Kerala: ஒரே வருடத்தில் 2 பம்பர் லாட்டரி.. அதிர்ஷ்டம்னா இதுதான்.. பாலக்காடு ஏஜென்சிக்கு யோகத்தை பாருங்க

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று பூஜா பம்பர் லாட்டரி குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் முதல் பரிசு ரூ.12 கோடி பாலக்காடுக்கு அடித்துள்ளது. பாலக்காடில் உள்ள கிங் ஸ்டார் ஏஜென்சியில் இந்த பரிசு அடித்து இருக்கிறது. ஏற்கனவே இந்த ஏஜென்சியில் தான் சம்மர் பம்பர் லாட்டரிக்கான முதல் பரிசு ரூ. 10 கோடி விழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஏஜென்சி உரிமையாளர் கூறியதையும் இங்கு பார்க்கலாம்.

தமிழகத்தில் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகளை அரசே விற்பனை செய்து வருகிறது. தினம் தோறும் ஒரு கோடி ரூபாய்க்கான குலுக்கல் நடைபெறுகிறது. இந்த டிக்கெட்டின் விலை ஐம்பது ரூபாயாகும். இதுபோல் வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரிகளும் விற்பனை செய்யப்படுகிறது.

kerala-pooja-and-summer-bumper-prize-go-to-king-star-lottery-agency-in-palakkad

பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள்

கிறிஸ்துமஸ், நியூ இயர் பம்பர், விஷு பம்பர், சம்மர் பம்பர், மான்சூன் பம்பர், ஓணம் பம்பர், பூஜா பம்பர் என வருடத்திற்கு 6 பம்பர் லாட்டரிகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பம்பர் லாட்டரிகளுக்கு முதல் பரிசாக பல கோடி ரூபாய் கிடைக்கும் என்பதால் இந்த லாட்டரி டிக்கெட்டுகளை கேரள லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் வாங்குவதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில் பூஜா பம்பர் லாட்டரி விற்பனை கடந்த செப்டம்பரில் தொடங்கியது. கடந்த இரு மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த பம்பர் டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று நடைபெற்றது. ரூ.300 விலை கொண்ட இந்த டிக்கெட்டிற்கு ரூ.12 கோடி முதல் பரிசு ஆகும்.

பாலக்காடுக்கு அடித்தது யோகம்

முதல் பரிசு ... என்ற எண்ணிற்கு அடித்துள்ளது. இந்த டிக்கெட் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கிங்ஸ் ஸ்டார் லாட்டரி ஏஜென்சியில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் ஆகும். இதே லாட்டரி ஏஜென்சியில் கடந்த சம்மர் பம்பர் லாட்டரியிலும் முதல் பரிசு ரூ.10 கோடி SG 513715 என்ற எண்ணுக்கு அடித்து இருந்தது. ஒரே ஆண்டில் இரண்டு பம்பர் லாட்டரிகளில் தங்கள் ஏஜென்சியில் விற்ற டிக்கெட்டுகளுக்கு பரிசு அடித்ததால், கிங் ஸ்டார் ஏஜென்சி உரிமையாளர் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்.

ஏஜென்சி உரிமையாளர் பேட்டி

இது தொடர்பாக அவர் கூறுகையில், "கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பாக ஒரு சில்லறை லாட்டரி வியாபாரி இந்த டிக்கெட்டுகளை வாங்கி சென்றார். பரிசு வென்றவர் உள்ளூர் நபராக இருக்க வாய்ப்பு உள்ளது. அடுத்தடுத்து தனது கடையில் விற்ற பம்பர் லாட்டரியில் பரிசு விழுந்து இருப்பது மகிழ்ச்சியை தருகிறது" என்றார்.

கடந்த ஏப்ரல் மாதம் பம்பர் லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசாக ரூ.10 கோடி SG 513715 என்ற எண்ணிற்கு விழுந்தது. இந்த டிக்கெட்டும் கிங் ஸ்டார் லாட்டரி ஏஜென்சியில் தான் விற்பனை செய்யப்பட்டது என்று லாட்டரி ஏஜெண்ட் கூறியுள்ளார். கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில்தான் சமீப காலமாக டிக்கெட் விற்பனை அதிகம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் எல்லையோர மாவட்டம்

பாலக்காடு மாவட்டம் என்பது தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டமாகும். இதனால், கேரளாவிற்கு பல்வேறு காரணங்களுக்காக செல்லும் தமிழகத்தை சேர்ந்த சிலரும் லாட்டரி வாங்குவதை பார்க்க முடிகிறது. இதனால், கேரளாவில் லாட்டரி விற்பனையில் எப்போதும் பாலக்காடு மாவட்டமே முதலிடத்தில் உள்ளது.

இதனால், பிற பகுதிகளை விட அங்கு விற்பனை செய்யப்படும் லாட்டரிகளில் அதிகம் பரிசு கிடைப்பதை தரவுகள் காட்டுவதாக கேரள லாட்டரி வியாபாரிகள் கூறுவதை பார்க்க முடிகிறது. கேரள லாட்டரிகளில் பரிசு விழும் தொகையில் சுமார் 12 சதவீதம் தொகை ஏஜெண்ட் கமிஷனாக பிடித்தம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+