டீக்கடை முன்பு போர்டு வைத்த கேரளத்து இளைஞர்.. இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவிலிருந்து குவியும் அழைப்புகள்
திருவனந்தபுரம்: கேரளாவில் திருமணத்திற்கு பெண் தேவை என இளைஞர் ஒருவர் டீக்கடையில் போர்டு வைத்ததால் அவருக்கு இங்கிலாந்து , ஆஸ்திரேலியாவில் இருந்தெல்லாம் ஆஃபர்கள் வருகின்றன.
80, 90 ஸ் கிட்ஸ்கள் திருமணத்திற்கு பெண் தேடி வருகிறார்கள். அது போல் பெண்களும் மாப்பிள்ளை தேடி வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது இரு தரப்பினரின் எதிர்பார்ப்புகளும் ஆகும்.
பிள்ளைகளை விட பெற்றோர் நிறைய எதிர்பார்ப்பதால் திருமணங்கள் தாமதமாவதால் விவாதங்கள் நடக்கின்றன. எதிர்பார்ப்புகள் என்றால் நல்ல படிப்பு, நல்ல சம்பாத்தியம், வீடு வாசல் சொத்து, வரதட்சிணை போன்றவைதான். இதை எல்லா பெற்றோர்களும் எதிர்பார்க்கிறார்கள் என சொல்ல முடியாது, சிலர் எதிர்பார்க்கிறார்கள்.

திருமணம் தாமதம்
இவர்களுக்கு திருமணம் தாமதமாவது குறித்து எத்தனை மீம்ஸ்கள் உலா வருகின்றன. இந்த நிலையில் கேரளாவில் தனக்கு மணப்பெண் இளைஞர் ஒருவர் எப்படி தேடியுள்ளார் என்பதை பாருங்கள். கேரளா மாநில வல்லாச்சிரா பகுதியைச் சேர்ந்தவர் உன்னி கிருஷ்ணன். இவர் தான் மணமகள் தேவை என தனது கடையில் போர்டு வைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

டீக்கடை போர்டு
டீக்கடையில் வைத்துள்ள அந்த போர்டில் ஜாதி, மதம் பேதமில்லை என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து உன்னி கிருஷ்ணன் கூறுகையில் நான் கூலி தொழிலாளியாக இருந்தேன். என் தலையில் ஒரு கட்டி வந்தது, இதை அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் முழுமையாக குணமடைந்து வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற விரும்பினேன்.

லாட்டரி கடை
கடந்த பிப்ரவரி மாதம் வீட்டுக்கு அருகே ஒரு லாட்டரி கடை வைத்தேன். பிறகு அதை டீக்கடையாக விரிவுப்படுத்தினேன். தற்போது வியாபாரம் நன்றாக உள்ளது. எனக்கு ஒரு வாழ்க்கை துணை தேவைப்பட்டது. அதற்காக தரகரிடம் சொல்லி வைத்து பெண் பார்ப்பதோ மேட்ரிமோனியல் சைட்களில் பார்ப்பதோ எனக்கு பிடிக்கவில்லை.

வரன் தேடும் படலம்
எனக்கு உறவினர்களும் நண்பர்களும் வரன் தேடி வருகிறார்கள். ஆனால் இதுவரை எதுவும் அமையவில்லை. இதனால்தான் டீக்கடை முன்பு போர்டு வைத்துள்ளேன் என்றார். இந்த போர்ட்டை உன்னிகிருஷ்ணனின் நண்பர் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பதிவு செய்தார். இதையடுத்து அவருக்கு நிறைய அழைப்புகள் வரத் தொடங்கிவிட்டன.

மலையாளிகள் போன்
வெளிநாடுகளில் இருந்து எல்லாம் அழைப்புகளும் வருகின்றன. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து வசிக்கும் மலையாளிகள் உன்னிக்கு வரன்கள் குவிகின்றனவாம். ஆனால் அந்த அழைப்புகளை அவர் ஏற்கக் கூட நேரமில்லை என்கிறார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications