சபரிமலையிலேயே உறங்கிய பொன்.ராதாகிருஷ்ணன்.. திரும்பி வரும் போது மீண்டும் தடுத்து நிறுத்திய போலீஸ்!
நேற்று சபரிமலை சென்ற பாஜக கட்சியை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் அதிகாலை போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
Recommended Video

திருவனந்தபுரம்: நேற்று சபரிமலை சென்ற பாஜக கட்சியை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் அதிகாலை கேரள போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் சபரிமலை கோவில் பூஜைக்காக திறக்கப்பட்டது. மண்டல மாகரம் விளக்கு பூஜைக்காக மீண்டும் கோவில் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிந்து நேற்று கோவிலுக்கு சென்றார். ஆனால் அவர் தொண்டர்களுடன் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

பஸ்ஸில் சென்றார்
இந்த நிலையில் கடைசியாக பொன்.ராதாகிருஷ்ணன் அரசு பேருந்தில் செல்லும் நிலை ஏற்பட்டது. அவர் கேரள அரசு ஏற்பாடு செய்திருந்த பேருந்தில் சென்றார். மக்களோடு மக்களாக அவர் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டார்.

எல்லோருடனும் மேலே தூங்கினார்
அதன் பின் தரிசனம் முடித்த அவர் இரவு நேரம் என்பதால் கோவிலிலேயே தங்கினார். இரவில் அவர் கோவிலிலேயே தூங்கினார். அங்கு பக்தர்களுடன் சேர்ந்து அவர் தூங்கிய புகைப்படம் வெளியாகி உள்ளது.

மீண்டும் தடுத்து நிறுத்தினார்கள்
இந்த நிலையில் மீண்டும் அவர் அதிகாலையில் திரும்பும் போது, கேரளா போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டார். ஆனால் அவர் மீண்டும் ஏன் தடுத்து நிறுத்தப்பட்டார் என்று விவரங்கள் வெளியாகவில்லை. அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

காரில் சென்றார்
அதன்பின் அவருடைய தனிப்பட்ட கார் அந்த பகுதிக்கு வந்தது. அந்த காரில் ஏறி நிலக்கல்லில் இருந்து அவர் திரும்பி வந்தார். இதனால் அதிகாலையில் அங்கு கொஞ்சம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications