Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Onam Bumper: கேரள ஓணம் பம்பர் லாட்டரி: 25 கோடியை தூக்க போவது யார்? 2 நாளில் ரிசல்ட்.. சேல்சில் இந்த ஊர் தான் டாப்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளா ஓணம் பம்பர் லாட்டரி (Kerala Onam Bumper Lottery) விற்பனை வேகமாக நடந்து வருகிறது. லாட்டரி பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஓணம் பம்பர் குலுக்கல் நாளை மறுநாள் சனிக்கிழமை நடக்கிறது. இதுவரை 75 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. வழக்கம்போல் இந்த முறையும் பாலக்காடில் தான் அதிக டிக்கெட்டுகள் விற்றுள்ளன. பரிசு விவரங்களையும் இங்கு விரிவாக பார்க்கலாம்.

கேரள லாட்டரி பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நாளை மறுநாள் (செப். 27) நடைபெறுகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள கோற்கி பவனில் பிற்பகல் 2 மணிக்கு இந்த லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடைபெறுகிறது.

kerala-onam-bumper-lottery-who-will-take-home-rs-25-crores-just-2-days-to-go-this-district-tops

கேரளா ஓணம் பம்பர் லாட்டரி

கடந்த ஜூலை மாத இறுதியில் இந்த டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில் கடந்த இரு மாதங்களாக டிக்கெட் விற்பனை அனல் பறக்க நடைபெற்று வந்தது. கேரளாவை பொறுத்தவரை லாட்டரி டிக்கெட்டுகளை அரசே விற்பனை செய்து வருகிறது. தினசரி ரூ.1 கோடி பரிசுத்தொகை கொண்ட டிக்கெட் குலுக்கல் நடைபெறுகிறது. அதுபோக சீசனுக்கு ஏற்றபடி வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரி டிக்கெட்டின் குலுக்கலும் நடைபெறுகிறது.

அந்த வகையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஓணம் பம்பர் லாட்டரி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த டிக்கெட் ஒன்றின் விலை ரூ.500 ஆகும். முதல் பரிசாக ரூ.25 கோடி அளிக்கப்படுவதால், பரிசு அடித்தால் வாழ்க்கையில் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத திருப்பம் ஏற்பட்டு விடும் என்ற ஆர்வத்தில் கேரள மக்கள் இந்த டிக்கெட்டுகளை வாங்குவதை பார்க்க முடியும்.

75 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுள்ளது

கேரளாவுக்கு பல்வேறு காரணங்களுக்காக செல்லும் தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநில மக்களும் சிலர் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குகிறார்கள். இப்படி டிக்கெட் வாங்கும் சிலருக்கு பரிசுத்தொகையும் அடித்து விடுகிறது. இதனால், கேரள லாட்டரிகள் விற்பனை பல லட்சங்களை தாண்டுகிறது.

ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டை பொறுத்தவரை மொத்தம் 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்ட நிலையில், தற்போதைய நிலவரப்படி, இதுவரை 75 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக கேரள மாநில லாட்டரித் துறை அறிவித்துள்ளது. டிக்கெட் விற்பனை செப்டம்பர் 27, சனிக்கிழமை அன்று பிற்பகல் 2 மணி வரை தொடரும். அதாவது குலுக்கல் நடைபெறுவது வரை டிக்கெட் விற்பனை நடைபெறும்.

டிக்கெட் குலுக்கல் விழா

கேரள நிதியமைச்சர் கே.என். பாலகோபால் டிக்கெட் குலுக்கல் விழாவைத் தொடங்கி வைக்கிறார். சட்டமன்ற உறுப்பினர்கள் ஆண்டனி ராஜு, வி.எஸ். பிரசாந்த் மற்றும் லாட்டரித் துறை இயக்குநர் டாக்டர் நிதின் பிரேம்ராஜ் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் முன்னிலையில் டிக்கெட் குலுக்கல் நடைபெறும். நேரலையிலும் குலுக்கல் ஒளிபரப்பு செய்யப்படும்.

பாலக்காடில் விற்பனை அதிகம்

லாட்டரி டிக்கெட் விற்பனையில் மாவட்ட வாரியாக பார்த்தால் வழக்கம் போல பாலக்காடு மாவட்டமே டாப்பில் உள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் 14,07,100 டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளது. திருச்சூர் 9,37,400 டிக்கெட்டுகள் விற்று இரண்டாவது இடத்திலும், திருவனந்தபுரம் 8,75,900 டிக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.


யார் அந்த அதிஷ்டசாலி?

கடந்த ஆண்டு மொத்தமாக 71.40 லட்சம் திருவோணம் பம்பர் டிக்கெட்டுகள் விற்பனையாகியிருந்தன. இந்த ஆண்டு அதை எளிதாக தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு வயநாட்டில் விற்பனை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் TG 434222 என்ற எண்ணுக்கு முதல் பரிசு ரூ.25 கோடி அடித்தது.

கர்நாடகாவை சேர்ந்த மெக்கானிக் ஒருவர் முதல் பரிசை வென்றார். இந்த ஆண்டு 25 கோடியை வெல்லப்போகும் அதிர்ஷ்டசாலி யார்? என்ற எதிர்பார்ப்பு சேட்டன்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த எதிர்பார்ப்புக்கு இன்னும் 2 நாளில் விடை கிடைத்துவிடும்.

பரிசுகளின் விவரங்கள் பின்வருமாறு:

* முதல் பரிசு: ரூ.25 கோடி
* இரண்டாவது பரிசு: ரூ.1 கோடி (20 டிக்கெட்டுகளுக்கு)
* மூன்றாவது பரிசு: ரூ.50 லட்சம் (20 டிக்கெட்டுகளுக்கு)
* நான்காவது பரிசு: ரூ.5 லட்சம் (கடைசி ஐந்து இலக்கங்கள்)
* ஐந்தாவது பரிசு: ரூ.2 லட்சம் (கடைசி நான்கு இலக்கங்கள்)

* ஆறாவது பரிசு: ரூ.5,000 (54,000 டிக்கெட்டுகள் வரை - கடைசி நான்கு இலக்கங்கள்)
* ஏழாவது பரிசு: ரூ.2,000 (81,000 டிக்கெட்டுகள் - கடைசி நான்கு இலக்கங்கள்)
* எட்டாவது பரிசு: ரூ.1,000
* ஒன்பதாவது பரிசு: ரூ.500
* ஆறுதல் பரிசு: ரூ.5 லட்சம் (9 வெற்றியாளர்கள்)

குறிப்பு:

கேரள லாட்டரிகள் விற்பனை செய்வது தமிழகத்தில் சட்டவிரோதம் ஆகும். லாட்டரியால் நிதி இழப்பு ஏற்பட்டு மக்கள் கடும் இன்னல்களை சந்தித்ததால் தமிழக அரசு லாட்டரிகளுக்கு தடை விதித்தது. தமிழகத்தில் லாட்டரிகள் விற்கப்பட்டால் போலீசார் கைது நடவடிக்கை எடுப்பார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+