கேரளாவில் இன்று லாட்டரி குலுக்கல் இல்லை.. ஷாக் ஆகிப்போன சேட்டன்கள்.. அடுத்து எப்போது நடக்கும்?
திருவனந்தபுரம்: கேரளா உள்பட 13 மாநிலங்களுக்கு இன்று லோக்சபா தேர்தல் நடைபெற்றது. இதன் காரணமாக கேரளாவில் இன்று லாட்டரி குலுக்கல் நடைபெறவில்லை. தினமும் பிற்பகல் 3 மணிக்கு லாட்டரி குலுக்கல் நடைபெறும் என்பதால், இன்று குலுக்கலை எதிர்பார்த்து காத்திருந்த சேட்டன்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்தியாவில் கேரளா, நாகாலாந்து, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. கேரளாவை பொறுத்தவரை மாநில அரசே லாட்டரி விற்பனையை ஏற்று நடத்தி வருகிறது. கேரளாவில் கிறிஸ்துமஸ் நியூ - இயர் பம்பர், சம்மர் பம்பர், விஷூ பம்பர், ஓணம் பம்பர், மழைக்கால பம்பர் என வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது.

அதுபோக, தினமும் அங்கு லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். பம்பர் பரிசு டிக்கெட்டுகள் போக தினமும் கேரளாவில் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெறும். இதில் புதன்கிழமை விற்பனை செய்யப்படும் ஃபிப்டி ஃபிப்டி டிக்கெட்டிற்கு மட்டுமே ரூ.1 கோடி பரிசுத்தொகையாகும். இதர டிக்கெட்டுகளுக்கு ரூ.75 லட்சம் முதல் பரிசாக கிடைக்கும்.
அதாவது, வின் வின், ஸ்ரீசக்தி, பிஃப்டி- பிஃப்டி, காருண்யா பிளஸ், நிர்மல், காருண்யா, அக்ஷயா என வாரத்திற்கு 7 நாட்களும் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த லாட்டரி டிக்கெட்டுகளின் குலுக்கல் தினமும் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி தலைமை அலுவலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்று வருகிறது. உடனடியாக பரிசுத்தொகை விழுந்துள்ள டிக்கெட் எண்ணும் அறிவிக்கப்படும்.
இதனால், கேரளாவில் லாட்டரியை வாங்கியவர்கள் தங்களுக்கும் அதிர்ஷ்டம் அடிக்குமா? என பிற்பகல் 3 மணி ஆனதுமே லாட்டரி ரிசல்ட்டை பார்க்க ஓடுவார்கள்... இந்த நிலையில், இன்றைய நிர்மல் லாட்டரிக்கான குலுக்கல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று லோக்சபா தேர்தல் நடைபெற்றதால், லாட்டரி குலுக்கல் நடத்தப்படவில்லை என்றும் நாளை நடைபெறும் என்று கேரள லாட்டரி துறை தெரிவித்துள்ளது.
இதனால், இன்று லாட்டரி குலுக்கல் நடைபெறும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சேட்டன்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். இன்று குலுக்கல் நடைபெற இருந்த நிர்மல் லாட்டரி டிக்கெட்டின் முதல் பரிசு ரூ.70 லட்சம் ஆகும். இரண்டாவது பரிசாக ரூ.10 லட்சமும் மூன்றாவது பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்படும். நாளை பிற்பகல் 2 மணிக்கு நிர்மல் லாட்டரிக்கான குலுக்கல் நடைபெறும் என்று கேரள லாட்டரித்துறை தெரிவித்துள்ளது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications