சீட் பெல்ட் போடவில்லை! பினராயி விஜயன் காருக்கே அபராதம்.. அசால்ட் செய்த கேரள போக்குவரத்து துறை
திருவனந்தபுரம்: கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனின் அலுவலக காரில் பயணம் செய்த பாதுகாவலர் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால், முதல்வரின் காருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் காராக இருந்தாலும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து இருப்பதற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் போக்குவரத்து விதி மீறல்களை கண்காணிக்க சாலைகளில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இயங்கும் இந்த கேமராக்கள் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் நபர்களை அப்படியே படம் பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி விடும். ரூ. 232 கோடி ரூபாய் செலவில் கேரளாவின் முக்கிய சாலைகள் அனைத்திலும் இந்த கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

போலீஸ்தான் இல்லையே என நினைத்துக் கொண்டு... கண்ட இடங்களில் வாகனத்தை பார்க் செய்து வைத்தல், அதிவேகம், சீட் பெல்ட் அணியாமல் செல்வது, தலைக்கவசம் இன்றி பைக் ஓட்டுவது,போன் பேசிக்கொண்டே செல்வது போன்ற சாலை விதி மீறல்களில் ஈடுபட்டால் அடுத்த சில மணி நேரங்களில் செல்போனுக்கு வந்து அபராதம் கட்டுவதற்கான ரசீது வந்து விடும்.
அதி நவீன கேமிரா: கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே கேரளாவில் போக்குவரத்து விதி மீறல்களை போலீசார் இந்த முறையில் கண்காணித்து வருகிறார்கள். இந்த நவீன கேமராக்கள் இல்லாத பகுதிகளில் போலீசார், விதி மீறும் வாகனங்களை தங்கள் செல்போனில் போட்டோ எடுத்து அபராதம் விதித்தும் வருகிறார்கள். வாகனங்களின் எண்ணை வைத்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
பினராயி விஜயன் காருக்கு அபராதம்: இந்த நிலையில், தான் கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் காருக்கே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12 ம் கோட்டயம் அருகே உள்ள முண்டக்கயம் - குட்டிக்கானம் சாலையில் முதல்வர் பினராயி விஜயனின் கார் சென்றுள்ளது. பினராயி விஜயன் பஸ்சில் சென்றதால் பின்னால் வந்த அவரது காரில் பாதுகாவலர் மற்றும் அதிகாரிகள் மட்டுமே இருந்தனர்.
முதல்வரின் அலுவலக காரின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் சீட் பெல்ட் அணியவில்லை. இதை சாலையில் வைக்கப்பட்டிருந்த செயற்கை நுண்ணறிவு கேமரா படம் பிடித்தது. இதையடுத்து முதல்வர் பினராயி விஜயனின் காருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு அவரது அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.
ரூல்ஸ் ரூல்ஸ்தான்: டிசம்பர் மாதமே அபராதம் கட்ட நோட்டீஸ் அனுப்ப பட்ட போதிலும் தற்போது வரை அபராதம் செலுத்தவில்லையாம். இது பல்வேறு விமர்சனங்களை தற்போது கிளப்பியுள்ளது. யாராக இருந்தாலும் ரூல்ஸ் ரூல்ஸ்தான் என்ற அடிப்படையில் கேரள போலீசார் செயல்பட்ட விதம் வரவேற்பை பெற்றுள்ளது.
-
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications