகையில் வரும் 2 ஆம் தேதி குலுக்கல் நடைபெறும், SK 34 "சுவர்ண கேரளா" மாநில லாட்டரி சீட்டு ஓவியம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மத உணர்வுகளை புண்படுத்துவதாக பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மாநில அரசு மீது குற்றம் சாட்டியுள்ளது.
மாநில பாஜக பொதுச்செயலாளர் எஸ். சுரேஷ், தனது பேஸ்புக்கில் இது தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தனது பேஸ்புக்கில் சுரேஷ் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
ஐயப்பனின் செல்வத்தை மட்டும்
எந்த மதமாக இருந்தாலும், நம்பிக்கையை அவமதிக்கக்கூடாது. இது என்ன....? இந்துக்களையும் இந்து நம்பிக்கைகளையும் அவமதிப்பதாக இருக்கிறது. இதை நம்மால் தடுக்க முடியாதா? பாலியல் வக்கிரங்களை கலாச்சாரமாக வெளிப்படுத்தும் கம்யூனிஸ்ட்களின் செயலை நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.
கடவுள் ஐயப்பனின் செல்வத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் பினராயி விஜயனும், அவரது நண்பர்களும், சுவர்ண கேரளம் என்ற லாட்டரியில் சிவலிங்கத்தின் மீது மாதவிடாய் இரத்தத்தை ஊற்றுவது போல சித்தரித்து கடவுள் நம்பிக்கையாளர்களை அவமதித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
கேரள லாட்டரி துறை விளக்கம்
கேரளாவில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள கேரள லாட்டரி துறை, குறிப்பிட்ட அந்த ஓவியம் எந்த மதச் சின்னத்தையும் சித்தரிக்கவோ, தவறாகப் பயன்படுத்தவோ இல்லை" என்று தெரிவித்துள்ளது.
லாட்டரிச் சீட்டுகளுக்கான கலைப்படைப்புகள், கேரள லலிதகலா அகாடமியுடன் ஒப்பந்தப்படி, பல்வேறு கலைஞர்களின் ஓவியங்களிலிருந்து தேர்வு செய்யப்படுவதாகவும் கேரள லாட்டரி துறை விளக்கம் அளித்துள்ளது. இது போன்ற கலைப்படைப்புகள் பல ஆண்டுகளாக கேரள லாட்டரிச் சீட்டுகளில் இடம் பெற்றுள்ளன.
மத அடையாளத்தை இழிவுபடுத்தவில்லை
ஜனவரி 2, 2026 அன்று குலுக்கல் நடைபெற இருக்கும் SK 34 சுவர்ண கேரளா லாட்டரி சீட்டுக்கான ஓவியமும் லலிதகலா அகாடமியிடம் இருந்து பெறப்பட்டது. இந்த ஓவியத்தை ஆய்வு செய்ததில், மதச் சின்னங்களோ, உருக்குலைந்த காட்சிகளோ கண்டறியப்படவில்லை.
"ஓவியம் என்பது கலைப்படைப்பு என்பதால், அதில் உள்ள வடிவங்களைத் தெளிவாக வரையறுக்கவோ விளக்கவோ முடியாத ஒன்றாகும்" என்று கூறியுள்ள கேரள லாட்டரி துறை, எந்த ஒரு மதத்தின் அடையாளத்தையும் எந்த வகையிலும் நாங்கள் இழிவுபடுத்தவில்லை. பல லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரமாக இருக்கும் லாட்டரிக்கு உரிய ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி
தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் சுவர்ண கேரளம் லாட்டரி டிக்கெட்டின் விலையும் ரூ.50 ஆகும். இதற்கான முதல் பரிசாக ரூ.1 கோடி அளிக்கப்படுகிறது. கேரளாவில் தினசரி டிக்கெட் குலுக்கல் போக வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கலும் நடைபெறுகிறது. சீசனுக்கு ஏற்றபடி டிக்கெட் குலுக்கல் நடைபெறுகிறது. அந்த வகையில் தற்போது கிறிஸ்துமஸ் - நியூ இயர் பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த டிக்கெட்டின் விலை ரூ.400 ஆகும். இதற்கு முதல் பரிசாக ரூ.20 கோடி அளிக்கப்படுகிறது.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ்












Click it and Unblock the Notifications