Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kerala Lottery: 10 கோடி! அடிக்க போகுது யோகம்.. கேரளாவில் அனல் பறக்கும் சம்மர் பம்பர் லாட்டரி! டாப் எங்கே தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் சீசனுக்கு தகுந்தாற்போல் பம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி சீட்டிற்கான குலுக்கல் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட் (Kerala Summer Bumper Lottery) விற்பனை சூடுபிடித்துள்ளது. ரூ.10 முதல் பரிசு என்பதால் பலரும் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி குவித்து வருகிறார்கள்.

கேரளாவில் தற்போது சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசு ரூ.10 கோடியாகும். இரண்டாவது பரிசாக ரூ. 1 கோடியும், மூன்றாவது பரிசாக ரூ.5 லட்சமும் அளிக்கப்படுகிறது.

Kerala Summer Bumper Lottery

கேரள சம்மர் பம்பர் லாட்டரி

ஆறுதல் பரிசு ரூ 1 லட்சம் ஆகும். இந்த டிக்கெட் ஒன்றின் விலை ரூ.250 ஆகும். இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் வரும் 28/03/2026 அன்று நடைபெறுகிறது. மொத்தம் 54 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு உள்ளன. ஆறு சீரியஸ்களில் அதாவது எஸ்.ஏ, எஸ்பி, எஸ்சி, எஸ்டி, எஸ்இ, எஸ்ஜி, ஆகிய சீரியஸ்களில் டிக்கெட்டுகள் அச்சிடப்பட உள்ளன.

இதில் மூன்றாவது பரிசாக ரூ.5 லட்சம் 12 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படுகிறது. டிக்கெட்டிற்கான விற்பனை கடந்த மாதம் தொடங்கிய நிலையில் தற்போது விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரியில் பரிசுத்தொகையை இருவர் உரிமை கோருவதால், வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

சூடுபிடிக்கும் லாட்டரி விற்பனை

பரிசுத்தொகை வழங்குவதை கேரள உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இந்த சூழலில் தற்போது சம்மர் பம்பர் லாட்டரி விற்பனையும் அனல் பறந்து வருகிறது. குலுக்கலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ளதால் கேரள சேட்டன்கள் ஆர்வமாக டிக்கெட் வாங்கி வருகிறார்கள். வெளி மாநில லாட்டரி பிரியர்களும் ஆர்வமுடன் டிக்கெட்டுகளை வாங்கி வருகிறார்கள்.

தற்போது சம்மர் பம்பர் லாட்டரி விற்பனை தொடங்கியிருக்கும் நிலையில் விற்பனை களை கட்டியுள்ளது. குலுக்கலுக்கு இன்னும் சற்றேறக்குறைய ஒரு மாதமே உள்ள நிலையில், லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை வாங்கி செல்கிறார்கள். வழக்கம் போல பாலக்காட்டில்தான் டிக்கெட் விற்பனை டாப் கியரில் செல்வதாக லாட்டரி விற்பனையாளர்கள் கூறினர்.

கடந்த ஆண்டு யாருக்கு அடித்தது?

திருச்சூர், திருவனந்தபுரம், கோட்டயம் ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் விற்பனையில் வரும் என்று லாட்டரி வியாபாரிகள் கூறினர். கிறிஸ்துமஸ் லாட்டரியில்தான் மிஸ் ஆகிவிட்டது.. சம்மர் பம்பரில் பரிசு விழும் என்ற நம்பிக்கையில் கேரள சேட்டன்கள் கடை கடையாய் ஏறி இறங்கி டிக்கெட் நம்பரை பார்த்து பார்த்து வாங்கி வருகிறார்களாம்.

கடந்த ஆண்டு சம்மர் பம்பர் டிக்கெட்டில் SG 513715 என்ற எண்ணிற்கு பரிசு அடித்தது. பாலக்காட்டில் உள்ள கிங்ஸ்டார் ஏஜென்சி என்ற கடையில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டிற்கு முதல் பரிசு விழுந்து இருந்தது.

சட்டவிரோதம் ஆகும்

லாட்டரிகளை பொறுத்தவரை தடை செய்யப்பட்ட ஒன்றாகும். எனவே தமிழ்நாட்டில் லாட்டரிகளை விற்பனை செய்வது சட்ட விரோத செயல் ஆகும். கள்ளச்சந்தையில் விற்பனையாகும் டிக்கெட்டுகளுக்கு பரிசுத்தொகையும் கேரள அரசு மறுக்க வாய்ப்புள்ளது.

கேரள லாட்டரி விதிகளின் படி பரிசுத்தொகையை குலுக்கல் நடைபெற்ற ஒரு மாதத்திற்குள் சமர்பித்து பரிசுத்தொகை உரிமை கோர வேண்டும். சில சிறப்பு காரணங்களின் போது 90 நாட்கள் வரை அவகாசம் கோரலாம். அதற்கு மேல் சென்றால் பரிசுத்தொகை உரிமை கோர முடியாது .

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+