Bumper Lottery: கேரள பூஜா பம்பர்.. ரூ.12 கோடிக்கு குலுக்கல் எப்போது? கடந்த ஆண்டுகளில் அடித்த லக்கி நம்பர்கள் இதுதான்
திருவனந்தபுரம்: கேரளாவில் தற்போது ரூ.12 கோடி முதல் பரிசு கொண்ட பூஜா பம்பர் லாட்டரி (Bumper lottery) விற்பனை நடந்து வருகிறது. இதன் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.300 ஆகும். பூஜா பம்பர் லாட்டரி குலுக்கலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் விற்பனை மந்தமாக நடைபெறுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் எந்தெந்த ஊர்களுக்கு முதல் பரிசு அடித்துள்ளது என்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.
கேரளாவில் லாட்டரிகள் ரொம்பவே பிரபலமான ஒன்றாக உள்ளது. அங்கு தினம் தோறும் ரூ.1 கோடிக்கான லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெறுகிறது. அது போக வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரி டிக்கெட்டின் குலுக்கலும் நடைபெறும்.

பூஜா பம்பர் லாட்டரி
பம்பர் லாட்டரிகளுக்கு முதல் பரிசாக பல கோடி ரூபாய் கிடைக்கும் என்பதால் கேரள லாட்டரி பிரியர்கள் இந்த டிக்கெட்டுகளை ஆர்வத்துடன் வாங்குகிறார்கள். லாட்டரியால் தலைவிதி மாறிவிடாதா? ஒரே நாளில் பல கோடிகளுக்கு அதிபதியாகிவிட மாட்டோமா என்ற ஆசையில் லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் வாங்குகிறார்கள். கேரளாவில் தற்போது பூஜா பம்பர் லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது.
ரூ.12 கோடி யாருக்கு?
இந்த லாட்டரிக்கு முதல் பரிசாக ரூ. 12 கோடி அளிக்கப்படுகிறது. ரூ.300 விலை கொண்ட இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. அன்றைய தினம் இந்த டிக்கெட்டில் முதல் பரிசு அடிக்க போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்று தெரிந்துவிடும் என்பதால் கேரள லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
கேரளாவில் லாட்டரிகள் அதிகமாக பாலக்காடு மாவட்டத்தில்தான் விற்பனையாகி வருகிறது. இதனால், பாலக்காடில் வாங்கினால் பரிசு அடிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்ற பேச்சு லாட்டரி பிரியர்கள் மத்தியில் இருப்பதை பார்க்க முடிகிறது. பூஜா பம்பர் லாட்டரியில் கடந்த சில ஆண்டுகளில் பரிசு அடித்த எண்கள் மற்றும் பரிசு விழுந்த ஊர்கள் எது என்பதை பார்க்கலாம்.
கடந்த ஆண்டுகளில் முதல் பரிசு எண்கள்:
2024 - JC 325526 - காயம்குளம்
2023 - JC 253199 - காசர்கோடு
2022 - JC 110398 - குருவாயூர்
2021- RA 591801 - திருவனந்தபுரம்
2020 - NA 399409 - திருவனந்தபுரம்
2019 - RI 332952 - கோட்டயம்
2018 - VA 489017 - கோட்டயம்
2017 - RA 657205 - திருச்சூர்
2016 - TH 211619 - பாலக்காடு
2015 - NA 766093 - பாலக்காடு
2014 - PA 203798 - பாலக்காடு
டிக்கெட் விற்பனை மந்தம்
லாட்டரிகளை பொறுத்தவரை இந்த மாவட்டத்தில்தான் பரிசு அடிக்கும் என்பதை ஒருபோதும் கணிக்க முடியாது என்பதே உண்மை. இது வெறும் கடந்த கால தரவுகள் மட்டுமே என்பதையும் லாட்டரி பிரியர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த ஆண்டு பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட் எதிர்பார்த்தை விட விற்பனை சற்று மந்தமாக இருப்பதாக லாட்டரி வியாபாரிகள் கூறியதை பார்க்க முடிகிறது.
பரிசு விவரங்கள்
பூஜா பம்பரில் முதல் பரிசாக ரூ. 12 கோடி தவிர மேலும் பல பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, இரண்டாவது பரிசாக 5 டிக்கெட்டுகளுக்கு ரூ.1 கோடி அளிக்கப்படுகிறது. மூன்றாவது பரிசாக 10 டிக்கெட்டுகளுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. 4-வது பரிசாக ரூ.3 லட்சம், 5 டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
5-வது பரிசாக ரூ.2 லட்சம் 5 டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படுகிறது. ஆறுதல் பரிசாக ரூ.1 லட்சம் 4 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படுகிறது. அதாவது முதல் பரிசு விழுந்த அதே எண் ஆனால் சீரியல் நம்பர் மட்டும் மாறிய டிக்கெட்டுகளுக்கு ஆறுதல் பரிசாக ரூ.1 லட்சம் அளிக்கப்படும்.
Disclaimer: லாட்டரி போன்ற செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த செய்தி தரப்படவில்லை. வாசகர்கள் தங்கள் தலைவிதியை லாட்டரிதான் மாற்றும் என ஒருபோதும் நம்பியிருக்கக்கூடாது. லாட்டரி தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.












Click it and Unblock the Notifications