என்ன கொடுமை இது? பஸ்ஸில் பெண்ணை பார்த்து! கையை வைத்து அசிங்கம் செய்தவருக்கு! கேரளாவில் மாஸ் வரவேற்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் பேருந்து ஒன்றில் பெண்ணை பார்த்து அசிங்கமாக நடந்து கொண்ட நபர் ஒருவருக்கு அங்கே பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில் திருச்சூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் பேருந்தில் கடந்த மாதம் இந்த சம்பவம் நடந்த போதே அது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பேருந்தில் நந்திதா என்ற நடிகை பயணம் செய்துள்ளார்.

அவருக்கு அருகில் சாவத் என்ற இளைஞர் வந்து அமர்ந்துள்ளார். முதலில் நந்திதாவிடம் இயல்பாக பேசி உள்ளார். நீங்கள் எங்கே செல்கிறீர்கள். நீங்கள் செல்லும் பகுதியில் டிராபிக் இருக்குமா. . நானும் அங்குதான் செல்கிறேன். சாப்பிட நல்ல கடை என்ன இருக்கிறது என்றெல்லாம் கேட்டுள்ளார். ஆனால் சில நிமிடங்களில் நந்திதாவை சாவத் தவறாக சீண்ட தொடங்கி உள்ளார்.
முதலில் காலில் லேசாக கை வைத்தவர் அதன்பின் இடுப்பிலும் கை வைத்துள்ளார். தவறுதலாக நடந்து இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு திரும்பி பார்த்த நந்திதாவிற்கு ஷாக். அங்கே சாவத், தனது பேண்டிற்குள் கைவிட்டு.. ஆணுறுப்பை தொட்டுக்கொண்டு இருந்துள்ளார். இதனால் ஷாக் ஆன நந்திதா.. உடனே ஜன்னல் ஓரம் அமர்ந்து.. அப்படியே போனை எடுத்து பேஸ்புக்கில் லைவ் வீடியோ போட்டுள்ளார்.

அப்போது இதை கவனிக்காத சாவத் சில நிமிடங்களில் ஆணுறுப்பை வெளியே எடுத்து உள்ளார். இதை பார்த்ததும் ஷாக் ஆன நந்திதா உனக்கு என்ன பிரச்சனை என்று.. கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சாவத் அங்கிருந்து எழுந்து வெளியே செல்ல முயன்றுள்ளார். உடனே நந்திதா கத்தியதும்.. நடத்துனர் வந்து.. உனக்கு கம்பளைண்ட் உண்டோ என்று அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார்.
அந்த பெண் நடந்ததை விளக்கி உள்ளார். முதலில் சாவத் இதை மீண்டும் மீண்டும் மறுத்துள்ளார். அதன்பின் சைடு கேப்பில் அங்கிருந்து எஸ்கேப் ஆகி ஓட முயன்றுள்ளார். ஆனால் நடத்துனர் பிபி பிரதீப் அவரை விடாமல் துரத்தி சென்று போய் பிடித்து அடித்து வெளுத்துள்ளார்.
இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. அதில் நந்திதா.. சாவத்திடம்.. நீ ஏன் அப்படி செய்து கொண்டு இருக்கிறாய் என்று சொல்ல.. அந்த இளைஞர் நான் என்ன செய்தேன் என்று மீண்டும் மீண்டும் கேட்டுள்ளார். உடனே நடத்துனர் வந்து கேள்வி கேட்டதும்... நந்திதா.. அவன் ஜிப் திறந்து இருக்கு பாருங்க என்று கூறி உள்ளார் . நடத்துனரும் இதை கவனித்து உள்ளார். வீடியோவில் இது மொத்தமாக பதிவாகி உள்ளது.

உடனே விஷயத்தை புரிந்து கொண்ட நடத்துனர் பேருந்தை நிறுத்தும்படி கூறி உள்ளார். பேருந்தை நிறுத்தியதும் நடத்துனரை தள்ளிவிட்டு சாவத் ஓடி உள்ளார். ஆனால் கடைசியில் நடத்துனர் அவரை பிடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தார்.
இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட சாவத் நேற்று பெயிலில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு பெயிலில் வெளியே வந்த அவருக்கு கேரளாவில் இளைஞர்கள் குழு ஒன்று பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தது. all Kerala men's association எனப்படும் ஆண்கள் குழு ஒன்று அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தது.
அவருக்கு ஜெயிலுக்கு வெளியே மாலை அணிவித்து மரியாதையை கொடுத்து வரவேற்றது. அவர் வெளியே வரும் போது கைதட்டி, அவருக்கு மாலை போட்ட சம்பவம் இணையத்தில் வீடியோவாக வெளியாகி சர்ச்சையாகி உள்ளது.
The All Kerala Men's Association (AKMA), which gave a hero's welcome to pervert Savad yesterday, had also organised a protest march in support of rape accused actor Dileep. It would be good to keep an eye on its members because they all pose danger to women around them pic.twitter.com/JP1CJApQlU
— S.R.Praveen (@myopiclenses) June 4, 2023
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications