"கைமாறும்" மனைவிகள்.. 1000 தம்பதிகளின் க்ரூப் லீலைகள்.. உல்லாசத்தின் கொடுமை.. தட்டி தூக்கிய போலீஸ்
சோஷியல் மீடியாவில் மனைவிகளை மாற்றி கொண்டு உல்லாசம் அனுபவித்துள்ளனர்
திருவனந்தபுரம்: சோஷியல் மீடியாவில் ஒரு குழு தொடங்கி, அதன்மூலம் தங்கள் மனைவிகளை மாற்றி கொண்டு, உல்லாசம் அனுபவித்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது.. நாம்கூட அதை பற்றி ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம்..
கற்பு, மானம், பெண்மை, ஒருவனுக்கு ஒருத்தி.. என்பது போன்ற நெறிமுறை வார்த்தைகள் காணாமல் போய் கொண்டிருக்கும் சூழலில், சென்னையில் நடந்த அந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை பலதரப்பிலும் ஏற்படுத்தியது.

ரிசார்ட்டுகள்
பணக்காரர்கள் எல்லாரும் சேர்ந்து தங்களது மனைவிகளை மாற்றி கொள்ளும் நிகழ்வு நடந்தது.. சென்னை ஈசிஆர் ரோட்டில் உள்ள ஸ்டார் ஹோட்டல், ரிசார்ட்டுகளில் இப்படி அந்த சம்பவம் நடந்தது.. அதாவது, எல்லா பணக்காரர்களும் ஜோடியாக இங்கு கூடுவார்களாம்.. அவர்களது கார் சாவியை குலுக்கலில் போடுவார்கள்.. பிறகு யார் கையில் எந்த கார் சாவி கிடைக்கிறதோ, அந்த ஜோடிகளை மாற்றி கொள்வது.. இப்படி ஒரு ஆபத்தான, அசிங்கமான விளையாட்டு அம்பலமாகியது..

குலுக்கல் முறை
'மீவீ' என்ற ஆப் மூலம்தான் இந்த விளையாட்டு ஃபேஸ்புக்கில் நடந்தது.. குலுக்கல் முறையில் மனைவியை தேர்ந்தெடுத்ததும், அவர்களுடன் ஜாலியாக இருப்பது.. வேண்டுமானால் அதை போட்டோ, வீடியோவும் எடுத்து அவர்களுக்குள் ஷேர் செய்து கொள்வதுதான் இவர்களின் வாடிக்கையாம்.. சென்னை, பெங்களுரூ போன்ற முக்கிய நகரங்களில் பணக்காரர்களில் சிலர் இப்படி ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

பகீர் புகார்
கிட்டத்தட்ட இதுபோலவே ஒரு சம்பவம் கேரளாவிலும் நடந்துள்ளது.. கேரளா மாநிலம், கோட்டயம் அருகே உள்ள சங்கனாச்சேரி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், சங்கனாச்சேரி போலீசில் சமீபத்தில் ஒரு புகார் தந்தார்.. அந்த புகாரில் உள்ள சுருக்கம் இதுதான்: "என்னுடைய கணவர், அவரது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க என்னை வற்புறுத்துகிறார்... இதற்கு உடன்படாததால் என்னை கொடுமைபடுத்துகிறார்... எனது கணவரின் நண்பர்களும், அவர்களின் மனைவியரை இதுபோல மாற்றி கொள்கிறார்கள்... இதற்காக சோஷியல் மீடியாவில் தனியாக குழு அமைத்து செயல்படுகிறார்கள்... அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

அதிர்ச்சி
இப்படி ஒரு புகாரை பார்த்து போலீஸ் அதிகாரிகளே அதிர்ந்து போய்விட்டனர்.. எனவே, உடனடியாக இதை பற்றி விசாரிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டனர்... சைபர் கிரைம் போலீசாரும், புகார் கொடுத்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர்களின் செல்போன் நம்பர்களை வைத்து விசாரணை ஆரம்பித்தனர்.. அப்போதுதான், இவர்கள் எல்லாம் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு ஸ்பெஷலான குரூப்பை ஆரம்பித்திருக்கிறார்கள்..

மனைவிகள்
"கப்பிள் மீட் அப் கேரளா" என்று அதற்கு பெயர்.. இந்த க்ரூப்பில், அவரவர் மனைவிகளை மாற்றி கொண்டு, அந்த மனைவிகளிடம் ஜாலியாக இருந்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. யாருக்கெல்லாம் இன்னொருத்தர் மனைவி தேவையோ, அவர்கள் இந்த குரூப்பில் உறுப்பினராக இணைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த கும்பல் மெசஞ்சர், டெலகிராம் போன்றவற்றின் மூலமும் உறுப்பினர்களை சேர்த்துள்ளது..

1000 தம்பதிகள்
இப்படி மொத்தம் 1000 தம்பதிகள் இந்த குழுவில் இணைந்துள்ளனர்.. கேரளா மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்தவர் 1000 தம்பதிகள் இதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.. இவர்களை தவிர கல்யாணம் ஆகாதவர்களும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இப்படி கல்யாணம் ஆகாதவர்கள், மாற்றான் மனைவியுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என்றால், அவர்களிடம் இருந்து குறிப்பிட்ட அளவுக்கு பணம் வசூலிக்கப்படுமாம்..

மனைவிகள்
இந்த பணம், குரூப் அட்மின் எனப்படும் குழுவை தொடங்கியவர்களுக்கு வருமானமாய் கிடைத்துள்ளது... இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, முதற்கட்டமாக இந்த குழுவை சேர்ந்த 7 பேரை அதிரடியாக போலீசார் கைது செய்துள்ளனர்.. இவர்களுடன் தொடர்பில் இருந்த முக்கியமான 25 நபர்களை கண்காணித்தும் வருகிறார்கள். அநேகமாக அவர்களும் கைதாவார்கள் என்று தெரிகிறது.

கைது
இந்த சம்பவம் பற்றி போலீஸ் அதிகாரிகள் சொல்லும்போது, "வெளிநாடுகள், மேலை நாட்டு கலாச்சாரத்தில் இதுபோன்ற மனைவிகளை மாற்றும் சம்பவங்கள் நடந்திருக்கின்றன.. இப்போது இந்த பழக்கம் கேரளாவிலும் பரவி வருவது அதிர்ச்சியை அளிக்கிறது... இதில் ஈடுபடுவோர் ஒருத்தரையும் விடாமல் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்... சோஷியல் மீடியாவில் இப்படி க்ரூப்கள் வைத்து மனைவிகளையும், இளம்பெண்களையும் மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் கும்பல் பற்றிய தகவல்களையும் தொடர்ந்து திரட்டி வருகிறோம்.. அவர்களையும் விரைவில் கைது செய்வோம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications