நள்ளிரவு.. நடுக்காட்டில்.. ரோட்டில் தவழ்ந்து தத்தளித்த குழந்தை.. ஓடும் ஜீப்பிலிருந்து விழுந்த கொடுமை
ஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது
Recommended Video
திருவனந்தபுரம்: நள்ளிரவு.. நடுக்காட்டில்.. ஜீப்பில் இருந்து தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை ஒன்று ரோட்டில் அழுதவாறே தவழ்ந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
மூணாறு அருகே கம்பிளி கண்டம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவரது ஒன்றரை வயது பெண் குழந்தை கோகிலா. போன ஞாயிற்றுக்கிழமை, கோகிலாவுக்கு மொட்டை அடிப்பதற்காக பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு குடும்பத்துடன் ஜீப்பில் சென்றிருக்கிறார்.
முடி காணிக்கை செலுத்தி முடித்துவிட்டு, ஜீப்பில் எல்லோரும் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். ஜீப்பின் பின்பக்க சீட்டில் குழந்தையை வைத்து கொண்டு தாய் உட்கார்ந்திருந்தார்.

தூக்கம்
ஊருக்கு போய்வந்த அசதியில் அப்படியே தூங்கிவிட்டார். ராத்திரி நேரம் 10 மணி இருக்கும். ராஜமலை 5 மைல் பாலத்தில் ஜீப் சென்று கொண்டிருந்தது. அப்போது, அம்மாவின் மடியில் இருந்த கோகிலா கீழே தவறி விழுந்துவிட்டாள். தூங்கி கொண்டிருந்த தாயும், குழந்தை விழுந்ததை கவனிக்கவில்லை, ஜீப் ஓட்டிக் கொண்டிருந்த சதீஷும் குழந்தையை கவனிக்கவில்லை.

சிசிடிவி காமிரா
கீழே விழுந்த குழந்தை, ரோட்டிலேயே தவழ்ந்து செல்கிறாள்.. நடுக்காட்டில், நடு இரவில் குழந்தை சாலையில் விழுந்து தவழ்ந்து செல்வது அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

விலங்குகள்
குழந்தை தவறி விழுந்த பகுதி மிகவும் ஆபத்தான இடமாம். சுற்றுலாத்தளம் என்றாலும், ராஜமலை பகுதியில், வன விலங்குகள் நிறைய நடமாட்டம் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வனவிலங்குகளை வேட்டையாட பலர் திருட்டுத்தனமாக இந்த பகுதிக்கு வந்து செல்கிறார்களாம். அதனால்தான் சிசிடிவி காமிரா இங்கு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கேமிராவில்தான் குழந்தை தவழ்ந்து செல்வதை வனத்துறை ஊழியர் கவனித்துள்ளனர்.

காயம்
ஏதோ ஊர்ந்து, தவழ்ந்து போகிறதே என்று பார்த்ததில், அது குழந்தை கோகிலா என்று பின்னர்தான் தெரியவந்தது. இதையடுத்து, உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, குழந்தையும் மீட்கப்பட்டது. கோகிலாவுக்கு கை கால்களில் காயம் ஏற்பட்டிருந்ததால், உடனே பக்கத்தில் இருந்த ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சையும் தரப்பட்டுள்ளது.

புகார்
இதனிடையே, சதீஷூக்கும், அவரது மனைவிக்கும் 50 கிமீ தூரத்தில் உள்ள தங்களது வீட்டுக்கு வந்து சேர்ந்த பிறகுதான் குழந்தையை காணவில்லை என்பதே தெரிந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் வெல்லத்தூவல் போலீசில் புகார் தந்தனர்.

பதற வைக்கும் காட்சி
இந்த சமயத்தில், ராஜமலாவில் குழந்தை கண்டெடுக்கப்பட்ட விஷயம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, குழந்தை கோகிலா மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாள். ஆனால் மிருகங்கள் நிறைந்த நடுக்காட்டில், நள்ளிரவில்.. குழந்தை கோகிலா தவழ்ந்து செல்லும் வீடியோ காட்சி காண்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications