கேரளாவில் பள்ளி ஆண்டு விடுமுறையை ஜூன், ஜூலைக்கு மாற்ற திட்டம்.. பொதுமக்களிடம் கருத்து கேட்பு
திருவனந்தபுரம்: மழைப் பொழிவு அதிகமாக இருக்கும் மாநிலமான கேரள மாநிலத்தில், பள்ளிக்கான கோடை விடுமுறையை ஏப்ரல் மே மாதத்தில் இருந்து மாற்றி, மழைக் காலமான ஜூன், ஜூலைக்கு வழங்குவது குறித்து அரசு திட்டமிட்டு வருகிறது. இத்திட்டம் தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகளையும், பரிந்துரைகளையும் தெரிவிக்கலாம் என்று அம்மாநிலத்தின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறை
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை விடப்படுவது வழக்கம். மழைக் காலங்களில் அந்தந்த மாவட்டங்களால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தில் அதிக மழைப் பொழிவு எப்போதும் இருக்கும். இதனால், கேரளத்தில் மழைக் காலங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்ற பல்வேறு இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன.

மழைக்கால விடுமுறை
இதனால், கேரள மாநிலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மழைக்கால உள்ளூர் விடுமுறைகள் அதிகமாக விடப்படும் சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில், கோடைக் காலமான ஏப்ரல், மே மாதங்களுக்கு பதிலாக மழைக் காலங்களில் ஜூன், ஜூலை மாதங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து கேரள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வி.சிவன் குட்டி சமூக வலைத்தளங்கள் மூலம் பொதுமக்களிடம் கருத்து கேட்டுள்ளார்.
ஜூன், ஜூலையில் பலத்த மழை
இதுகுறித்து, சிவன் குட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கேரள மாநிலத்தில் ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது. இந்த மாதங்களில் மாநிலத்தில் கடும் வெப்பம் இருக்கும் என்பதால் குழந்தைகளுக்கு சிரமம் ஏற்படுகிறது உண்மைதான். அதேசமயம், மழைக் காலமான ஜூன், ஜூலை மாதங்களில் பெய்யும் பலத்த மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டி நிலை உள்ளது.
தடைபடும் படிப்பு
இதனால், மாணவர்களின் படிப்பு தடைபடுகிறது. எனவே, பள்ளி விடுமுறையை ஏப்ரல், மே மாதங்களுக்கு பதிலாக மழைக்காலமான ஜூன், ஜூலை மாதங்களில் மாற்றுவது குறித்து பொது விவாதத்தை தொடங்கிவைக்கிறேன். கோடை காலமும், மழைக் காலமும் சேர்த்து மே, ஜூன் மாதங்களில் விடுமுறை விடுவது குறித்த யோசனையும் உள்ளது. பொதுமக்கள் தங்களது கருத்துகளை, பரிந்துரைகளை தெரிவிக்கலாம்.
கருத்து தெரிவிக்கலாம்
விடுமுறை குறித்து பொதுமக்கள் உங்களுடைய கருத்துகளையும், வழிகாட்டுதலையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் என்ன நன்மைகள், தீமைகள் உள்ளன. குழந்தைகளின் படிப்பையும் ஆரோக்கியத்தையும் இது பாதிக்குமா? ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் இது நடைமுறையில் சாத்தியப்படுமா.
பிற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் உள்ள விடுமுறை காலங்களில் இருந்து வித்தியாசமாக நாம் எப்படி முன்மாதிரியாக மாறலாம் என்பது போன்ற உங்கள் வழிகாட்டுதல்கள் மற்றும் கருத்துக்களை பதிவிடுங்கள். ஆக்கப்பூர்வமான விவாதத்தை தொடங்க இது உதவியாக இருக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications