Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kerala Lottery: கேரளா லாட்டரியில் 1 கோடி பரிசு.. ஆசையாய் போனவரை கடத்தி சென்று டிக்கெட்டை பறித்த கள்ளச்சந்தை கேங்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள லாட்டரியில் (Kerala Lottery) ரூ.1 கோடி பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு கள்ளச்சந்தை கும்பல் விபூதி அடித்துள்ளது. ஆசை ஆசையாய் போனவரை காரில் கடத்திய கும்பல் டிக்கெட்டை பறித்துள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த லாட்டரி மோசடி பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகள் ரொம்பவே பிரபலமாக உள்ளன. மாநில அரசே லாட்டரி டிக்கெட்டுகளை அச்சிட்டு விற்பனை செய்கிறது. அங்கு வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் மட்டுமின்றி, தினசரி ரூ.1 கோடி பரிசுத் தொகை கொண்ட லாட்டரி டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

Kerala Lottery Cheating Rs1 Crore Winner Kidnapped Ticket Stolen in Suspected Black Market Scam

கேரள லாட்டரி டிக்கெட்டுகள்

தினந்தோறும் குலுக்கல் நடைபெற்று, தினமும் ஒருவருக்கு ஒரு கோடி பரிசு அளிக்கப்படுகிறது. இந்த டிக்கெட்டின் விலை ரூ.50 ஆகும். வாழ்க்கையில் நமக்கும் ஒருநாள் அதிர்ஷ்டம் விடாதா? ஒரே நாளில் பணக்காரர் ஆகிவிடமாட்டோமா என்ற எதிர்பார்ப்புடன் லாட்டரி பிரியர்கள் பலரும் அங்கு லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதை பார்க்க முடிகிறது.

கேரளாவில் திரும்பிய பக்கமெல்லாம் லாட்டரி கடைகளை பார்க்க முடியும். சாலையோர கடைகளிலும், நடை வியாபாரமாகவும் பலரும் டிக்கெட்டுகள் விற்பனை செய்வதை பார்க்க முடியும். கேரளாவில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும் இந்த லாட்டரி டிக்கெட்டுகள் உள்ளன. லாட்டரியைப் பொறுத்தவரை பல லட்சக்கணக்கானவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே பரிசு அடிக்கிறது.

பரிசு அடித்தவருக்கு விபூதி அடித்த கும்பல்

மற்றவர்களுக்கு லாட்டரிக்கு அளித்த தொகை கூட வீணாக போகிறது என்பதுதான் யதார்த்தம். ஆனாலும் பலருக்கும் லாட்டரி மீதான மோகம் குறைந்தபாடில்லை. தமிழ்நாட்டில் நல்ல வேளையாக லாட்டரிக்கு தடை இருக்கிறது. ஆனாலும் கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகளை சிலர் விற்கிறார்கள். என்னதான் போலீஸ் அதிரடி காட்டினாலும், ஆங்காங்கே ஒரு சில இடங்களில் விற்பனை நடைபெறுகிறது.

லாட்டரி தடை உள்ள தமிழ்நாடு, கர்நாடகாவில்தான் இப்படி மோசடி நடைபெறுகிறது என்றால், கேரளாவிலும் லாட்டரியை வைத்து பல மோசடிகள் நடைபெறுகின்றன. வாட்ஸ் அப்பில் டிக்கெட்டை விற்று, பரிசு விழுந்தால் டிக்கெட்டை கொடுக்க மறுப்பது என பல்வேறு மோசடிகள் நடைபெறுகின்றன. கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு மோசடிதான் கேரளாவில் கண்ணூரில் நடைபெற்றுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

கள்ளச்சந்தை கும்பல்

கடந்த மாதம் 30ஆம் தேதி கேரள ஸ்ரீசக்தி லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசு அடித்த லாட்டரி டிக்கெட்டை சாதிக் ஏகே (வயது 46) என்பவர் வாங்கியிருந்தாராம். பரிசு அடித்ததும், உடனே பணம் வேண்டும் என்பதற்காக சாதிக் கள்ளச்சந்தை கும்பலை நாடியுள்ளார். தனது நண்பர் மூலமாக இந்த கள்ளச்சந்தை கும்பலை சாதிக் நாடியிருக்கிறார்.

கடந்த புதன்கிழமை இரவு 9 மணிக்கு பேராவூர் டவுன் அருகே உள்ள மனதானா பகுதிக்கு சாதிக்கும் அவரது நண்பரும், 1 கோடி பரிசு அடித்த டிக்கெட்டுடன் சென்று இருக்கிறார்கள். அப்போது இருவரையும் காரில் கடத்திய கும்பல், சிறிது தூரம் சென்ற பிறகு லாட்டரியை பறிமுதல் செய்துவிட்டு, காரில் இருந்து இறக்கிவிட்டுள்ளது. இரவு 11.30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

போலீசார் தீவிர விசாரணை

லாட்டரி டிக்கெட்டை மர்ம நபர்கள் பறித்து சென்றதால் அதிர்ச்சி அடைந்த சாதிக், இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஒருவரை பிடித்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். சாதிக் கூறிய தகவல் உண்மையா? எத்தனை பேர் இந்த செயலில் ஈடுபட்டனர்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+