இந்தியாவில் நுழைந்த மங்கி பாக்ஸ்! கேரளாவில் ஒருவருக்கு பாதிப்பு உறுதி! அறிகுறி என்ன? எப்படி பரவும்
திருவனந்தபுரம்: வெளிநாட்டில் இருந்து கேரளா திரும்பிய நபருக்கு மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
Recommended Video
இரண்டு ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர், கொரோனா பாதிப்பு இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. வேக்சின் காரணமாகத் தீவிர பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் இப்போது தான் குறைந்துள்ளது.
ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை உலக நாடுகள் மெல்ல நீக்கி வருகிறது. பொதுமக்களும் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.

மங்கி பாக்ஸ்
இந்தச் சூழலில் மங்கி பாக்ஸ் என்ற நோய்ப் பாதிப்பு பரவுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மங்கி பாக்ஸ் புதுவித நோய் இல்லை. ஆப்பிரிக்காவில் இந்த வகை நோய் காணப்படும் என்றாலும் கூட ஆப்பிரிக்காவுக்கு வெளியே இந்த வைரஸ் இந்தளவுக்குப் பரவுவது இதுவே முதல்முறையாகும். இதற்கான காரணத்தை ஆய்வாளர்களால் இதுவரை கண்டறிய முடியவில்லை.

கேரளா
இந்தியாவில் இதுவரை மங்கி பாக்ஸ் பாதிப்பு பரவாமலேயே இருந்தது. ஆனால், இன்று காலை கேரள விமான நிலையத்தில் ஒருவருக்கு மங்கி பாக்ஸ் ஒத்த பாதிப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து கேரளா திரும்பிய ஒருவருக்கு மங்கி பாக்ஸ் பாதிப்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவதாகக் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்து இருந்தார்

மங்கி பாக்ஸ் உறுதி
அந்த நபரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சோதனை முடிவுகள் இன்று மாலை வெளியானது. அதில் அந்த நபருக்கு மங்கி பாக்ஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த நபர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கேரளா திரும்பி உள்ளார். முன்னதாக மங்கி பாக்ஸ் ஒத்த அறிகுறிகள் இருந்த நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

நெருங்கிய தொடர்பு
அந்த நபரின் பெயர், வயது உள்ளிட்ட இதர தகவல்கள் வெளியிடப்படவில்லை. அதேநேரம் அவர் வெளிநாட்டில் மங்கி பாக்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தான் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் அந்த நபரின் குடும்பத்தினரும் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார். இது கொரோனாவை போல இல்லாமல் நெருங்கிய தொடர்பு உள்ளவர்களுக்கு மட்டுமே பரவும் என்பதால் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எப்படிப் பரவும்
ஆர்த்தோபாக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரசால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே மங்கி பாக்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து வெளியேறும் நீர்த்துளிகள் வழியாகவே இந்த நோய் பரவுகிறது. இப்போது கண்டறியப்படும் பல வழக்குகள் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கே பெரும்பாலும் ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும், இந்த பாதிப்பு யாருக்கும் வேண்டுமானாலும் வரலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

அறிகுறி என்ன
காய்ச்சல், தசைவலி, கொப்பளங்கள், சளி ஆகியவை இந்த மங்கி பாக்ஸின் பொதுவான அறிகுறிகளாகும். இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 3 முதல் 6 சதவீதம் பேர் உயிரிழக்கும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், பெரும்பாலான மக்கள் 3 முதல் 4 வாரங்களில் குணமடைந்துவிடுவார்கள். தற்போது வரை மங்கி பாக்ஸ் பாதிப்பிற்குக் குறிப்பிட்ட சிகிச்சை முறை எதுவும் இல்லை. நோயாளிகள் தனிமைப்படுத்தும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டி இருக்கும்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications