திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சபரிமலைக்கு கூடுதல் பக்தர்கள்.. கடுமையாக எதிர்க்கும் கேரள அரசு.. என்ன காரணம்

Google Oneindia Tamil News

சபரிமலை: சபரிமலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கக்கூடாது என்று கேரள அரசு கடுமையாக எதிர்த்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கு காரணம், ஐந்தாயிரம் பேரை சோதித்து அனுப்பும் அளவுக்கு கட்டமைப்பை உருவாக்குவது சவாலானது என்று எதிர்த்துள்

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16ம் தேதி முதல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா பரவலை தடுப்பதற்காக, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் ஆயிரம் பக்தர்களும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களும், மகரவிளக்கு அன்று 5 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

kerala opposes allowed to 5000 devotees to sabarimala

ஆனால் பக்தர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும்படி கேரள அரசுக்கு கோரிக்கைகள் வந்தன. ஆனால் அதை கேரள அரசு ஏற்கவில்லை. இதனால் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க உத்தரவிடும்படி தமிழ்நாடு, உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதை விசாரித்த நீதிமன்றம், தினமும் 5000 பக்தர்களை வழிபாட்டுக்கு அனுமதிக்கும்படி உத்தரவிட்டது. இந்த உத்தரவு, கடந்த 20ம் தேதி முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் கேரள அரசோ சபரிமலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழாவில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழாவில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம்

உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில், 'கொரோனா மற்றும் உருமாறிய கொரோனா என பல்வேறு பிரச்னைள் காணப்படுகிது. இதுபோன்ற சூழலில், சபரிமலையில் எப்படி தினமும் 5 ஆயிரம் பேரை வழிப்பாட்டுக்கு அனுமதிக்க முடியும்? மேலும், அவர்களுக்கு தொற்று பரிசோதனையை செய்ய சுகாதார அதிகாரிகள், பாதுகாப்புக்காக போலீசார் ஆகியோரையும் பணியமர்த்த வேண்டும். இது மிகவும் சவாலானது. கூட்டம் அதிகமானால் கொரோனா தொற்றும் அதிகரிக்கக் கூடும். அதனால், உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

English summary
The Kerala government has moved the Supreme Court challenging the state high court's verdict which had directed it to increase the number of pilgrims to the historic Sabarimala temple to 5,000 per day, saying it will put a "great strain" on police personnel and health officials in view of the COVID-19.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X