'ஒரு தலைப்பட்சமான முடிவு'.. தமிழக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.. கேரளா கடும் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தமிழகத்தில் வெளிமாநில ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கேரளா, தமிழகம் எடுத்துள்ளது ஒரு தலைப்பட்சமான முடிவு என்று விமர்சித்துள்ளது. கேரள வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்தால் தமிழகத்தில் இருந்து கேரளா வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் அமைச்சர் கணேஷ் குமார் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் தினமும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு வழித்தடங்களில் ஆயிரக்கணக்கான தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகிறது. மிக அதிபட்சமான ஆம்னி பேருந்துகள்,சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி உள்பட தென் மாவட்டங்களுக்கும், கோவை, திருப்பூர் உள்பட மேற்கு மாவட்டங்களுக்கும் அதிக அளவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

omni bus Kerala

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் பலரும் இந்த ஆம்னி பஸ்களையே அதிகம் வரும்புகிறார்கள். பண்டிகை நாட்கள், வார இறுதிநாட்களில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் மிக அதிகமாக இருக்கும். சென்னையில் இருந்து வெளியூர் மற்றும் வெளிமாநிலம் செல்லும் ஆம்னி பேருந்துகள் பாண்டிச்சேரி, நாகலாந்து (NL) உள்ளிட்ட பதிவெண்களுடன் அதிக அளவில் இயக்கப்படுகின்றன.

இப்படி வெளிமாநில பதிவெண் கொண்ட 652 ஆம்னி பேருந்துகளால் ஆண்டொன்றுக்கு தமிழக அரசுக்கு ரூ.28.16 கோடி இழப்பு ஏற்படுகிறது என்றும் வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை தமிழக பதிவு எண்ணாக மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வந்தது.

இதற்கான அவகாசத்தை ஆம்னி பேருந்து சங்கத்தினர் நீட்டிப்பு செய்ய வலியுறுத்தியதால், அவ்வப்போது அவகாசத்தை அரசு நீட்டித்து வந்தது. ஆனால், குறிப்பிட்ட தமிழ்நாடு பதிவெண் இல்லாமல், தமிழ்நாட்டின் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள ஆம்னி பேருந்துகள் மாநிலத்தில் இயங்க அனுமதி கிடையாது என போக்குவரத்து துறை அண்மையில் அறிவித்தது.

இதனால், தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வெளி மாநில பதிவெண்ணுடன் இயங்கி வரும் 547 பேருந்துகள் இயங்கவில்லை. மீறி இயங்கும் பேருந்துகள் மீது அபராதம், பேருந்து பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஆர்டிஓக்கள் எடுத்து வருகிறார்கள்.


இது தொடர்பாக கூறிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அகில இந்திய சுற்றுலா அனுமதியுடன் தமிழ்நாடு அல்லாத வெளிமாநில பதிவு பெற்ற ஆம்னி பஸ்கள் விதிமுறைகளை மீறி தமிழகத்தில் இயக்கப்படுவதால், ஒரு பஸ்சுக்கு ஆண்டுக்கு 4.32 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

அதேபோல் விதிமுறைகளை மீறும் ஆம்னி பஸ்கள் தடுத்து நிறுத்தப்படுகிறது. இதற்காக தமிழகத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிற்கு ஓடும் பேருந்துகள் மட்டுமின்றி மாநிலம் விட்டு மாநிலங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கும் தடுத்து நிறுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது..

இயக்குபவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவிலில் தமிழ்நாடு மோட்டார் வாகனத் துறையினரால் கேரள பதிவெண் கொண்ட ஆம்னி பஸ் நிறுத்தப்பட்டு, பயணிகள் தொடர்ந்து பயணிக்க அனுமதி மறுக்கப்படிருக்கிறது. இந்த சம்பவம் கேரள மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக கேரள போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் கூறுகையில், "தமிழ்நாடு எடுத்துள்ளது ஒரு தலைப்பட்சமான முடிவு. எந்த அறிவிப்பும் இல்லாமல் இருக்கைக்கு ரூ.4 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற விஷயங்களைப் பற்றி விவாதிக்க மாநிலங்களுக்கு இடையேயான வழிமுறை இருக்க வேண்டும்.

ஆனால் தமிழ்நாடு, கேரளாவுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கவில்லை. தமிழகத்தில் ஆம்னி பஸ்களில் வரி வசூலிக்க தொடங்கிய பிறகு தான் எங்களுக்கு தெரிய வந்தது. கேரளாவில் இருந்து சென்ற அந்த வாகனங்கள் ஏற்கனவே அகில இந்திய அளவில் அனுமதி பெற்று உள்ளன. அந்த வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்தால், தமிழகத்தில் இருந்து கேரளா வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்" இவ்வாறு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+