Onam Bumper lottery: கேரளா ஓணம் பம்பர்.. ரூ.30 கோடி பரிசு அடித்த நம்பர் இதுதான்.. எந்த ஊரில் வாங்கிய டிக்கெட் தெரியுமா?
திருவனந்தபுரம்: கேரள மக்கள் கடந்த இரண்டு மாதங்களாக பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த ஓணம் பம்பர் லாட்டரி (Onam Bumper lottery) டிக்கெட்டின் குலுக்கல் இன்று நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ. 30 கோடியை வெல்ல போகும் அதிர்ஷ்டசாலி யார்? என கேரள சேட்டன்கள் மட்டுமின்றி தமிழகத்தை சேர்ந்த டிக்கெட் வாங்கியவர்களும் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் ரூ.30 கோடி முதல் பரிசு "TL 360615" என்ற லாட்டரி எண்ணுக்கு அடித்துள்ளது.
கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில் லாட்டரிகள் ரொம்பவே பிரபலம். தினசரி ரூ.1 கோடி ரூபாய்க்கான லாட்டரி குலுக்கல் நடைபெறும். அதுபோக சீசனுக்கு ஏற்றார்போல் ஆண்டுக்கு 6 பம்பர் லாட்டரிகளின் குலுக்கலும் நடைபெறும். அந்த வகையில் தற்போது, ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை நடைபெற்று வந்தது.

ஓணம் பம்பர் லாட்டரி (Onam Bumper lottery) குலுக்கல் இன்று
கடந்த இரு மாதங்களாக ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை நடைபெற்ற நிலையில் இன்று குலுக்கல் நடைபெற்றது. திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி அலுவலகத்தில் இந்த டிக்கெட்டுகளுக்கான குலுக்கல் நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.30 கோடி "TL 360615" என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. இந்த டிக்கெட்டானது கண்ணூரில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கண்ணூரில் வாங்கிய டிக்கெட்டுக்கு தான் இந்த முத்ல பரிசு அடித்துள்ளது. இதனால் யார் அவர் என கேரள சேட்டன்கள் தேடி வருகிறார்கள். முதல் பரிசு ரூ.30 கோடி என்பதால் இந்த லாட்டரிக்கு கேரள லாட்டரி பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
லாட்டரியை வாங்கிய நாளில் இருந்து பகல் கனவில் மிதந்து கொண்டிருந்த லாட்டரி பிரியர்கள், குலுக்கல் நடைபெறும் நாளை எண்ணிக்கொண்டு இருந்தார்கள் என்று சொன்னால் மிகையாது. அந்த அளவுக்கு ஓணம் பம்பர் மீது லாட்டரி பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. கேரள லாட்டரி வரலாற்றில் அதிகபட்ச தொகை இதுவேயாகும்.
பாலக்காட்டில் தான் அதிகம்
முதல் பரிசு அடித்தால் வாழ்க்கை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஒரே நாளில் தலைகீழாக மாறிவிடும் என்பதால் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். முதல் பரிசு 30 கோடி மட்டுமின்றி ஏராளமான பரிசுகள் வழங்கப்படுகின்றன. ரூ.500 மதிப்பு கொண்ட கேரள லாட்டரி டிக்கெட்டிற்கு இரண்டாவது பரிசாக 20 பேருக்கு தலா ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படுகிறது.
மொத்தம் 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட நிலையில், மொத்த டிக்கெட்டுகளும் விற்பனையாகிவிட்டதாக லாட்டரி துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். வழக்கம் போல தமிழகத்தில் எல்லையோர மாவட்டமான பாலக்காட்டில்தான் அதிக டிக்கெட்டுகள் விற்றுள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக திருப்பூரை சேர்ந்தவர்களுக்கு லாட்டரியில் முதல் பரிசு விழுந்தது. இதற்கு அடுத்த ஆண்டு அதாவது, 2024-ல் கர்நாடகாவை சேர்ந்த மெக்கானிக் ஒருவருக்கு முதல் பரிசு கிடைத்தது. TG 434222 என்ற எண்ணிற்கு அப்போது பரிசு விழுந்தது.
கடந்த ஆண்டு யாருக்கு அடித்தது?
கடந்த ஆண்டு ஓணம் பம்பரில் ரூ. 25 கோடி முதல் பரிசானது, TH 577825 என்ற எண்ணுக்கு அடித்தது. நெட்டூரை சேர்ந்த பெயிண்ட் கடை ஊழியர் இந்த டிக்கெட்டை வாங்கியிருந்தார். இந்த ஆண்டு 30 கோடி ரூபாய் பரிசை வென்று கோடீஸ்வரராகப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு கேரள லாட்டரி பிரியர்கள் மத்தியில் நிலவும் நிலையில், இதற்கான விடை இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.
லாட்டரி விற்பனையை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த செய்தி தரப்படவில்லை. என்றாவது ஒரு நாள் லாட்டரியில் பரிசு அடிக்கும் என நம்பிக்கொண்டு தினம் தினம் பணத்தை கொட்டி கடைசி வரை பரிசு அடிக்காமல் ரூபாயை, மட்டுமின்றி வாழ்க்கையையே இழந்தவர்களும் இருக்கிறார்கள். கோடியில் ஒருவருக்கு பரிசு அடித்தாலும் அதனால் பணத்தை இழந்தவர்களே அதிகம் என்பதே நிதர்சனம்.




Click it and Unblock the Notifications
