Kerala lottery: தமிழருக்கு அடித்ததா யோகம்? கேரள மான்சூன் பம்பர் லாட்டரி: 10 கோடி வென்றது யார்? நீடிக்கும் சஸ்பென்ஸ்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று முன் தினம் நடந்த மான்சூன் பம்பர் லாட்டரி (Kerala lottery) குலுக்கலில் முதல் பரிசு ரூ.10 கோடியை வென்றது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 3 நாட்கள் ஆகிய நிலையில் இன்னும் முதல் பரிசு அடித்த நபர் பரிசுக்கான உரிமை கோரவில்லை. முதல் பரிசு வென்ற லாட்டரி டிக்கெட்டானது கண்ணூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கடையில் வாங்கப்பட்டிருப்பதால், தமிழருக்கு யாருக்கேனும் அடித்து இருக்குமோ என பலரும் பேசி வருகிறார்கள்.

கேரளா மான்சூன் பம்பர் குலுக்கல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. ரூ.10 கோடி பரிசுத்தொகை கொண்ட இந்த லாட்டரியில், MC 576896 என்ற எண் கொண்ட டிக்கெட்டிற்கு முதல் பரிசு அடித்தது. குலுக்கல் முடிந்து இன்றுடன் இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை வெற்றியாளர் யார் என்று தெரியவில்லை.

Tamil person win the first prize of 10 crore in the Kerala

தமிழருக்கு அடித்ததா ரூ.10 கோடி?

கண்ணூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீ காவேரி என்ற லாட்டரி ஏஜென்சியில் இந்த டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வெற்றியாளர் யார் என்பது இதுவரை தெரியாததால், ஒருவேளை வெளி மாநிலத்தை சேந்தவர்களுக்கு பரிசு அடித்து இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு கேரள லாட்டரி பிரியர்களுக்கு அதிகரித்துள்ளது. கண்ணூர் மாவட்டத்தை பொறுத்தவரை கேரளாவின் உள் கடலோர பகுதியில் அமைந்துள்ள மாவட்டமாகும்.

சுற்றுலா வாசிகளும், புலம் பெயர் தொழிலாளர்களும் அதிகம் இந்த மாவட்டத்திற்கு வந்து செல்வதால், அவர்களில் யாருக்கேனும் அடித்து இருக்கலாம் என்ற பேச்சு லாட்டரி பிரியர்கள் இடையே அதிகரித்துள்ளது. குறிப்பாக பேருந்து நிலையம் அருகே உள்ள லாட்டரி கடை என்பதால், தமிழகர்கள் யாருக்கேனும் அடித்து இருக்கலாம் எனவும் பேசப்படுகிறது. லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்த கடையை சேர்ந்தவர் அளித்த பேட்டியில், "எங்கள் ஏஜென்சியில் விற்பனை செய்த டிக்கெட்டிற்கு முதல் பரிசு அடித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

ரகசியமாக பரிசுத்தொகையை உரிமை கோர வாய்ப்பு

ரூ.10 கோடி அடித்துள்ள டிக்கெட்டை வாங்கியவர் யார்? என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு மாதம் முன்பு இருந்தே பம்பர் லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. 12 நாட்களுக்கு முன்பு பரிசு விழுந்த டிக்கெட் விற்பனையானது. யார் வாங்கினார்கள் என்று தெரியவில்லை" என்றார்.

நேற்று விடுமுறை தினம் என்பதால் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி இன்று அல்லது நாளை வங்கி வழியாகவோ அல்லது லாட்டரி அலுவலத்தையோ தொடர்பு கொண்டு பரிசுத்தொகை உரிமை கோர வாய்ப்பு இருப்பதாகவும் கேரள லாட்டரி வியாபாரிகள் தரப்பில் கூறினர். பரிசு வென்றவர்கள் சிலர் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்புவது இல்லை என்பதால் ரகசியமாக பரிசுத்தொகையை உரிமை கோரவும் வாய்ப்புள்ளது.

எவ்வளவு கையில் கிடைக்கும்?

பொதுவாக கேரளாவை சேர்ந்தவர்கள் என்றால் பரிசு விழுந்த நாளிலேயே வின்னர் தெரிந்துவிடும். இந்த முறை இதுவரை வின்னர் தெரியாததால் வெளி மாநிலத்தை சேர்ந்தவருக்கு அதிர்ஷ்டம் அடித்து இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் கேரள லாட்டரி பிரியர்கள் கூறுவதை பார்க்க முடிந்தது. ரூ.250 விலை கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டில் 10 கோடி வென்ற அதிர்ஷ்டசாலிக்கு வரிப்பிடித்தம் போக சுமார் 6.20 கோடி ரூபாய் கையில் கிடைக்கும். ஏனைய தொகை ஏஜெண்ட் கமிஷன் மற்றும் வரிபிடித்தம் ஆகியவற்றிற்காக கழிக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+