திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உடலுறவு டார்ச்சர்.. அந்த "விஐபி"களுக்கும் தொடர்பாமே.. வசமாக சிக்கும் புள்ளிகள்.. கசிந்த சீக்ரெட்கள்

மனைவிகளை மாற்றி கொண்டு உல்லாசம் அனுபவித்தவர்களை தேடி வருகிறார்கள்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: பணத்துக்காக மனைவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 7 பேரை கோட்டயம் போலீசார் கைது செய்துள்ள நிலையில் மேலும் அது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

2 நாட்களாக கேரள சம்பவம் மக்களை உலுக்கி எடுத்து வருகிறது.. கேரளா மாநிலம் கோட்டயம் அடுத்த கருகாச்சல் போலீஸ் ஸ்டேஷனில் பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.

கோவா சட்டசபை தேர்தல்: பாஜக வெல்லும்.. அப்போ திரிணமூல்? டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு சொல்வது என்ன? கோவா சட்டசபை தேர்தல்: பாஜக வெல்லும்.. அப்போ திரிணமூல்? டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு சொல்வது என்ன?

அந்த புகாரில், தனது கணவர் தன்னை வேறொரு ஆணுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தியதாகவும், இயற்கைக்கு மாறாக உடலுறவு கொள்ள வைத்து துன்புறுத்தியதாகவும் அதில் கூறியிருந்தார்.

 இளம்பெண்கள்

இளம்பெண்கள்

பாதிக்கப்பட்ட பெண் தந்த இந்த புகாரின்பேரில் போலீசாரும் விசாரணையை ஆரம்பித்தனர்.. முதற்கட்ட விசாரணையில் பெண்ணின் கணவர் உட்பட 7 பேர் தங்களது மனைவிகளை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டு வந்ததும், அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது.. இதையடுத்து, அப்பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் என 7 பேரை கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

 விசாரணை

விசாரணை

அந்த விசாரணையில்தான் ஏகப்பட்ட அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.. ஷேர்சாட், டெலிகிராம், மெசெஞ்சர் போன்ற ஆப்கள் மூலம் 'couple sharing' செய்துகொள்ள விரும்புவர்கள் அறிமுகமாகி உள்ளனர்.. பிறகு வாட்சப், டெலிகிராமில் தனி குரூப்பை உருவாக்கி அதில் இவர்கள் எல்லாருமே ஒன்றாக பழகி வந்துள்ளனர்.. ஒரு நாளைக்கு அவரவர் மனைவிகளையும் பரிமாறி கொள்வார்களாம்.. சில நேரங்களில் ஒரு பெண்ணிடம் மூன்று பேர் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்... அப்படிப்பட்ட சூழலில், மனைவியை அனுப்பி வைப்பவர்கள் பேரம் பேசி காசும் வசூலித்து வந்திருக்கிறார்கள்..

 டாக்டர்கள்

டாக்டர்கள்

இப்போது கைதாகியிருப்பவர்கள் கேரளாவில் உள்ள 3 வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரிகிறது.. அதுமட்டுமல்ல, தொழிலதிபர்கள், அதிகாரிகள், டாக்டர்கள், வக்கீல்கள் என சமுதாயத்தின் உயர் மட்டத்தில் உள்ள பலரும் இந்த 'couple sharing' குழுவில் அங்கம் வகித்து வருகிறார்களாம்.. எனினும் பெரும்பாலும் இந்த க்ரூப்பில் உள்ளவர்கள் எல்லாருமே பெரும் பணக்காரர்கள் ஆவார்கள்.. இவர்கள் அடிக்கடி மனைவியை மாற்றிக்கொள்வதுடன், திரும்ப திரும்ப ஒருசிலரின் மனைவிகளே வேண்டும் என்று கேட்பார்களாம்..

 ஹோட்டல்கள்

ஹோட்டல்கள்

இந்த குரூப்பில் உள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமான பிறகு, ஒரு குறிப்பிட்ட நாளில் யாராவது ஒருவது வீட்டில் குடும்ப நண்பர்களை போல சந்தித்து கொள்வார்களாம்.. குறைந்தது 3 முறையாவது இதுபோன்ற சந்திப்புகள் நடைபெறும்.. ஒருவரையொருவர் சந்தித்து நன்றாக பழகிய பிறகு உறவு கொள்வதற்கு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்வார்களாம்.. காரணம், ஹோட்டல்களில் சந்தித்து கொள்வது பாதுகாப்பு இல்லை என்பதால்தான், குரூப்பில் உள்ள யாராவது ஒருவர் வீட்டில் தான் கூடியிருக்கிறார்கள்.

 உடலுறவு

உடலுறவு

அதேபோல, ஃபேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு, நடக்க போகும் பார்ட்டிக்கு தங்களின் மனைவிகளை கணவன்மார்களே அழைத்து வந்துள்ளனர்.. "எங்கள் மனைவிகளை குலுக்கல் முறையில் மாற்றி மாற்றி உடலுறவு வைத்துக்கொண்டு உங்களது ஆசையை தீர்த்து கொள்ளுங்கள்" என்று கணவன்மார்களே அந்த பார்ட்டியில் வெளிப்படையாக அறிவிப்பார்களாம்.. சில மனைவிகளுக்கு இதில் விருப்பம் என்றாலும், பல பெண்களுக்கு இப்படி தகாத முறையில் ஈடுபடுவது பிடிக்காமல் இருந்துள்ளது..

 விசாரணை

விசாரணை

ஆனால் கணவன்மார்களின் வற்புறுத்தலில் அவர்கள் வாய் திறக்காமல் அமைதியாக ஒத்துழைப்பு தந்து வந்துள்ளனர்.. சில பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்களின் மனைவிகள், இதெல்லாம் பிடிக்காமல் தற்கொலை முயற்சியிலும் ஈடுப்பட்டிருக்கிறார்களாம்.. இப்போதைக்கு இந்த க்ரூப்பில் இருந்த நிறைய பேர் தலைமறைவாகி உள்ளதால், அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.. பெரும் பணக்காரர்கள் என்பதைவிட, இவர்கள் டாக்டர்கள், வக்கீல்கள் என்பதால், இந்த நெட்ஒர்க் மிகப்பெரியதாக இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்..

பரஸ்பரம்

பரஸ்பரம்

இப்படித்தான் கடந்த 2019-ம் ஆண்டு காயாங்குளத்தில் ஷேர் சாட் மூலம் மனைவிகளை மாற்றுவதாகப் புகார் எழுந்தது... அந்த நெட்ஒர்க் உடனடியாக பிடிபட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.. அதன் பிறகு சங்கனாச்சேரியில் இது போன்ற புகார் எழுந்திருக்கிறது. முழு விருப்பத்துடன் கப்புள் ஷேரிங் நடப்பதால், சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து புகார் வராமல் நடவடிக்கை எடுக்க முடியாது... ஆனால், கட்டாயப்படுத்துவதாகப் புகார் வந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள் போலீஸார்.

மேலும் 6 பேர் கைது

மேலும் 6 பேர் கைது

போலீசாரின் விசாரணையில் இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்றவைகளில் மொத்தம் 14 குழுக்கள் செயல்பட்டது தெரிய வந்துள்ளது.. இதில் 750 ஜோடிகள் என1,500 பேர் உறுப்பினராக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. இப்போது இந்த குழுக்களை தொடங்கியவர்கள் யார்? அட்மின் யார்? என்பதை சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.. அதன் அடிப்படையில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண் தந்த புகாரின்பேரில் 7 பேர் கைதான நிலையில், மேலும் 6 பேர் கைதாகி உள்ளனர்.

உறுப்பினர்கள்

உறுப்பினர்கள்


இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. இந்த குழுவில் உள்ள முக்கிய பிரமுகர்கள், பிரபலங்களும் உறுப்பினர்களாக இருந்தநிலையில், கேரளா மட்டுமின்றி கோவா மாநிலத்தில் இருந்தும் சிலர் மனைவிகளை மாற்றும் உல்லாச நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனராம்.. அவர்களை அடையாளம் காணவும், அவர்களுடன் வேறு யாரும் பங்கேற்றார்களா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்... மனைவிகளை மாற்றி உல்லாசம் காணும் நிகழ்ச்சிகளில் மது விருந்தும் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..

தொடர்பு

தொடர்பு

அதேசமயம், இந்த குழுக்களை தொடங்கியதில் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு வலுத்துள்ளது. இதனிடையே, இந்த வழக்கில் கைதானவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி உள்ளனர்.. அவர்களை மறுபடியும் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். அப்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Kerala 'partner swapping' sex racket and more than 1000 couples involved
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X