அடிச்சுபுடுவேன்! முதலில் சாப்பிடுங்க.. அப்புறம் வேலை செய்யலாம்.. டீச்சரை க்யூட்டாக மிரட்டும் குழந்தை
திருவனந்தபுரம்: கேரளாவில் தனது ஆசிரியர் மீது அன்பு செலுத்தும் குழந்தையின் வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
Recommended Video
குழந்தைகளின் அன்பு எப்போதும் கள்ள கபடம் இல்லாதது. அவர்கள் செலுத்தும் அன்புக்கு ஈடு இணையே இல்லை.
பல நேரங்களில் பெரியவர்கள் செய்யும் தவறுகளையும் கூட தங்கள் மழலை மொழியில் குழந்தைகள் எவ்வித தயக்கமும் இல்லாமல் சுட்டி காட்டிவிடுவார்கள்.

கேரளா
கேரளாவில் அப்படி பிரிகேஜி படிக்கும் குழந்தை ஒன்று, தனது ஆசிரியை மீது அன்பு செலுத்தும் வகையில் பேசிய பேச்சு குறித்த வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. கேரள மாநிலம் கொல்லம் நகரை அடுத்துள்ள புனலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார்ப் பள்ளி ஒன்றில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

பள்ளி
நேற்றைய தினம் குழந்தையின் பாசமான மிரட்டலை வகுப்பு ஆசிரியர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். பொதுவாகப் பள்ளிகளில் மதிய வேளையில் குழந்தைகள் முறையாகச் சாப்பிடுகிறார்களா என்பது கவனிப்பது தான் வகுப்பு ஆசிரியர்களின் முக்கிய வேலை. குழந்தைகள் அனைவரும் சாப்பிட்டு முடித்த பின்னரே, வகுப்பு ஆசிரியர்களுக்குச் சாப்பிடுவார்கள்.

குழந்தை
இப்படிப்பட்ட சூழலில் கொல்லம், புனலூரில் உள்ள பள்ளி ஒன்றில் pre-kg படிக்கும் குழந்தைகள் மதிய உணவு இடைவெளி சமயத்தில் முறையாகச் சாப்பிடுகிறார்களா என்பதை அதன் வகுப்பு ஆசிரியரை கவனித்துக் கொண்டு இருந்தார். அப்படியே தனக்கு இருந்து அலுவல் ரீதியான பணிகளையும் எழுதிக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்துத் தான் ஒரு குழந்தை டென்ஷன் ஆகிவிட்டது.

க்யூட் மிரட்டல்
தாங்கள் எல்லாம் சாப்பிடும்போது, ஆசிரியர் மட்டும் சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்து டென்ஷன் ஆகிவிட்டது அந்த குழந்தை! ஆசிரியர் அருகே வந்து, "முதலில் சாப்பிடு.. அப்புறம் எழுது" என க்யூட்டாக சொல்கிறான் அந்த குழந்தை. அதற்கு ஆசிரியர் "முதலில் நீங்க சாப்பிடுங்க" என்று ஏதேதோ சொல்லிச் சமாதானப்படுத்த முயல்கிறது. இருப்பினும், அசைந்து கொடுக்காத அந்த குழந்தை, "சாப்பிடு.. இல்லை அடிச்சுருவேன்!" என க்யூட்டாக என மிரட்டுகிறான்..

நெட்டிசன்கள்
குழந்தையின் இந்தச் செயலால் நெகிழ்ந்துபோன ஆசிரியை அந்த சிறுவனின் அன்பான மிரட்டல் வீடியோவை வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. கள்ளம் கபடம் இல்லாத குழந்தையின் க்யூட்டான மிரட்டலுக்கு ஹார்டுகளை அள்ளிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்!












Click it and Unblock the Notifications