வெறும் 6 ஓட்டா!! கேரள நகராட்சி தேர்தலில் பாஜக தோல்வி.. விசாரணைக்கு உத்தரவிட்ட கட்சித் தலைமை
திருவனந்தபுரம்: கேரளாவில் நடைபெற்ற நகராட்சி இடைத்தேர்தலில் பைரவம் நகராட்சியில் பாஜக வேட்பாளர் வெறும் 6 வாக்குகள் மட்டுமே வாங்கி தோல்வி அடைந்த சம்பவம் வைரலாகி உள்ளது.
கேரளாவில் இரண்டு நாட்களுக்கு முன் 32 வார்டுகளில் நகராட்சி இடைத்தேர்தல் நடைபெற்றது. கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்கள் உட்பட பல்வேறு முக்கிய நகராட்சிகளில் இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில் ஆளும் சிபிஎம் கட்சியின் இடதுசாரி கூட்டணியான எல்டிஎப் 32 வார்டுகளில் 16 இடங்களில் வென்று அசத்தியது.

காங்கிரஸ் எத்தனையாவது இடம்?
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியான யுடிஎப் 11 வார்டுகளில் வென்றது. மீதம் உள்ள 5 வார்டுகளில் 4ல் சுயேட்சைகள் வெற்றிபெற்றனர். 1 இடத்தில் மட்டும் பாஜக வெற்றிபெற்றது. இடுக்கியில் இருக்கும் இடமலகுடி நகராட்சியில் உள்ள ஒரு வார்ட்டில் மட்டும் பாஜக வென்றது. அங்கு எல்டிஎப் கூட்டணியை விட 1 வாக்கு கூடுதலாக பெற்று பாஜக வென்றது.

பாஜக தோல்வி
இந்த தேர்தலில் பைரவம் நகராட்சியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முக்கியமானதாக கருதப்பட்டது. எர்ணாகுளத்தில் இருக்கும் பைரவம் நகராட்சியில் இடப்பள்ளிசிரா என்ற ஒரு வார்டில் மட்டும் இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது. பைரவம் நகராட்சியில் இருக்கும் 27 வார்டுகளில் சமமான இடங்களை ஏற்கனவே எல்டிஎப் - யுடிஎப் பெற்று இருந்தது. அதாவது 13 இடங்களில் எல்டிஎப், 13 இடங்களில் யுடிஎப் வென்று இருந்தது.

பைரவம் நகராட்சி
இதனால் பைரவம் நகராட்சியில் உள்ள இடப்பள்ளிசிரா வார்டு இடைத்தேர்தல்தான் நகராட்சி தலைவரை தேர்வு செய்ய போகும் "டை பிரேக்கர்" தேர்தலாக கருதப்பட்டது. இந்த நிலையில் பைரவம் நகராட்சி இடப்பள்ளிசிரா வார்டு இடைத்தேர்தலில் இடதுசாரிகளின் எல்டிஎப் கூட்டணி 504 வாக்குகளை பெற்று வென்று மாநகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியின் யுடிஎப் கூட்டணி 478 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தது. ஆனால் பாஜக கட்சி இங்கு வெறும் 6 வாக்குகளை மட்டுமே பெற்றது.

2015
2015ல் இதே தொகுதியில் 30 வாக்குகளை பாஜக பெற்று இருந்தது. ஆனால் இந்த முறை வெறும் 6 வாக்குகள் என்று மோசமான பின்னடைவை பாஜக சந்தித்து உள்ளது. பாஜக கட்சி இந்த தொகுதியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டது. ஆனாலும் அக்கட்சி 10 வாக்குகள் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விசாரணை
அங்கு பாஜக தேர்தல் பிரச்சாரம் செய்த போது 30க்கும் மேற்பட்டோர் வீடு வீடாக வாக்கு கேட்டுள்ளனர். ஆனால் விழுந்தது என்னவோ வெறும் 6 வாக்குகள்தான். பாஜகவிற்காக வாக்கு கேட்டவர்கள் கூட அங்கு பாஜக வேட்பாளருக்கு வாக்கு அளிக்கவில்லையோ என்ற கேள்வி இதனால் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அம்மாவட்ட பாஜக நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை
இந்த நிலையில் கேரளாவில் பாஜக சந்தித்த இந்த தோல்வியை இணையத்தில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். முன்னதாக தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இதேபோல் கோவை வடக்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி துணை தலைவர் கார்த்திக் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றது வைரலானது. 9 வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் இவர் 1 வாக்கு மட்டுமே பெற்று தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications