கேரள சம்மர் பம்பர் லாட்டரி! ரூ.10 கோடி வென்ற அதிர்ஷ்ட டிக்கெட் இதுதான்.. யார் அந்த லக்கி மேன்?
திருவனந்தபுரம்: கேரள சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று நடைபெற்றது.. இன்று 2 மணியளவில் நடைபெற்ற லாட்டரி டிக்கெட் குலுக்கலில் முதல் பரிசு SG 513715 என்ற அதிர்ஷ்ட எண்ணிற்கு அடித்துள்ளது. முதல் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி யாராக இருக்கும் என்ற ஆர்வம் கேரள லாட்டரி பிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் லாட்டரி பிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த சம்மர் பம்பர் லாட்டரி 2025 டிக்கெட்டின் குலுக்கல் இன்று நடைபெற்றது. கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் கேரள சம்மர் பம்பர் பிஆர் 102 அறிமுகம் செய்யப்பட்டது. சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.10 கோடி கிடைக்கும். டிக்கெட் ஒன்றின் விலை ரூ.250 ஆகும்.

பரிசுகளின் விவரம்
கிட்டதட்ட 2 மாதங்களாக விறுவிவிறுப்பாக இந்த லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யபட்டன. மொத்தம் 54 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்ட நிலையில், பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக லாட்டரி விற்பனையாளர்கள் கூறுகிறார்கள். எப்போதும் போல இந்த முறையும் பாலக்காடு பகுதியில் தான் அதிக விற்பனை நடைபெற்று இருக்கிறது.
சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கு இரண்டாவது பரிசாக ரூ.50 லட்சம் அளிக்கப்பபடும். மூன்றாவது பரிசாக ரூ.5 லட்சம் கிடைக்கும். நான்காவது பரிசு அடிக்கும் லாட்டரி டிக்கெட்டிற்கு ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. 5 வது பரிசு வெல்லும் அதிர்ஷ்ட எண்ணிற்கு ரூ.5 ஆயிரம் கிடைகும். 6-வது பரிசாக ரூ.2 அயிரமும், 7-அது பரிசாக ரூ.1000ம், 8-வது பரிசாக ரூ.500- வழங்கப்படுகிறது. ஆறுதல் பரிசாக ரூ.1 லட்சம் அளிக்கப்படுகிறது. ஆறுதல் பரிசை பொறுத்தவரை அதிர்ஷ்ட எண் இருந்தும் சீரியல் எண் மட்டும் மாறியிருந்தால் கொடுக்கப்படும்.
குலுக்கல் நேரம்
திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு குலுக்கல் நடைபெற்றது. இதில் SG 513715 என்ற எண்ணுக்கு முதல் பரிசாக ரூ.10 கோடி அடித்துள்ளது. இரண்டாவது பரிசு SB 265947 என்ற எண்ணுக்கு அடித்துள்ளது.
தமிழகம் உள்பட வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் டூரிஸ்ட்கள் கூட கேரளாவிற்கு விசிட் அடித்தால் லாட்டரி வாங்குவதை பார்க்க முடிகிறது. இதனால், அவர்களும் தங்களுக்கு முதல் பரிசு அடித்துவிடாதா என்ற ஏக்கத்துடன் டிக்கெட்டுகளை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். கேரள லாட்டரிகளை தடை செய்யப்பட்ட மாநிலங்களில் விற்பனை செய்வது சட்ட விரோதம் என்பதோடு, பரிசுத்தொகை அடித்தாலும் கிடைக்காது என்பது கவனிக்கத்தக்கது.
பரிசு அடித்த எண்கள் விவரம்: பரிசு அடித்த எண்கள் விவரம்:
முதல் பரிசு ரூ. 10 கோடி: SG 513715,
இரண்டாவது பரிசு ரூ.50 லட்சம்: SB 265947,
மூன்றாவது பரிசு ரூ.5 லட்சம்,
SA 248000,
SA 454047
SB 259920,
SB 193892
SC 108983,
SC 313223
SD 116046,
SD 195155
SE 212162,
SE 385349
SG160741
SG 347830
கேரள லாட்டரி பரிசுத்தொகை எண்களை கேரள லாட்டரி துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உறுதி செய்து கொள்ளவும்.
கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர்
கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்ற கிறிஸ்துமஸ் பம்பர் டிக்கெட்டிற்கான குலுக்கலில் முதல் பரிசு XD 387132- என்ற எண்ணிக்கு அடித்தது. முதல் பரிசாக ரூ.20 கோடி அளிக்கப்பட்டது. கண்ணூர் பகுதியை சேர்ந்த சத்யன் என்பவருக்கு முதல் பரிசு அடித்தது. அதேபோல, பூஜா பம்பரில் முதல் பரிசாக ரூ.12 கோடி கொல்லம் கேஎஸ் ஆர்டிசி பேருந்து நிலையம் அருகே உள்ள லாட்டரி கடையில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டிற்கு கிடைத்தது.கருணாகப்பள்ளியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவருக்கு முதல் பரிசு அடித்தது.
லாட்டரிகள் பிரபலம்
கேரளாவை பொறுத்தவரை அங்கு லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை மூலம் கணிசமான வருவாய் அரசுக்கு கிடைத்து வருகிறது. கேரள அரசே லாட்டரி டிக்கெட்டுகளை அச்சிட்டு விற்பனை செய்கிறது. திரும்பிய பக்கம் எல்லாம் லாட்டரி கடைகள் தென்படும் அளவிற்கு அங்கு மக்களிடையே லாட்டரிகள் மிகவும் பிரபலம்.
யாரோ ஒருவருக்கு அடிக்கும் அதிர்ஷ்டத்திற்கு பல லட்சம் பேரது பணம் வீணாக போகும் என்பதோடு, லாட்டரிகளுக்கு அடிமையாகி அதை மீண்டும் மீண்டும் வாங்கி பொருளாதார இழப்பை ஏழை எளிய மக்கள் சந்தித்ததாலும் தற்கொலைகள் அதிகரித்ததாலும் தமிழகத்தில் இதற்கு 2003 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதேபோல, கர்நடகா, ஆந்திரா உள்பட 15 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் லாட்டரிகளுக்கு தடை விதித்துள்ளது.
-
Kerala lottery: கேரள லாட்டரியில் 30 லட்சம் பரிசு.. மறந்துபோன உரிமையாளர்! கேரள வியாபாரி செய்த காரியம்! என்ன மனுஷன்யா! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications