அடித்து தூக்கும் காங்கிரஸ்.. பின்னாலேயே வரும் பினராயி அரசு.. கேரளாவில் பாஜக நிலைமை மோசம்!
சென்னை: தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே மனோரமா நியூஸ் சி- வோட்டர் நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் அங்குக் காங்கிரஸ் ஆட்சியை அமைக்க வாய்ப்புகள் அதிகம் என்றே கூறப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, மேற்கு வங்கம் உட்பட 5 மாநிலங்களில் சீக்கிரமே தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் களம் மெல்ல சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் தொடர்பான சர்வேக்களும் மெல்ல வெளியாகத் தொடங்கியுள்ளது.

அடித்துத் தூக்கும் காங்கிரஸ்
கேரளாவில் இடதுசாரி அரசு மாற வேண்டும் என்ற கேள்விக்கு 53.7% ஆம் மாற வேண்டும் எனப் பதிலளித்துள்ளனர். வெறும் 40.3% பேர் மட்டுமே பினராயி விஜயன் அரசு தொடர வேண்டும் எனக் கூறியுள்ளனர். கிட்டத்தட்ட 53.7% பேர் எதிர்த்துள்ளனர். அதேபோல 6.1% பேர் பதிலளிக்கவில்லை.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கடந்த டிசம்பரில் இதே ஆய்வில் 45.9% தொடர வேண்டும் என்றும் 49.8% மட்டுமே மாற வேண்டும் எனக் கூறியிருந்தனர். இப்போது மக்களிடையே ஆளும் இடதுசாரிகள் மீதான வெறுப்பும், மாற்றம் வேண்டும் என்ற சிந்தனையும் அதிகரித்துவிட்டதையே காட்டுகிறது.
அதிருப்தி
இந்த சர்வேயில் வேறு சில கேள்விகளும் கேட்கப்பட்டது. சபரிமலை தங்கத் திருட்டு வழக்கின் விசாரணை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதில் சுமார் 42.7% பேர் விசாரணை திருப்திகரமாக இல்லை என கூறியுள்ளனர். சுமார் 34.5% பேர் மட்டுமே திருப்திகரமாகச் செல்வதாகத் தெரிவித்தனர். 22.8% கருத்து தெரிவிக்கவில்லை. காங்கிரஸில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராகுல் மாங்கூட்டத்தின் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கேள்விக்கு 41.9% பேர் ஆம் எனத் தெரிவித்தனர். 35.4% பேர் இல்லை என்றனர். 22.7% பேர் கருத்து தெரிவிக்கவில்லை.
பாஜக நிலை மோசம்
பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா என்ற கேள்விக்கு 31.2% பேர் திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்., 45.5% பேர் தங்கள் அதிருப்தியைப் பதிவு செய்தனர். மேலும், பிரதமர் மோடி vs ராகுல் காந்தி இருவரில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கு 48.5% பேர் ராகுலுக்கு ஆதரவளித்துள்ளனர். 30% மட்டுமே மோடிக்கு ஆதரவளித்துள்ளனர்.
முதல்வர் வேட்பாளர்
முதலமைச்சர் பினராயி விஜயனின் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக 27% பேர் கூறிய நிலையில், 53.1% பேர் அதை மறுத்துள்ளனர். அதேபோல சிறந்த முதலமைச்சர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு வி.டி. சதீசன் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு 24.1% பேர் ஆதரவளித்துள்ளனர். தற்போது முதல்வராக இருக்கும் பினராயி விஜயன் (22.4%) பின்னாலேயே கடும் போட்டி கொடுக்கிறார். அடுத்து 3வது இடத்தில் 11.3% ஆதரவோடு சசி தரூர் வருகிறார்.
இந்தியா அமெரிக்கா ஒப்பந்தம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு 30.9% பேர் அந்த ஒப்பந்தம் இந்தியாவுக்குச் சாதகம் எனக் கூறியுள்ளனர். அதேநேரம் 36.4% பேர் இந்தியாவுக்குச் சாதகமானதாக இல்லை எனக் கூறியுள்ளனர். 32% பேர் கருத்து இல்லை எனத் தெரிவித்துள்ளனர். கேரள பட்ஜெட் தொடர்பான கேள்விக்கு, அது சிறப்பாக இருந்ததாக 11% பேரும், சுமாராக இருந்ததாக 24% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். அது மோசமில்லை என 25% பேர் கூறிய நிலையில், 17% பேர் மோசமாக இருந்ததாகவும் 15% பேர் மிக மோசம் என்றும் கூறியுள்ளனர்.
-
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications