ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு
திருவனந்தபுரம்: கேரளா சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி படுதோல்வியை சந்திக்கும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணியை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று மனோரமா - நியூஸ் சி வோட்டர்ஸ் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த கூட்டணிக்கு எவ்வளவு சீட் கிடைக்கும்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
கேரளாவில் ஏப்ரல் 9 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 4ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. கேரளாவை எடுத்து கொண்டால் மொத்தம் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

கேரளாவில் தற்போது மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான யூடிஎஃப் கூட்டணி, மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே போட்டி உள்ளது.
கேரளா கருத்து கணிப்பு
இதில் நேரடி போட்டி என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி - காங்கிரஸ் கூட்டணி இடையே தான் உள்ளது. இந்த 2 கூட்டணிகள் இடையே தான் ஆட்சியை யார் பிடிப்பது? என்ற போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில் தான் மனோரமா - நியூஸ் சி வோட்டர்ஸ் சார்பில் கேரளாவில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்
கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் மார்ச் 26ம் தேதி வரை கேரளாவில் 90 ஆயிரம் வாக்காளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி 69 தொகுதிகள் முதல் 81 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆட்சியை பிடிக்க 71 இடங்கள் தேவை என்ற நிலையில் இந்த கருத்து கணிப்பு காங்கிரஸ் கூட்டணியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மா.கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு எவ்வளவு?
அதேவேளையில் ஆளும் கூட்டணி பின்தங்கி இருந்தாலும் கூட கடும் போட்டியை கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எல்டிஎஃப் கூட்டணிக்கு 57 முதல் 69 தொகுதிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. கடந்த 2021ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 99 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 10 ஆண்டுகளாக கேரளாவில் ஆட்சி செய்து வருகிறது. முதல்வராக பினராயி விஜயன் செயல்பட்டு வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.
ஒற்றை இலக்கத்தில் பாஜக கூட்டணி
அதேவேளையில் இந்த கருத்து கணிப்பு பாஜகவுக்கு தான் பெரிய அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. பாஜகவுக்கு கேரளாவில் பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. இருப்பினும் தொடர்ந்து பாஜக வளர்ந்து வருகிறது. வரும் சட்டசபை தேர்தலில் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் பாஜக பிரசாரத்தை வலுப்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் தற்போதைய கருத்து கணிப்பின்படி பாஜக தலைமையிலான கூட்டணி ஒற்றை இலக்கத்தில் தான் வெற்றியை பதிவு செய்யும். அதன்படி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 1 முதல் 5 இடங்களில் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
-
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
கேரளா போனவருக்கு.. இங்கே வர டைம் இருக்காதா.. சொதப்பும் காங்.. ஸ்டாலினை தவிக்கவிடுகிறாரா ராகுல்? -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. என்னதான் ஆச்சு காங்கிரசுக்கு? கண்டுக்கொள்ளாத ராகுல் காந்தி -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி -
கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்












Click it and Unblock the Notifications