Kerala Onam Bumper: ஓணம் பம்பரில் 25 கோடி வாங்கி 4 வருஷம் ஆச்சு.. இன்னும் என் கஷ்டம் தொடருது! வேதனையை பகிர்ந்த அனூப்
திருவனந்தபுரம்: ரூ.25 கோடி பரிசு விழுந்தாலும் எனக்கு கையில் ரூ.12 கோடி அளவிற்குதான் கிடைத்தது. ஓராண்டுக்கு அந்த தொகையை நான் எடுக்கவில்லை. அதன்பிறகே அதில் கொஞ்சம் தொகையை எடுத்து, தேவையான செலவுகளை செய்தேன். நீங்கள் அறிவுப்பூர்வமாக செயல்பட்டால் உங்கள் தலைவிதியை வெற்றிகரமாக மாற்றிவிடலாம் என்றார்.
கேரள ஓணம் பம்பரில் 30 கோடி பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி யார் என்ற விவரம் தற்பொது வரை தெரியவில்லை. பரிசு வென்றவர் கடந்த காலத்தில் லாட்டரியில் முதல் பரிசு அடித்தவர்களுக்கு கிடைத்த அனுபவத்தை வைத்து யாருக்கும் தெரியாமல் ரகசியம் காக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பரிசு வென்றால் என்ன செய்ய வேண்டும்
இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பாக மலையாள சேனல் ஒன்றிற்கு அனூப் அளித்த பேட்டி வைரல் ஆகி வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஓணம் பம்பரில் 25 கோடி பரிசு வென்றவர் அனூப். ஆட்டோ டிரைவரான இவரது ஒரே நாளில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தலைகீழாக மாறிவிட்டது. பரிசு அடித்த விஷயம் தெரிந்ததும் சில நாட்களுக்கு கேரளாவில் ஹாட் டாபிக் ஆக இவர்தான் இருந்தார்.
இவரது வீட்டை சுற்றிலும் தினம் தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு உதவி கேட்பது, நண்பர்கள், உறவினர்கள் செல்போனில் உதவி கேட்பதுமாக இருந்ததால் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகியிருந்தார். ஓணம் பம்பரில் பரிசு வென்றால் என்ன செய்ய வேண்டும் என்ற தனது அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார். அனூப் கூறியதாவது:-
பலரும் உங்களிடம் உதவி கேட்பார்கள்
நான் நினைத்து பார்த்ததைவிட வாழ்க்கை இப்போது நன்றாக உள்ளது. ஹோட்டல் ஒன்று ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். தற்போது ஒரு ஹோட்டல் மற்றும், லாட்ஜ் கட்டிவிட்டேன். லாட்டரியில் பரிசு வெல்பவர்கள் ஒரு வருடம் அவசரப்படாமல் இருங்கள். பரிசு வென்றது தெரிந்தால் பலரும் உங்களிடம் வந்து உதவி கேட்பார்கள். அவர்கள் கேட்கிறார்கள். என்பதற்காக அவசரப்பட வேண்டாம்.
நான் பரிசு வென்று 4 வருடங்கள் ஆகிவிட்டது. தற்போதும் கூட எனக்கு போன் செய்து என்னிடம் உதவி கேட்கிறார்கள். உரிய திட்டமிடல் இன்றி எதையும் செய்ய வேண்டாம். பல லாட்டரி வின்னர்கள் முறையான திட்டமிடல் இன்றி தங்கள் வாழ்க்கையை சீரழித்துக்கொண்டிருக்கிறார்கள். எனக்கு இனிமேல் முதல் பரிசு விழுந்தால் யாரிடமும் சொல்ல மாட்டேன்.
வீழ்ந்துவிடாதீர்கள்
வங்கியில் டெபாசிட் செய்துவிட்டு ஒருவருடம் எந்த திட்டமும் இன்றி இருந்துவிடுவேன். மக்கள் பல்வேறு வழிகளிலும் உங்களை தொடர்பு கொள்வார்கள். அதில் வீழ்ந்துவிடாதீர்கள். லாட்டரியில் பணம் விழுந்து விட்டதால் நீங்கள் செட்டில் ஆகிவிட்டீர்கள் என நினைப்பீர்கள். ஆனால் உண்மையில் நிலைமை அப்படி இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications
